எதிர்த்துடிப்பு மின்னோடி 175
களின் கூடுதல் அத்தனிமத்தின் உள் காந்தப்புலப் மாகும். படம் 2.இல் காட்டியபடி உள்காந்தப்புலத் தின் காந்தத்தூண்டல் திசையன் APm, i வெளிக் காந்தப் புலத்தின் காந்தத்தூண்டல் திசையன் B. க்கு எதிர்த்திசையில் அமையும். படம் 2. B D தனிமத்திற்கு அளிக்கின்ற வெளிக்காந்தப் புலத்தை நிறுத்தும்போது, தனிமத்தின் அணுக்களில் தூண்டப்பட்ட மின்னோட்டம் சுழியாகிறது. எனவே தனிமம் எதிர்காந்தவியல் பண்புகளை இழக்கின்றது. வெளிக்காந்தப்புலத்தினால் தனிமத்தின் அணுக் களில் உண்டாகும் தூண்டப்பட்ட மின்னோட்டம் அணுக்களின் முடிவுறா வெப்ப இயக்கத்தால் பாதிக்கப்படுவதில்லை. எனவே ஒரு தனிமத்தின் எதிர்காந்தவியல் பண்புகள் வெப்ப நிலையைச் சார்ந் திருக்கவில்லை என்பது புலனாகிறது. ஒரு தனிமத்தின் எதிர்காந்தவியல் பண்பு என்பது மிகச்சிறிய விளைவாகும். தனிமத்தின் காந்த உட் புகுதிறன் எண்மதிப்பு ஒன்றைவிடக் குறைவாகவே இருக்கும். மேலும் இத்தனிமத்தின் காந்த ஏற்புத் திறன் - 10-5 செ.மீ.S/மோல் என்ற மிகச்சிறிய அளவில் உள்ளது. தனி எலெக்ட்ரான்களில் எதிர்காந்தவியல். பழங் கொள்கைப்படி தனி எலெக்ட்ரானின் எதிர்காந்த வியல் மதிப்பு புறக்கணிக்கத்தக்கது. ஆனால் லான்டே என்பார் குவாண்டம் இயக்கவியல் முறையில் எதிர்காந்தவியலின் மதிப்பைக் கணக் கிட்டார். ஃபெர்மி -டிராக் புள்ளியியலில் அடங்கும் துகள்களின் வான்டே எதிர்காந்தவியல் மதிப்பு பாலி தற்சுழற்சி பாராகாந்தத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையே பெற்றிருந்தது. ஜா.சுதாகர் எதிர்த்துடிப்பு மின்னோடி 175 எதிர்த்துடிப்பு மின்னோடி இது ஒற்றைத் தறுவாய்த் தூண்டல் மின்னோடிகளில் ஒன்றாகும். இதன் வேக-திருக்கச் சிறப்பியல்புகள் தொடர்புல மின்னோடியைப்போல் அமைந்தவை. இவை அதிக தொடக்கத்திருக்கமும், எளிதில் வேக மாற்றமும் தரவல்லன. ஆகவே எக்கிகள், அழுத்தி கள் (compressors), பளு தூக்கிகள் போன்ற கருவி களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை மின்னோடியின் சுற்றகத்தில் (rotor), திரட்டி (commu- tator) இணைக்கப்பட்டுள்ளது. இதனால் உண்டாகும் மின்வில் போன்ற இடையூறுகளால் எதிர்த்துடிப்பு மின்னோடி (repulsion motor) அதிகத்திறனுடன் அமைக்கப்படுவதில்லை. அமைப்பும் இயங்கு முறையும். எதிர்த்துடிப்பு மின்னோடியின் சுழலகம் ஒரு நேர்மின் ஒட்ட மின் னோடியின் மின்னகம் போலவே அமைக்கப்படுகிறது. நிலையகத்தில் (stator) இரண்டு சுருணைகள் இருக் கும் (படம் 1). ஒன்றுக்கொன்று மின்முறையில் செங் குத்தாக இருக்குமாறு இந்தச் சுருணைகள் அமைக்கப் படுகின்றன. சுற்றகத்தின் திரட்டியின் மீது இரண்டு தொடிகள் (brush) குறுக்குமுக அச்சுக்கு இணையாக இருப்பதாகக் கொள்ளலாம். தொடிகள் இருக்கும் அச்சு பொதுவாக குறுக்குமுக அச்சு அல்லது மின் மாற்றி அச்சு (transformer axis) எனப்படும். நேர் முக அச்சு, கிளர்த்தும் அச்சு (exciting axis) என்றும், வேக அச்சு என்றும் குறிப்பிடப்படும். நேர்முக நேர்முக அச்சு குறுக்குமூக அச்சு சுழலகம் படம் 1. எதிர்த்துடிப்பு மின்னோடியின் அமைப்பு அச்சில் நிலையகத்தில் உள்ள சுருணையில் ஓடும் மின் னோட்டம் pa என் மின்காந்தப் பெருக்கை உண்டாக்குகிறது. குறுக்கு முக அச்சில் உள்ள சுருணையில் ஓடும் அதே மின் ஓட்டம் சுற்றகத்தின் தூண்டுதல் மின்னோட்டத்துடன் சேர்ந்து, pg என்ற மின்காந்தப் பெருக்கை குறுக்கு அச்சில் உண்டாக்கு கிறது. கூ-யும் யq- யும் சேர்ந்து சுற்றகத்தில்