பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெய்‌ வளிம வயல்களின்‌ தீர்க்கை 153

இரண்டும் எடுக்கப்படுகின்றன. எண்ணெயில்லாமல் வளிமம் மட்டுமே கிடைக்கும் கிணறுகளில் வளிமம் தானே மேலே வருவதால் வெளிக் கொணரும் செலவு குறைவு. ஆனால் சிற்சில இடங்களில் கிணற்றிலுள்ள தண்ணீரால் சில சிக்கல்கள் ஏற்படும். அப்போது நீரை எக்கிகளின் மூலம் வெளிக் கொணர்ந்து வளிமத்தை எடுக்கலாம். எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எண்ணெயை வெளிக்கொணரும் முறை பற்பல காரணங்களால் வேறுபடுகின்றன. முக்கியமான காரணிகள் கிணற்றின் ஆழம், அளவு. எண்ணெயின் நெகிழ்வுத் தன்மை, அடர்த்தி நீர் அளவு, எண்ணெய் வளிம விழுக்காடு, துளைகள் அழுத்தம் ஆகியனவாகும். மேலும் பாரபின் மெழுகு, மண் அளவு, கிணற்றில் பயன் படுத்தப்படும் பாய்மங்களால் ஏற்படும் அரிமானம் போன்றவையும் எண்ணெய்க் கிணறுகளின் மேம் பாட்டையும், வெளிக்கொணரும் முறைகளையும் கட்டுப்படுத்துகின்றன. எண்ணெய் எடுத்தலை அதிகப்படுத்த, சாதாரணமாகப் பயன்படுத்தும் முறைகள் அமில முறை, எண்ணெய்ப் பாறைகளை நீர்மம் கொண்டு பிளத்தல். சல்லடை அமைத்தல், மண் சரளைக் கற்களைக் கொண்டு கெட்டித்தல் போன்றவையாகும். கிடைக்கும் எண்ணெய், கிணற்றுக்குக் கிணறு வேறுபடும். எண்ணெய்க் கிணறுகளில் ஒரு பீப்பாய்க் குக் குறைவாகவும் பல்லாயிரக்கணக்கான பீப்பாய் களுக்கு அதிகமாகவும் எண்ணெய் கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் எண்ணெய் தானே வெளிவரும் எண்ணெயாகவோ எக்கிகள் மூலம் வெளிக்கொணரும் எண்ணெயாகவோ ருக்கலாம்.(1பீப்பாய் = 0.159 கனமீட்டர்) எண்ணெய்க் கிணறுகளிலிருந்து மிகக் குறைவான காலத்தில் மிக அதிகமாக எண்ணெய் எடுத்தலையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுவர். இவ்வாறு செயல்படுவதற்கு லாப நோக்கமே காரணமாகும். எண்ணெய் எடுக்க அதிகமாகும் ஒவ்வொரு மணி நேரமும் அதிகப்படியான செல் வினங்களைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். மேலும் துரப்பணக் கருவி வாடகை, சம்பளம். முதலுக்கான வட்டி போன்றவை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே ஒரு கிணற்றி லுள்ள எண்ணெயை மிகக் குறைந்த கால வெளிக் கொணர்வர். அளவில் தேவையென்றால் எண்ணெய் மீட்பு முறையைக் கையாண்டு, எண்ணெய் வெளியே எடுக்கப்படும். இம்முறையில் நீர், நீராவி, காற்று போன்றவற்றை உட்செலுத்தி எண்ணெய் வெளிக்கொண்டு வரப் படும். சட்டமும் இயற்கைக் கட்டுப்பாடுகளும்: அமெரிக்கா போன்ற சில நாடுகளில் தனியார் எண்ணெய் 4 எண்ணெய் வளிம வயல்களின் தீர்க்கை 153 வயல்கள் உண்டு. இவ்வயல்கள் குத்தகைக்கு விடப்பட்டு எண்ணெய் எடுக்கப்படும். அவ்வாறு குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள எண்ணெயை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால், எண்ணெய் ஓடும் தன்மை உடையது. மிகு அழுத்தமான இடத்திலிருந்து குறை வான அழுத்தப் பகுதிக்கும், மேட்டிலிருந்து பள்ளத் திற்கும் ஓடும் நிலையுடையது. குத்தகை எடுக்கும் போது குத்தகை நிலத்தில் இருந்து எண்ணெய்க் கிணறு தோண்டியவுடன் பிறர் நிலத்திற்குச் சென்றுவிட்டால் சட்டச் சிக்கல்கள் எழுகின்றன. இந்தியா மற்றும் அரபு நாடுகளில் அரசு மற்றும் அரசுச் சார்பு நிறுவனங்கள் மட்டுமே எண்ணெய் எடுப்பதால் இது போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. தரைப்பகுதியில் இல்லையென்றாலும் சிற்சில சமயங்களில் கடற்பகுதியில் இது போன்ற சிக்கல்கள் வேற்று நாட்டோடு வரக்கூடும். எண்ணெய்க் உற்பத்தி முறை கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் முறை ஆறு வகைப்படும். அவை தானே மேல் வருதல், எக்கிகள் மூலம், வளிமத்தின் மூலம் கீழ்நிலை எக்கிகள், மையவிலக்குவிசை எக்கிகள் தாரை எக்கிகள் ஆகும். வரை எண்ணெய் உற்பத்தியில் தானே மேல் வருதல். மிகவும் சிக்கனமான முறை இதுவேயாகும். இம் முறையில் எண்ணெய் உற்பத்தி செய்வதை எதிர்பார்த்த அளவு குழாயில் எண்ணெய் வரும் பின்பற்றுவார்கள். வருகின்ற எண்ணெயின் அளவு குறைந்தால் எக்கிகளின் துணையாலோ பிற முறைகளினாலோ எண்ணெயின் உற்பத்தி அளவை அதிகரிப்பார்கள். இம்முறை சிக்கனமான முறை என்றாலும் சிறிது ஆபத்தான முறை. ஏனெனில் சிற்சில இடங்களில் மிகை அழுத்தம் காரணமாக மேலே எண்ணெய் பீறிட்டு வரும்போது உள்ள கிறிஸ்துமஸ் மர' அமைப்புகளை எல்லாம் உடைத்து வெளியேறும். அத்தகு இடையூறுகளைத் தடுக்க கிறிஸ்துமஸ் மர அமைப்பில் கட்டுப்படுத்தும் அடைப் பான்களைப் பொருத்தி எண்ணெய் வரும் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுண்டு. சிற்சில எண் ணெய்க்கிணறுகளில் குழாய்க் கிணற்றின் அடிப்பகுதி யிலும் ஒரு கட்டுப்பாட்டுத் தொகுதி அமைக்கப் டு அடைப்பான்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒருவேளை மேற்பகுதி பழுதுபட்டாலும் கீழே உள்ள பகுதி எண்ணெய் வரும் அளவைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருக்கும். இத்தகைய தானே வழங்கும் எண்ணெய்க் கிணறுகள் இந்திய எண்ணெய் வயல்களில் ல்லை