146 எண்ணெய் வளிமக் கிணறு சீர் செய்தல்
146 எண்ணெய் வளிமக் கிணறு சீர் செய்தல் காப்புக் குழாய்கள். பாறைகளில் தோண்டப் படும் எண்ணெய்க் கிணறுகள் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழம் செல்வதால் சரிந்து விடுவதற்கான வாய்ப்பு மிகுதி. அவ்வாறு விழாமல் காப்பதற்காகத் தோண்டிய கிணற்றின் உள்ளே செருகப்படும் குழாய் களே காப்புக் குழாய்களாகும். இக்குழாய்கள் ஆங்காங்கே சிமெண்ட் வைத்துப் பொருத்தப்படுவ துண்டு. குழாய்கள் நீளம், பருமன், விட்டம் போன்ற பல்வேறு அளவுகளிலும், மாறுபட்ட இரும்புக் கலவைகளிலும் கிடைக்கின்றன. இவை ஒன்றோ டொன்று பொருத்தப்பட்டு ஆங்காங்கே சிமெண்ட்டி னால் இணைக்கப் பெற்றுத் தரைமட்டத்திலிருந்து எண்ணெய் கிடைக்கும் இடம் வரை செல்கின்றன. மேலும் பாறைப்பகுதிகள் கிணற்றின் உள்ளே விழாம லும், எண்ணெய்க் கிணறுகள் வெடித்துச்சிதறாமலும், சிறு குழாய்கள் மூலம் எண்ணெயை வெளிக் கொண ரவும்,நீர் உட்புகாமல் காக்கவும் இவை பயன்படுத் தப்படுகின்றன. குழாய்க் கிணற்றின் ஆழம். எண்ணெய்ப் பகுதியிலுள்ள அழுத்தம், பாய்ம இழப்பு, தேய்மானம் ஆகியவை காப்புக்குழாய் நிறுவுவதற்குத் கிறிஸ்துமஸ் மர அமைப்பு பூமியின் மேற்பகுதி சிமெண்ட். துளைக்கப்பட்ட துளை எண்ணெய்க் குழாய் நீர்த்தேக்கம் எண்ணெய்ப் படிவு காப்புக் குழாய் கிணற்றின் முக்கியத்தொகுதி சிமெண்ட் மேற்பரப்புக் காப்புக்குழாய் டைக்காப்புக்குழாய் அடைப்பான் தேவையான காரணிகளாகும். குழாய்க் கிணற்றின் பாதுகாப்பிற்காகத் தரைமட்டத்தில் சிறிது சிமெண்ட் வைத்து இறுக்கமாக மூடப்படுகின்றது. குழாய்க் கிணற்றோடு எண்ணெய்த் தேக்கத்தை ணைக்கும் முறை. குழாய்க் கிணறு எண்ணெய் தேங்கியுள்ள பாறைப்பகுதிகளோடு ணைக்கப் படுதல் வேண்டும். இணைப்பு முறைகள் சாதாரண இணைப்பு, துணை இணைப்பு, காப்புக் குழாய்த் துளை இணைப்பு என மூவகைப்படும். சுண்ணாம்புப் பாறை டோலோமைட் பாறை, கடின மணல் பாறை ஆகியவற்றில் அமைந்திருக்கும் பெட்ரோலிய ஊற்றுகளில் சாதாரண இணைப்புகளே ஏற்படுத்தப் படுகின்றன. இவ்வகைப் பாறைகளில் வடிகட்டி களோ, காப்புக் குழாய்களைத் தாங்கும் பகுதிகளோ தேவையில்லை. எனவே காப்புக் குழாய்கள் தூய்மையாக்கப்பட்டவுடன் நேரடியாகப் ரோலிய ஊற்றுகளோடு இணைக்கப்படுகின்றன. பெட் துளை இணைப்பு என்பது குழாய்க் கிணற்றின் அடிப்பகுதியில், துளையிட்ட குழாய் பொருத்தப் பட்டுப் பெட்ரோலிய ஊற்றுப் பகுதியில் ணைக்கப் படுதலாகும். இக்குழாய் காப்புக் குழாயைவிட விட்டம் சிறியதாகவும், காப்புக் குழாயிலிருந்து கீழே தொடுவதாகவும் இருக்கும். துளையிட்ட குழாய்ப் பகுதி வளிமம் மற்றும் எண்ணெயை மட்டுமே உள்ளே அனுமதித்து மற்ற துகள்களைத் தடை செய்கின்றது.மூன்றாம் முறை, காப்புக் குழாய்கள் வழியே துளையிட்டு இணைத்தலாகும். இதற்காகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள கருவிகளைக் கொண்டு துளையிட்டு, எண்ணெய்ப் படிவுகள் இணைக்கப்படுகின்றன. இம்முறைக்குத் துப்பாக்கித் துளையிடும் முறை எனப் பெயர். எண்ணெய் உற்பத்திக் கட்டுப்பாடு. பெட்ரோலிய ஊற்றிலிருந்து மேலே கொண்டு வரப்படும் எண்ணெய் யின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ பயன் படுத்தும் பகுதியே உற்பத்திக் கட்டுப்பாட்டுத் தொகுதியாகும். இத்தொகுதியில் காப்புக் குழாயின் நடுவே ஒரு சிறிய எஃகு குழாய் பொருத்தப்பட்டு அக்குழாய் பெட்ரோலிய எண்ணெய்ப் படிவுகளோடு இணைக்கப்பட்டுக் குழாயின் மேற்புறம், 'கிறிஸ்து மஸ் மர வடிவிலுள்ள அமைப்போடு இணைக்கப் பட்டு எண்ணெய் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான எண்ணெய் வயல்களில் எண்ணெய் பீறிட்டு மேலே வரும் தானாகவே அளவுக்கு அழுத்தம் இராது. அவ்வகைக் கிணறுகளில் எக்கிகள் பயன்படுத்தப்பட்டு எண்ணெய் மேலே கொண்டு வரப்படுகிறது. சிற்சில இடங்களில் ஓர் எண்ணெய்ப் படுகையில் பல இடங்களிலிருந்து ஒரே கிணற்றின்