பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்‌ எதிராட்டத்‌ துளைப்பு 173

விசையை விட 100 மடங்கு குறைவாக இருப்பதால் முழுதுமாகப் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றது. உறுப்புகளிடையே எதிர் ஈர்ப்பை விண்ணியல் காண முடியும் என்றாலும் அது அவ்வளவு எளி தில்லை. அதற்கான காரணத்தையும். அலசி அறிய வேண்டும். டிராக் என்பார் சார்புக் குவாண்டம் கொள்கை யைக் கொண்டு, ஒவ்வொரு துகளுக்கும் அதற்குரிய ஓர் எதிர்த்துகள் இருக்க வேண்டும் என்பதை நிறுவினார். இவருடைய கருத்து, பின்னர் ஆய்வுகள் வாயிலாக மெய்ப்பிக்கப்பட்டது. எலெக்ட்ரானின் எதிர்த்துகள் பாசிட்ரான் என்றும், புரோட்டானின் எதிர்த்துக்கள் எதிர் புரோட்டான் என்றும் நியூட் ரானின் எதிர்த்துகள் எதிர் நியூட்ரான் என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஓர் எதிர்த்துகள் தன் துகளை ஒத்திருந்தாலும், மின்னூட்டத்தாலும், ஒரு குறிப் பிட்ட தற்சுழற்சிக்குரிய காந்தத் திருப்புதிறனின் திசையாலும் மாறுபட்டிருக்கும். ஒவ்வொரு துகளுக்கும் எதிர்த்துகள் இருக்க வேண்டுமெனில், எதிர்த் துகள்களால் கட்டப்பட்ட எதிரணுக்கள் இருக்கலாம் என்று கருத இயலும். எதிரணுக்களின் உட்கருவில் எதிர் புரோட்டான்களும், எதிர் நியூட்ரான்களும் இருக்கும். உட்கருவைச் சுற்றிப் பல வட்டப் பாதைகளில் நேர் மின்னூட்டம் உடைய பாசிட்ரான்கள் கொண்டிருக்கும். யங்கிக் எதிரணுக்களால் ஆன எதிர் உலகமும் இருக்க லாம். ஆற்றலைப் பொறுத்த வரை பொருளும் எதிர்ப் பொருளும் ஒன்றே. அதாவது ஆற்றல் பொருளாகவும், எதிர்ப் பொருளாகவும் மாறுவதற் குரிய வாய்ப்பு சமமே. எனவே, இப்பேரண்ட வெளி வெறும் பொருள்களால் ஆன விண் உறுப்புகளை மட்டும் கொண்டிருக்க முடியாது. அதற்குச் சமமாக எதிர்ப் பொருளால் ஆன விண உறுப்புகள் ஓர் அண்டத்தில் அங்கொன்றும் இங் கொன்றுமாகவோ தனி விண்மீன் மண்டல மாகவோ இருக்கலாம் என்று வானியல் இயற்பியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள். பேரண்ட வெளியில் காணப்படும் வலிமையான ரேடியோ அலை மூலங் கள் இவர்களுடைய கருத்துக்களுக்குச் சான்று அளிக் கின்றன. ஓர் எதிர் உலகத்தின் ஈர்ப்புப் புலத்தில் பொருளால் ஆன ஆப்பிளை வைத்தால், அது எதிர் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு, தானாகக் கீழே விழுவ தற்குப் பதிலாக விலகிச் செல்கின்றது. ஆனால் எதிர் உலகத்தில் ஒரு பொருள் நிலையாக இருப்பதில்லை. அதில் உள்ள ஒவ்வோர் அணுவும் அல்லது துகளும், எதிர் உலகத்தில் உள்ள அதற்குரிய எதிரணு அல்லது எதிர்த்துகளோடு முழு அழிவாக்கத்தில் ஈடு எதிர் எதிராட்டத் துளைப்பு 173 பட்டு முற்றிலும் அழிந்தொழியும். இதனால் எதிர் ஈர்ப்பினால் விளையும் இயக்கங்களைக் கண்டுணர முடிவதில்லை. எதிர் எதிராட்டத் துளைப்பு உள்ளன. மெ. மெய்யப்பன் உலோகத் துண்டுகளிலிருந்து சிறு பகுதியை அசுற்றித் தேவைப்படும் வடிவமைப்புகள் உருவாக்கப்படு கின்றன. உலோகப் பகுதிகளை அகற்றுவதற்கு வெவ்வேறு வகையான துளைப் பொறிகள் வழக்கில் பெருந்திரள் உற்பத்திக்கு மிகு திறன் கொண்ட எந்திரங்கள் தேவைப்படும். அவை பெரும் பாலும் தம்மியக்கமாகவே செயல்படும். ஆனால் சிறு அளவில், குறைந்த எண்ணிக்கையில் பொருள்களை உருவாக்கச் சிறிய அமைப்பைக் கொண்ட எந்திரங்கள் வழக்கில் உள்ளன. அவற்றில் எதிர் எதிராட்டத் துளைப் (nibbling) பொறி குறிப்பிடத்தக்கதாகும். இதில் சிறுஉளி மேலும் கீழும் இயக்கத்திற்குள்ளா வதன் மூலமாக உலோகப் பகுதிகள் வெட்டியெடுக் கப்படுகின்றன. எனவே இதில் உளியின் இயக்கம் முன் பின் இயங்கும் படித்திட்ட அமைப்பு இருக்கும். இதன் அமைப்பு தையல் எந்திரம்போல் இருக்கும். வேலைக்கு உள்ள உலோகத்துண்டு தகுந்த தாங்கும் பலகை அல்லது பகுதிகளில் வைக்கப்பட்டு, உளியின் இயக்கத் திற்குத் தக்கவாறு நகர்த்தப்படும். சில சமயம் தாங்கும் பகுதி அச்சாகவும் இருக்கக் கூடும். இரும்பு அல்லது இரும்புக் கலப்பற்ற கலவை உலோகங்கள் இவ்வகை எதிர் எதிராட்டத் துளைப் பாக உருப்பெறுகின்றன. மென் எஃகு உலோகத் வெட்ட துண்டுகளை இம்முறையில் }' அளவிற்கு லாம். சிற்றுளிக்கும், தாங்கும் பீடத்திற்கும் உள்ள டை வெளியைக் கருத்திற் கொண்டு. இவ்வகை எந்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. வேலைக்குரிய உலோகத்துண்டை நகர்த்துவதற்குச் சில சமயம் உருள் சிற்றுளிகள் தேவைப்படும். ஒழுங்கான வடி வில்லாத உலோகத் தகடுகளைப் பிடிப்பியைக் கொண்டு நகர்த்துவதற்கு உருள் சிற்றுளிகள் பயன் படுகின்றன. இச்சமயங்களில் மேற்குறிப்பிட்ட இடை வெளி, உருள் சிற்றுளிகளைப் பயன்படுத்துவதற்குத் தக்கவாறு அதிகரிக்கப்படும். ஏற்புடைய தகடுகளை வழித்தடங்களாகக் கொண்டு வேலைத் துண்டுகளின் நகல்களை உருவாக்கலாம். சிறு குழாய்த் துண்டு களும் இம்முறையில் வெட்டப்படும். மேலும் குழி களும், சிறு துளைகளும் இம்முறையில் எளிதாக உருவாக்கப்படும். -கே.ஆர்.கோவிந்தன்