பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 எண்ணெய்‌ வளிமக்‌ கிணறு தோண்டல்‌

148 எண்ணெய் வளிமக் கிணறு தோண்டல் எண்ணெய் வளிமக் கிணறு தோண்டல் புவிக்கடியில் கிடைக்கின்ற பெட்ரோலிய எண்ணெய் மிக மீட்டர் பல்லாயிரக்கணக்கான அருகிலோ ஆழத்திலோ கிடைக்கின்றது. மிகு ஆழத்தில் கிடைக்கும் எண்ணெய் மற்றும் வளிமத்தைப் புவியின் மேற்பரப்பிற்குக் கொண்டு வருவதற்கு ஆழமான குழாய்க் கிணறுகள் அமைக்க வேண்டும். புவியின் கீழே செல்லச் செல்ல வெப்பமும் அழுத்தமும் மிகுதி யாகிக் கொண்டே செல்வதால் கிணறு தோண்டும் பணி மிகக் கடினமாக அமைகிறது. குழாய்க் கிணறு தோண்டுதல் கடினமான பணி. குழாய்க் கிணற்றைக் குறிப்பிட்ட திசை மாறாமல் தோண்டுவதால்; தோண்டும் திசை சிறிது மாறினாலும் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்குப் பதிலாக வேறு இடத்திற்குக் குழாய்க் கிணறு சென்றுவிடும். மேலும், ஆழம் மிக, மிக ஒவ்வொரு மீட்டருக்கும் ஏற்படும் தோண்டும் செலவும் மிகும். மூன்றாவதாக, கிணறு தோண்டப் பயன்படுத்தப்படும் பாய்மம் வெடித்துச் சிதறுவதைத் தடுக்கும் வகையில் அழுத்தமுள்ளதாகவும். சமயத்தில் குழாய்க் கிணற்றில் விரிசல்கள் ஏற் படுத்தா வண்ணமும் இருக்க வேண்டும். அதே தோண்டு கிணற்றில் திசைக்கட்டுப்பாடு. எண்ணெய் மற்றும் வளிமக் கிணறு தோண்டுதலில் மிக முக்கிய மாகச் செயல்படுத்தப்பட வேண்டிய காரணி, குழாய்க் கிணற்றில் திசைக்கட்டுப்பாடாகும். குறிப் பிட்ட திசையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு பெரும் பாகை விலகினாலும் திசை குறிப்பிட்ட இலக்கை விட்டு மாறிவிடும். வேறுபட்ட கடினத் தன்மை யுடைய சாய்வான பாறைகள், பெரும்பாலும் திசை விலக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கையில் அமைந்துள்ள அமைப்பு பாறைகளின் பாலான குழாய்க் கிணறுகள் நேராக அமைவதற்குத் தடையாக இருக்கின்றது. திசை விலகல் ல்லாமல் குழாய்க் கிணறுகள் தோண்ட, அவற்றைத் தகுந்த பொருள்களைக் கொண்டு அடைத்து வைத்துத் தோண்டும் முறை தற்கால முறையாகப் பின் பற்றப்படுகிறது. இம்முறை குழாயை அடைத்துத் (packed hole technique) தோண்டும் முறை எனப்படும். தோண்டும் செலவு, துரப்பணக் கருவி, தோண்டும் முனை, தோண்டும்போது பயன்படுத்தப்படும் பாய் மங்கள், துரப்பணக்கருவி செயல்படும் வேகம், தோண்டும் முனை பயன்படும் கால அளவு தோண்டும் முனையை மாற்றுவதற்குத் தேவையான நேரம் போன்றவற்றால் எண்ணெய்க் கிணறுகளின் தோண்டும் செலவு முடிவு செய்யப்படுகிறது. கிணறு தோண்டப் பயன்படுத்தப்படும் துரப்பணக் கருவியின் விலை மிக அதிகம். பொதுவாக 5 கிலோ மீட்டர் வரை எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் போது தோண்டும் செலவு நியாயமான தாக அமைகிறது. நிலப்பகுதிகளில் பயன்படுத்தப் படும் துரப்பணக் கருவிகளைவிடக் கடல் அண்மை யில் பயன்படுத்தப்படும் துரப்பணக் கருவிகளின் தோண்டும் செலவு பலமடங்கு வேறுபடும். துரப் பணக் கருவிகளில் சராசரி வேகம் மணிக்கு 1.5 மீட்டர் என்றாலும் சிற்சில வலிமை குறைந்த மென் பாறைகளில் மணிக்கு 30 மீட்டர் கூடத் தோண்டப் படுவதும் உண்டு. சாதாரணமாகப் பயன்படுத்தப் படும் சுழலும் (rotary drill) தோண்டுமுனைகளின் செயல்பாட்டு நேரம் 10-20 மணியாகும். தேய்ந்த முனைகளை மாற்றுவதற்குத் தேவையான நேரம் 10-20 மணியாகும். வைரத்தினாலான முனைகள் 50-200 மணி வரை செயல்பட்டு நேரத்தை மிச்சப் படுத்த வல்லன. ஆனால், இவற்றின் விலையோ மிக அதிகம். தோண்டும் செலவைக் குறைப்பதற்கு மிகச் சிறந்த வழி தோண்டும் வேகத்தை மிகைப்படுத்தி. தோண்டும் முனையின் பயன்பாட்டுக் காலத்தையும் அதிகப்படுத்துவதுதான். கிணறு தோண்டும் போது பயன்படுத்தப்படும் பாய் மங்கள். அதிக ஆழத்தில் கிணறு தோண்டும்போது அழுத்தம் மிக அதிகமாக உண்டு. இவ்வழுத்தம் கிணறு தோண்டும்போது பல இன்னல்களை உண்டாக்கும். அவ்வாறான இன்னல்களைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வளிமப் நீர்ம பொருள்களே கிணறு தோண்டும்போது பயன்படுத்தப்படும் பாய் மங்கள் எனப்படுகின்றன. மிகு அழுத்தத்தின் காரண மாகக் கிணறுகள் வெடித்துச் சிதறுவதும் உண்டு. இவற்றைத் தடுப்பதற்காக மிகு அடர்த்தித் தனி மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உப்புநீர் உள்ள பகுதிகளில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பாய்மங்களின் அழுத்தம் 11-123 கிலோ பாஸ்கல் மீட்டர் வரை இருக்கும். பெரும்பாலான பாறை களில் பாய்மத்தின் அழுத்தம் இந்த எல்லைக்கு உட்பட்டேயிருக்கும். கிணறு தோண்டும்போது பயன் படுத்தப்படும் பாய்மங்களின் அழுத்தம் குறைவாக இருந்தால், வெடித்துச் சிதறும் வாய்ப்பும் அதிகமாக இருந்தால், பாறைகளில் விரிசல் ஏற்படும். அவ்வாறு விரிசல் ஏற்படும்போது பாறை விரிசல்களில் மமும், தோண்டப்பட்ட துகள்களும் உள்ளே சென்று, எண்ணெய், குழாய்க் கிணறுகளுக்கு வரும் வேகத்தைக் குறைத்து விடும். பாய் தோண்டும் முனை சீராகச் செயல்படுவதற்கு மிகு அழுத்தமுள்ள பாய்மம் பயன்படுத்தப்படுகிது. தோண்டு முனை, பாறைகளில் செயல்படும்போது பாறைகளில் உடையும் தன்மை அதிகமாகின்றது. அவ்வாறு உடைந்த பாறைகள் பாய்மங்களால் வெளிக் கொணரப்படும். பாய்மங்களின் அழுத்தம்