168 எதிர் இயக்கம்
168 எதிர் இயக்கம் எடுத்துக்காட்டுகள்: எவ்வளவு ஏற்பித்தூண்டிகள் அசிட்டைல் கோலின் .. 93 ஹஸ்டமின் பரிவுமண்டல அமைன்கள் அதிகப்படுத்தினாலும் உ ஏற்பித்தூண்டிகளின் இயக்கும் தடுப்பான்கள் டியு போகுய்ரேரின் அட்ரோப்பின் மெப்பரைமின் புரோப்ரனலால் ஏற்பித்தூண்டி களின் இயக்கம் உண்டாவதில்லை. சான்று: அட்ரின லின், ஆல்ஃபா ஏற்பிகளில் இயங்கி இரத்தக்குழாய் களைச் சுருக்குகிறது. ஆல்ஃபா ஏற்பி அடைப்பா னான டைபென்ழ்சீன் இரத்தக்குழாய்களை விரி வாக்குகிறது. டைபென்ழ்சீனைக் கொடுத்த பிறகு அட்ரினலின் அளவை எவ்வளவு அதிகப்படுத்தினாலும் இரத்தக்குழாய்ச் சுருக்கம் ஏற்படுவதில்லை. இயங்கியல் எதிர் இயக்கம். இது எதிரான உடலியங் கியல் வினைகள் உடைய இரண்டு ஏற்பித் தூண்டி களிடையே ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஹிஸ்ட்ட மின் அட்ரினலின் ஆகியவற்றின் எதிர் இயக்கத்தைக் கூறலாம். ஹிஸ்ட்டமின், ஹிஸ்ட்டமின் ஏற்பிகளில் இயங்கி மூச்சுக் குழாயைச் சுருக்குகிறது. ஆனால் அட் ரினலின் பீட்டா ஏற்பிகளில் இயங்கி மூச்சுக்குழாயை விரிவடையச் செய்கிறது. பேரியம் குளோரைடு உணவுக்குழாய்த் தசைகளைச் சுருக்குகிறது. பெப்பா விரின் உணவுக் குழாய்த் தசைகளைத்தளர்த்துகிறது. பார்பிச்சுரேட்டு மூச்சு மண்டல இயக்கத்தை ஒடுக்குகிறது. பிக்ரோடாக்சின் மூச்சு இயக்கத்தைத் தூண்டுகிறது. அமிலத்தன்மை காரத்தால் குறைக்கப் படுவதுபோல இவ்வகை எதிர் இயக்க வினையில் ஒரு மருந்து இன்னொரு மருந்தின் வீரியத்தைக் குறைப்ப தில்லை. இரண்டு மருந்துகளின் தனித்தன்மையான இயக்கங்கள் இருந்து வருகின்றன. எனவே பார்பிச்சு ரேட்டுகளை அதிகமாக உட்கொண்ட ஒருவருக்கு நச்சுத்தன்மை விளைவிக்கக் கூடிய அளவு பிக்ரோ டாக்சினைச் செலுத்தினால் அவருக்கு மரணம் நேரிடலாம். இந்த அடிப்படை மருந்தியல் கருத்தினை நினைவிலிருத்திக் கொண்டால் நடைமுறையில் மருத்துவமளிக்கும்போது சீர்கேடான விளைவுகளைத் தவிர்க்கலாம். வேதியியல் எதிர் இயக்கம் என்பது மருந்துகளி டையே ஏற்படும் வேதியியல் வினையாகும். எ.கா: அபினி உட்கொண்டால் ஏற்படும் நச்சுத்தன்மையை நீக்கப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலைக் கொண்டு இரப்பைகழுவுதல் மருத்துவம் செய்யலாம். ஏற்பிகள் இயக்குந்தசையிலுள்ள நிக்கோட்டினிக் ஏற்பிகள் இயங்குதசையிலுள்ள மனுகானிக் ஏற்பிகள் ஹிஸ்டமின் ஏற்பிகள் பீட்டாஏற்பிகள் அபினிலுள்ள மார்ஃபீன் ஆக்சிஜனேற்றம் அடைந்து செயலற்ற பொருளாகி விடுகிறது. சயனைடினால் ஏற்படும் நச்சுத் தன்மையைச் சோடியம் தயோ சல்ஃபேட் கொடுத்துக் குறைக்கலாம். சயனைடு மருந்து தயோசயனேட் என்னும் நச்சுக் குறைந்த பொருளாக மாற்றப்படுகிறது. மித காரத்தன்மை உடைய மருந்துகளான சோடியம் பைகார்பனேட், அலுமினியம் ஹைட்ராக்சைடு போன்றவை இரைப் பையில் அமில மிகைச்சுரப்பினால் ஏற்படும் அமிலத் தன்மையைக் குறைக்கின்றன. ஹெப்பாரின் என்ற சர்க்கரை சேர்ந்த கூட்டுப்பொருள் வலுவான அமிலத்தன்மை வாய்ந்தது. புரோட்டமின் காரத் தன்மையுடையது. இது ஹெப்பாரினின் அமிலத் தன்மையைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியக் காரணிகள். மருந்துகளின் உள் உறிஞ்சல், வளர்சி தைமாற்றம், வெளியேற்றம் முதலியன பாரம்பரியக் காரணிகளால் பாதிக்கக்கூடும். மேலும் நோயாளியிடம் சில பரம்பரை வளர்சிதை மாற்ற நோய்கள் இருந்தால் அவையும் சில மருந்து களை உட்கொள்ளும்போது வேண்டாத விளைவு களை உண்டாக்கக்கூடும். அசெட்டைல் தொகுதிச் சேர்ப்பு, ஹைட்ராக்சில் தொகுதிச்சேர்ப்பு ஹைட்ராக் சில் தொகுதி நீக்கம் ஆகிய நொதி சார்ந்த வினை களால் மருந்துகளின் வளர்சிதைமாற்றம் உண்டாகி றது. இந்த நொதிகளில் இயல்புக்கு மாறான கூறுகளி லிருப்பின் அவை மருந்துகளின் வளர்சிதை மாற்றத் தில் மாறுபாடுகளை உண்டாக்குகின் றன. சக்கினைல் மூச்சு நிறுத்தம் (Succinyl opnoea) சக்சி னைல் கோலின் ஒரு குறு இயங்கும் இயக்குந்தசைத் தளர்த்தியாகும். இது பொதுவாகக் கோலினெஸ்ட்ட ரேஸ் என்ற நொதியினால் ஹைட்ராக்சில் தொகுதி நீக்கப்பட்டுச் சிதைக்கப்படுகிறது. ஒரு சிலரில் இந் நொதி பல விதங்களில் மாறுபட்டுக் காணப்படுகிறது. சக்கினைல் கோலினைச் சிரைவழிச் செலுத்தினால் இது தசைத்தளர்வை 3-4 நிமிடங்களுக்கு மட்டுமே ஏற்படுத்துகிறது. ஆனால் இயல்பற்ற வகை (atypical) கோலினெஸ்ட்டரேஸ் நொதி உடையவா எ.கா.