பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தில்‌ ஆல்கஹால்‌ 165

எண் முறை (மின்னணுப் பொறியியல்) 86 இலக்க முறைக் கணிப்பொறிகளை வடிவமைக்கவும், புரிந்துகொள்ளவும். இயக்கவும் எண்முறைகள் (mber systems) பெரிதும் பயன்படுகின்றன. உலக வழக்கில் பெரும்பான்மையாகப் பயன்படுவது தசம எண்களாகும். தசம எண்கள் மிகவும் சிறப்பான பயன் களைக் கொண்டுள்ளன. "எல்லா எண்களையும் குறிப்பிட்ட பத்துவகைக் குறிகளையும், எண்களில் அவை உள்ள இடத்திற்குத் தகுந்தாற்போல் மதிப்புப் பெறும் தன்மைகொண்ட ஓர் உயர்ந்த கருத்தை யும் உலகிற்குக் கொடுத்தவர்கள் இந்தியர்களே; 'கருத்து மிகவும் எளிமையானதாக அமைந்தாலும் அதன் உண்மையான மதிப்பை இப்பொழுது எவரும் உணர்வதில்லை" என்று லாப்லாஸ் என்பார் குறிப் பிடுகின்றார். எந்த எண்முறையிலும் ஓர் எண்ணைப் பின்வருமாறு எழுதலாம். +] "p+u] T+*p = N RANDER +d,r'+d,r+d,r° N என்பது கொடுக்கப்பட்ட எண்ணாகும் d. in என்ற இடத்தில் உள்ள இலக்கம் i - எண்முறையின் அடிப்படை (base 1- n - dn+1 என்ற இடத்தில் உள்ள இலக்கத்தின் மேல்மதிப்பெண்ணாகும். ஓர் எண்முறையில் அடிப்படை மதிப்பை வைத்து எண்முறைகள் பெயர் பெறும். அடிப்படையின் அளவுக்கே இலக்கங்களிருக்கும். காட்டாக தசம எண்ணில் 10 என்பது அடிப்படையாகும். இரும எண்களில் 2 அடிப்படையாகும். எண்ம எண்களில் 8 அடிப்படையாகும். இருஎண்ம முறையில் 16 அடிப் படையாகும். சான்றாக தசம எண்முறையில் 157 என்பதை 1×10 + 5× 10 + 7x 10° என்று எழுத லாம். 10 என் ன்ற இருமஎண்ணை 1×2 + 0×2* என்று தசம எண்ணாக மாற்றலாம். ஒரு மதிப்பை ஓர் எண்முறையிலிருந்து மற்றோர் எண்முறைக்கு மாற்றலாம். கணிப்பொறிகளில் இலக்சு முறைச் சுற்றுகளில் இரும எண்முறையும், வெளியீட்டகங்களும் தேக்கிகளும் கையாளப்படு கின்றன. 8,16,32 அடிப்படையும் சில கணிப் பொறிகளில் பயன்படுத்தப்படும். அடிப்படையின் மதிப்பு அதிகமாகும்போது ஒரு மதிப்பைக் குறிப் பீடும் எண்களில் வேண்டிய் இலக்கங்கள் குறை கின்றன. ஆகவே தேக்கிகளில் (memory) இவற்றைத் தேக்கும்பொழுது மிகக் குறைந்த இடமே தேவைப் படும். க.அர. பழனிச்சாமி எத்தில் ஆல்கஹால் எத்தில் ஆல்கஹால் 165 இது ஆல்கஹால்களில் மிகவும் பயன்மிக்க ஒன்றாகும். ஆல்கஹால், எத்தனால், தானிய ஆல்கஹால், தொழில் ஆல்கஹால், நொதிக்கப்பட்ட ஆல்கஹால், எத்தில் ஹைட்ராக்சைடு, மீத்தைல் கார்பினால் என்று வேறு பல பெயர்களாலும் எத்தில் ஆல்கஹால் குறுப்பிடப்படுகிறது. தூய எத்தில் ஆல்கஹால் நிற மற்ற, எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மம்; இது எளிதில் தீப்பற்றக்கூடியதும், நச்சுத்தன்மை வாய்ந் ததும், எரிச்சலூட்டக் கூடிய நெடியுடையதும் ஆகும். இதன் கொதிநிலை 78.4°C; உருகுநிலை - 112.3°C; 20°C இல் இதன் ஒப்படர்த்தி 0.7851. இது நீரிலும் மற்ற கரிமக் கரைப்பான்களிலும் கரைகிறது. இது தொழில் துறையில் மிகவும் பயனுள்ள கரைப்பானாக விளங்குகிறது. தொழிலகங்களில் தொகுப்பு, நொதித்தல் ஆகிய முறைகளால் இது பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பு எத்தில் ஆல்கஹால் தொழில் முறையில் பல வழி களில் தயாரிக்கப்படுகிறது. செய்தல். எத்திலீனை வினையூக்க நீரேற்றம் பெட்ரோலியச் சிதைவின் (பிளப்பின்) மூலமோ இயற்கை வளிமத்திலிருந்தோ கிடைக்கும் எத் தீலினை அமில வினையூக்கிகள் உடனிருக்க நீருடன் உயர் வெப்பநிலையில் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது எத்திலீன் நீரேற்றம் நீரேற்றம் அடைந்து எத்தில் ஆல்கஹாலைத் தருகிறது. எத்திலீனை சல்ஃப்யூரிக் அமிலத்தால் நீரேற்றம் செய்தல். எத்திலீனை அடர் சல்ஃப்யூரிக் அமிலத் துடன் வினைபுரியச் செய்யும்போது எத்திலீன் ஹைட்ரஜன் சல்ஃபேட்டும் டைஎத்தில் சல்ஃபேட்டும் கிடைக்கின்றன. இவற்றை நீராற் பகுத்தலுக்குட் படுத்தும்போது எத்தில் ஆல்கஹாலும் சல்ஃப்யூரிக் அமிலமும் கிடைக்கின்றன. கார்பன் நீர்த்த மோனாக் வினை ஃபிஷர்-ட்ரோப்ஸ்ச் முறை. சைடை ஹைட்ரஜனுடன் சேர்த்து இரும்பு யூக்கியின் மேல் செலுத்தி மெத்தனால் தயாரிக்கும் போது உடன் விளை பொருளாக எத்தனால் கிடைக் கிறது. இதற்கு ஃபிஷர் - ட்ரோப்ஸ்ச் முறை என்று பெயர். தொழில்முறையில் நொதிக்க வைத்தல். ஹெக்சோஸ் சர்க்கரைகளை ஈஸ்ட்டுடன் சேர்த்து நொதிக்க வைப்பதன் மூலம் எத்தில் ஆல்கஹால் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. CHO → 2C,H,OH + 2 CO, →