எதிர் இரும்பியல் காந்தம் 169
களிடத்தில் தசைகள் தளர்வு 3-4 மணி நேரம் வரை நீடிக்கிறது. இதனால் மூச்சு மண்டலத் தசைகளும் செயலிழந்து மூச்சு நிறுத்தம் ஏற்படக்கூடும். இந் நிலையில் செயற்கை மூச்சுக்கருவிகளைக் கொண்டு மூச்சுவிடுதலை ஏற்படுத்தாவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். மேற்கூறிய சக்சினைல் மூச்சு நிறுத்தம் 3000 பேர்களில் ஒருவருக்கு என்ற விகி தத்தில் ஏற்படுகிறது. அசெட்டைலேற்றம். சில மருந்துகளின் அசெட் டைல் தொகுதிச் சேர்ப்பு, சிலரிடத்தில் மெதுவாக வும், சிலரிடத்தில் விரைவாகவும் ஏற்படுகிறது. இதனால் மருந்துகளின் இயக்க நேரம் மாறுபட்டு அவற்றின் நச்சுத்தன்மை அதிகரிக்கக்கூடும். மெது வாக அசெட்டைல் சேர்ப்பு நடைபெறுபவர்களி டத்தில், ஐசோநியாழ்சிட் (INH) மருந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடும். மருந்துகளின் இயக்கம் கீழ்க்காணும் மூன்று காரணிகளால் மாற்றியமைக்கப்படலாம். உடற்கூறு அமைப்பில் மரபுரிமை ஏற்படும் மாற்றங்கள்; மர புரிமையாக ஏற்படும் மருந்து இயக்க எதிர்ப் புணர்ச்சி; பாரம்பரிய மாறுபாடுகள். உடற்கூறு அமைப்பில் மரபுரிமையாக ஏற்படும் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டாக, பெருந்தமனிக் கீழ்த்தசைக் குறு கல் நோயில் (musular subaortic stenosis) டிஜி டாலிஸ் ஏற்படுத்தும் முரண்பாடான விளைவு களைக் தமனி கூறலாம். இப்பரம்பரை நோயில் பெருந் வால்லின் கீழுள்ள இதய இடக் கீழறைத்தசை அளவில் பெருக்கமடைகிறது. இதனால் இதய இடக்கீழறையிலிருந்து இரத்த ஓட்ட வெளியேற்றம் தடைப்படுகிறது. ஓரளவு இதயப் பெருக்கம், தசைக்குறுக்கலை ஈடுசெய்து நோய் நிலையைச் சீர்செய்யக்கூடும். இந்த இதயப் பெருக் கத்தினால் ஏற்படும் இதயச்செயலிழப்புக்கு டிஜிடா விசைக் கொண்டு விரைவாக மருத்துவம் செய்தால் டிஜிடாலிசினால் ஏற்படும் இதய அளவின் சுருக்கம், தசைக்குறுகலை நோய் அதிகரித்து, நிலையை முன்பை விடச் சீர்குலைத்து விடலாம். லேயே குறுகிய கோண முன்கண்ணறை உடையவர் களிடத்தில் அட்ரோபின் மருந்தைக் கண்ணில் ஊற்றினால் கிளௌக்கோமா (glaucoma) கண் உள் அழுத்த மிகு நோயை உண்டாக்கக்கூடும். ஒரு சிலரிடத்தில் ஸ்டீராய்டு மருந்துகளைக் கண்களில் ஊற்றினால், இவை கண் உள் அழுத்தத்தை அதி கரிக்கின்றன. இவ்விளைவு ஒடுங்கி (recessive) பாரம் பரியப் பண்பு காரணமாக ஏற்படுவதாகக் கருதப்படு கிறது. பிறவியி என்ற சிலர் உடலில் மருந்துகளைச் செலுத்தும்போது அவர்களிடமுள்ள பாரம்பரிய மாறுபாடுகள் காரண மாக அவை இயல்புக்கு மாறான வினைகளைப் புரி கின்றன. எடுத்துக்காட்டாக ஹாலோத்தேன் போன்ற எதிர் இரும்பியல் காந்தம் 169 பொது உணர்விழப்பு மருந்துகள் ஒருசிலரில் கடும் மிகுவெப்பநிலையை ஏற்படுத்துகின்றன. இவ்விளைவு கடும் தசையிறுக்கத்தை உண்டாக்கி மரணத்தை விளைவிக்கக்கூடும். ஆனால் து மிக அரிதாகவே ஏற்படுகிறது. எதிர் இரும்பியல் காந்தம் குறைந்த மதிப்புடைய சுவயம் ஜோதி புறக்காந்தப் புலத்தைக் கொண்டே காந்தமற்ற நிலையிலிருந்து தெவிட்டிய காந்த நிலைக்கு இரும்பு. கோபால்ட், நிக்கல் போன்ற இரும்பியல் காந்தப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியும். இப்பண்பினை விளக்கு வதற்காக வெயிஸ் என்பார் மூலக்கூற்று அகக்காந்தப் புலம் (internal molecular field) என்ற புதிய கொள்கையை உருவாக்கினார். மூலக்கூற்றுப்புலத் தின் வலிமை மூலக்கூற்றின் தற்சுழற்சி அதன் காந்தமாக்கச் செறிவு ஆகியவற்றைப் பொறுத்த தாக இருக்கின்றது என்றும் நிறுவினார். இம்மூலக் கூற்றுப் புலத்தினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட் பட்ட பகுதியிலுள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட திசையில் காந்தத் திருப்பு திறன் பெற்றிருக்குமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன. இதனால் இரும்பியல் காந்தப் பொருள்களில் பல சிறு சிறு பகுதிகள் தம்மியல்பாகக் (spontaneous) காந்த மாக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. இச்சிறு பகுதிகள் காந்தக்களம் (domain) என்று குறிப்பிடப் படுகின்றன. இந்தக் காந்தக் களங்களின் கட்ட மைப்பைச் சிறும ஆற்றல் நிலைத் தத்துவத்தைக் கொண்டும் அறியலாம். காந்தமற்ற நிலையில் பல்வேறு காந்தக் களங் களின் காந்தத் திருப்பு திறன்களின் மடல் சுழியாக அவை புறக்காந்தப்புலத்தில் காந்த இருக்கும். மாக்கப்படுவது இரு வகைகளில் நிகழக்கூடும். அவை அணுக்கள் காந்தக்களங்களிலுள்ள தம் காந்தத் திருப்பு திறனின் கூறைப்புலத்திசையில் அதிகரித்துக் கொண்டு வருவதும் அல்லது இணக்கமற்ற காந்தக் களத்தின் அழிவால், இணக்கமான காந்தக்களம் வளர்ச்சியுற்று வருவதும் ஆகும் (படம் 1). பொது வாசு வலிமையான புறக்காந்தப்புலம் மட்டுமே ஒரு காந்தக்களத்தின் காந்தத் திருப்பு திறனைத்திசை திருப்பக்கூடியதாக இருப்பதால், தாழ்ந்த காந்தப் புலங்களில் இரண்டாவதாகக் கூறப்பட்ட முறையே நிகழக்கூடியதாக இருக்கின்றது. புறகாந்தப்புலத்தில் அணுக்களின் ஆற்றல்நிலை மாற்றத்தினால், அவை ஒரு களத்திலிருந்து மற்றொரு களத்திற்கு இடப் பெயர்வு செய்யப்படுகின்றன. இதுவே காந்தக்கள வளர்ச்சி போலத் தோன்றுகிறது.