பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெய்‌ வளிமக்‌ கிணறு சீர்‌ செய்தல்‌ 147

வழியாக எண்ணெய் எடுக்கப்படுவதும் உண்டு. இவ்வாறு எடுப்பதற்கு அந்தப் படுகை பல பகுதி களாகப் பிரிக்கப்பட்டு, தடுப்பு ஏற்படுத்த ஒவ்வொரு பகுதியிலும் ஓர் உறிஞ்சு குழாய் வைக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்முறை மிகவும் சிக்கனமானதும் விரைவானதும் ஆகும். நீர்த்தடைகள். எண்ணெய் எடுப்பதற்கு நீரும் தடையாக அமைவதுண்டு. நீர் வாராமல் தடுக்கப் பலமுறைகள் கையாளப்படுகின்றன. குறைவான ஆழத்தில் மணற்பாறைகளிலிருந்து நீர் வந்தால் குழாய்க் கிணற்றின் அடிப்பகுதியில் சிமெண்ட் தடை ஒன்று வைத்து நீர் வருவது தடை செய்யப் படுகிறது. அழுத்தம் மிகுதியாகவுள்ள ஆழமான இடங்களிலிருந்து நீர் வந்தால் சிமெண்ட் அல்லது ஞெகிழிப்பொருள்களைக் கொண்டு பாறைகளிலுள்ள நீர்த் துளைகள் இறுக்கப்பட்டு அடைக்கப்படுகின்றன. நீர் வரும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் மட்டும் சிமெண்ட் வைத்து அடைத்து நிறுத்துவதும் உண்டு. உ ற்பத்தி மேம்படுத்தும் முறை. எண்ணெய்க்கிணறு களில் தொடக்க காலத்தில் கிடைக்கும் எண்ணெய் யின் அளவு குறைவாகவே ருக்கும். இந்த அளவு சராசரியை விடக் குறைவாக இருந்தால் சிற்சில் மேம் பாட்டு முறைகளைக் கையாண்டு எண்ணெய் வரும் அளவை அதிகரிக்கச் செய்வர். இம்முறைகள் அமில முறை, வெடிப்பு முறை, வெடி வைக்கும் முறை என மூவகைப்படும். சுண்ணாம்புப் பாறை, டோலோமைட் போன்ற கார்பனேட் பாறைகளில் எண்ணெய் வருவதற்கான வழிகள் போதிய அளவு இல்லாமல் இருந்தால் எண்ணெய் உற்பத்தி அளவு குறைவாக இருக்கும். எனவே அப்பாறைகளில் போதிய அளவு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் செலுத்திப் புதிய வழிகளை உருவாக்கி எண்ணெய் வரும் அளவைப் பெருக்குவர். சிற்சில கடினமான பாறைகளில் எண்ணெய் வெளிவருவதற்கான வெடிப்புகள் போதிய அளவு இருப்பதில்லை. அத்தகு பாறைகளில் வெடிப்புகள் விரிவுபடுத்தப்படுகின்றன. வெடிப்புகளை உருவாக் கும் பொருள்களை நீரோடு சேர்த்து உட்செலுத்திப் பாறைகளில் முன்னரேயுள்ள வெடிப்புகளில் மிகுதி யான அழுத்தத்தில் இறுக்கமாகச் செலுத்தி வைப்பர். அழுத்தத்தைக் குறைக்கும் பொழுது வெடிப்புகளில் பொருள்கள் உள்ள வெளியேறி வெடிப்புகளை விரிவாக்கிக் கொடுக்கும். இம்முறையில் தூய்மையற்ற பெட்ரோலிய எண்ணெய், எண்ணெய், நீர். அமிலம் ஆகியவை வெடிப்புகளை விரிவாக்கும் பொருள்களாகப் பயன்படுகின்றன. தூய எண்ணெய் வளிமக் கிணறு சீர்செய்தல் 147 எண்ணெய் வரும் வழியில் ஏதேனும் அடைப்பு இருந்தால் வெடி வைத்து அந்த அடைப்பு நீக்கப் படுவதுண்டு. வெடி மருந்துப் பொருள்களை வைத்துத் தீயிடும் பொழுது ஓரளவு வெடித்துப் புதிய வெடிப்புகள் தோன்றி எண்ணெய் வரும் அளவு அதிகமாவதும் உண்டு மணல் நீக்கம். மணற்பாங்கான பகுதிகளிலுள்ள எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் பொழுது, மணல் துகள்கள் குழாய் வழியே வந்து குழாய்க் கிணற்றை அடைத்து விடுவது உண்டு. சில சமயங்களில் எண்ணெயின் அளவு குறைவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, குழாய்க் கிணற்றிற்கு உள்ளே வரும் மணல் துகள்களைத் தடுக்க வேண் டும். அவ்வாறு தடுக்கப் பல வழிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானவை: வடிகட்டி முறை. மணலைக் கெட்டிப்படுத்தும் முறை, சரளை வடிகட்டி முறை எனப்படும். வடிகட்டி முறையில் துளையிட்ட குழாய்களின் வெளிப்புறத்தில் சல்லடைகளைப் பொருத்தி மணல் துகள் உள்ளே புகாமல் தடுத்து நிறுத்தப்படும். மிக நுண்ணிய துகள்கள் உள்ளே வந்தாலும் அவை எண்ணெய் அல்லது வளிமத்தோடு குழாயின் மேற் புறத்திற்கு வந்துவிடும். எனவே குழாய்க் கிணறு அடைபடும் தொல்லை இராது. . மணலைக் கெட்டிப்படுத்தும் முறை பெரும் பாலும் மணற்பாறைகளில் எண்ணெய் எடுக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் தேவை யான பசைப் பொருள்களைக் கொண்டு மணல் இறுக்கப்படுகின்றது. அவ்வாறு கெட்டிப்படுத்தும் பொழுது மணற் பாறையில் உள்ள துளைகள் முற்றி லும் அழிந்து போகாமல் நிலை நிறுத்தப்படுவதால் எண்ணெய் மட்டுமே வருவதுண்டு. மணல் துகள்கள் வருவதில்லை. சரளையை வடிகட்டும் முறையில். மணலின் தன்மையைப் பொறுத்துச் சரளை தேர்ந்தெடுக்கப் பட்டு, குழாய்க் கிணற்றுக்கு வெளியே சுற்றிலும் அமைக்கப்பட்டு, சல்லடை வைக்கப்படுகிறது. சல்லடை வழியே வரும் மணல் துகள் சரளைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு எண்ணெய் மட்டும் குழாய் வழியே செல்ல வழி செய்யப்படும். உள்ளே எண்ணெய் மற்றும் வளிமக் கிணற்றுச் சீராக் கலில் காப்புக் குழாய்களைக் கிணற்றின் இறுக்கி, எண்ணெய்க் குழாய்களை எண்ணெய்ப் படிவோடு இணைத்து. நீர்த்தடைகளை வென்று மணலை நீக்கம் செய்து உற்பத்தியை மேம்படுத்திக் எண்ணெய் கட்டுப்பாடான அளவில் எடுக்கப் படுகிறது. இராம. இராமநாதன் அ.க. 6-10அ