144 எண்ணெய் வயல் மாதிரிப் படிமம்
144 எண்ணெய் வயல் மாதிரிப் படிமம் குறைவாக இருந்தால் நீராவியை அதிகம் செலுத்த வேண்டியிருப்பதால் செலவு கூடுகிறது. நீராவியை உற்பத்தி செய்ய நிலக்கரி, சூரிய ஒளி போன்ற பிற ஆற்றல்களைப் பயன்படுத்தும்போது, விற்பனைக்குக் கூடுதலான எண்ணெய் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தினால் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக ஏற்படுகின்றன. ஆனால் காற்று, நீர் இவற்றை உட்செலுத்தி மீட்கும் போது முதலீட்டுச் செலவு மிகுதியாகிறது. காற்று அழுத்தத்தை உருவாக்கும் கருவிகளின் விலை அதிக மாவதால், கூடுதல் முதலீடு வேண்டும். மேலும் இம்முறையில் கருவிகளின் அரிமானம், எண்ணெய் நீர்க்கலவை உண்டாகல், அதிக அளவு எண்ணெய் எடுக்க முடியாமை போன்ற சிக்கல்கள் யால் நீராவியைப் போல இம்முறை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. உள்ளமை பிற நுட்பங்கள். பிற நுட்பங்களில் மிக முக்கிய மானது வேதிப்பொருள்களைப் பயன்படுத்துவதே ஆகும்.உந்து விசை குறைவான எண்ணெய் வயல் களில் எண்ணெயை மீட்க மிக அதிகமான ஆற்றலை உருவாக்க வேண்டும். இதற்காக அதிகமான நீரா வியை உட்செலுத்தி மிகு வெப்பநிலையை ஏற்படுத்தி எண்ணெய் மீட்கும்போது எடுக்கும் எண்ணெயின் விலை சிக்கனமாக அமைவதில்லை. எனவே, விசை குறைந்த எண்ணெய், வயல்களில் வேதிப் பொருள் களைப் இழுவிசையைக் குறைத்து எண்ணெய்த் துளிகளைத் துளையினின்று வெளியே இழுத்து எண்ணெய் குழாயின் வழியே எடுக்கப் படுகிறது. இம்முறை நீர்ம வேதிப் பொருள்களை உட்செலுத்துதல், கரைப்பான்களை உட்செலுத்தி எண்ணெயை நெகிழச்செய்து குழாயை நோக்கி ஓடி வருமாறு செய்தல் என இருவகைப்படும். . பயன்படுத்தி பல்லுறுப்பிப் பாய்மங்கள். பாலிசாக்ரைடு மற்றும் பாலிகிரைம்லாய்டு போன்ற பாலிமர் பல்லுறுப்பிப் பாய்மங்கள் உட்செலுத்தப்பட்டு எண்ணெய் மீட்கப் படுகிறது. இம்முறை ஆய்வுக் கூடத்தில் பெருவெற்றி பெற்றாலும் எண்ணெய் வயல்களில் நடைமுறையில் சிறப்பான பயனை அளிக்கவில்லை. பரவும் தன்மை உடையதால் இவை சிறிது சிறிதாகவே உட செலுத்தப்படுகின்றன. பெரும்பாலும் 5-10% துளை அளவே உட்செலுத்தப்படும் இம்முறையில் செலவு அதிகம். பல்லுறுப்பி விலை உயர்ந்த அளவுக்கு எண்ணெய் விலை உயராததால் இம்முறை நடைமுறைக்குப் பொருந்தாமலேயே இருந்து வந்தது. கரைப்பான்கள். இந்நீர்மங்கள் பாறைகளிலுள்ள துளைகளில் உட்புகுந்து, எண்ணெய்த் துளிகளை வெளியேற்றுகின்றன. முக்கியமான கரைப்பான்கள் தூய்மைப்படுத்தப்படாத எண்ணெய், நீர்ம புரோப் பேன் வளிமம், நீர், கார்பன் டைஆக்சைடு ஆகியன. இவற்றில் கார்பன் டைஆக்சைடு மிகக் குறைந்த செலவில் எண்ணெயை மீட்க உதவுகிறது. உப்புக் கோள எண்ணெய்ப்படிவுகளில் கார்பன் டை ஆக்சைடு முறை நல்ல பயனை அளித்துள்ளது. -இராம.இராமநாதன் எண்ணெய் வயல் மாதிரிப் படிமம் உண்டா நில அமைப்புக்குத் தக்கவாறு இடத்திற்கு இடம் எண்ணெய் வயல்கள் மாறுபட்டிருக்கும். சாதாரண மாக மடிப்புகள், பிளவுகள், உப்புக் கோளங்கள் போன்ற நில அமைப்புகள் உள்ள இடங்களில் எண்ணெய் வயல்கள் காணப்படும். இந்த அமைப்பு களைத் தெளிவாக்கி, எண்ணெய் எந்த இடத்தில் உள்ளது எப்படி எடுக்கலாம் என்ற செய்திகளை ஆய்வு அடிப்படையில் கண்டறியச் செய்யப்படும் மாதிரிகளே படிமங்கள் எனப்படும். எண்ணெய் வயல்கள் கண்டுபிடிப்பில் படிவுப்பாறைகளை அறிதல் முதல் நிலையாகும். படிவுப் பாறைகளில் எண்ணெய் தேங்கி நிற்பதற்கு வசதியான நில அமைப்புகள் என்று ஆய்வு செய்தல் அடுத்ததாகும். அடுத்து ஆய்வுக் குழாய்க் கிணறுகள் அமைத்து எண்ணெய் கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும். பிறகு வணிக அளவில் எண்ணெய் எடுக்க முடியுமா என்று ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் ஆய்வுக்கு நிலவியல் அறிவும், நிலவியலாளரின் துணையும் வேண்டும். பொறியாளர், அரசு அலுவலர் ஆட்சியாளர் போன்றோருக்குப் புவியின் அமைப்பு, எண்ணெய் கிடைக்குமிடம் ஆகிய அறிவியல் செய்தி களை விளக்குவதற்காக மாதிரிப் படிமங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்படிமங்கள் நில அமைப்புப் படிமங்கள், விசை மற்றும் நிலமாற்றப் படிமங்கள் என இருவகைப்படும். முதல்வகைப் படிமங்கள் பாறையின் வகைகளை யும் நில அமைப்பையும் எண்ணெய் கிடைக்கும் இடங்களையும் முப்பரிமாண வடிவில் காட்டுகின்றன. இப்படிமங்கள் எண்ணெய் வளம், எடுக்கும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்யத் துணைபுரிகின்றன. நிலவியல் அறிமுகம் இல்லாதோர்க்கும் நிலவியல் அறிவை ஊட்டி எளிதில் விளங்க வைப்பதற்குப் படிமங்கள் உருவாக்கப்படுகின்றன. ரண்டாம் வகைப் படிமங்கள் எண்ணெய் படுகையில் உள்ள விசை மற்றும் நிலை மாற்றங் களைக்காட்டும் படிமங்களாக உருவாக்கப்படுகின்றன.