எதிர்த்துடிப்பு மின்னோடி 177
அ.க. படம் 4. குறை மறிப்பு இருப்பு போல் மின்னோடி செயல்படுகிறது. திருக்கம் ஏற் படாததால் மின்னோடி இயங்காது. ஓடும் இருப்பு (running position). மேற்கூறிய இரண்டு இருப்புகளுக்கும் இடையில் தொடி அச்சினைக் கொணர்ந்தால், சுற்றகத்தில் மின்விசை தூண்டப்படுகிறது. மின்னோட்டம் தொடி மூலம் ஓடி திருக்கம் உண்டாகி, மின்னோடி ஓடும் தொடி அச்சுக்கும் நிலையகச் சுருணையின் அச்சுக்கும் உள்ள கோணம் & எனக் கொண்டால் (படம் 5), 1 ஆம்பியர் மின்ஓட்டம் Ts எண்ணிக்கை உள்ள சுற்றுக் களில் ஓடும்போது ITs அளவு காந்தவிசை (mmf) உண்டாகும். இதைத் தொடி அச்சில் ITs cosa என்றும், அதற்குக் குறுக்கு அச்சில் ITs sin & என்றும் எதிர்த்துடிப்பு மின்னோடி 177 பகுக்கலாம். ITs cosa காந்தப்புலத்தினால் சுற்ற கத்தில் மின்விசை தூண்டப்பட்டு மின் ஓட்டம் ஓடுகிறது.இதனால் ஏற்படும் மின் புலம், ITs மின் புலத்துடன் இடைவினை புரிந்து திருக்கம் உண்டாக்கு கிறது. ஆகவே மின்னோடி ஓடுகிறது. மின்னோடி சுற்றும் திசை படம் 5இல் காட்டப்பட்டுள்ளது. ITs என்ற காந்தவிசையும், ITs cosa என்ற காந்தவிசையும் ஒரே திசையில் இருப்பதால் இரண்டும் வடக்கு முனைகள் எனக் கொள்ளலாம். இவை ஒன்றை ஒன்று எதிர்க்கும். ஆகவே மின்னோடி ஓடும் திருக்கம் பெற்று காட்டப்பட்டுள்ள திசையில் ஒடுகிறது. மின்னோடி யைத் தொடக்கிவைக்க, மிகை மறிப்பு இருப்பில் முதலில் தொடி அச்சு வைக்கப்படுகிறது. பின்தொடி அச்சு, கடிகார எதிர்த்திசையில் சுற்றப்பட்டு, (படம் 5) ஓடும் நிலைக்கு வருகிறது. மின்னோடி, கடிகாரத் திசையில் சுற்றுகிறது. தொடி அச்சின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் மின்னோடி ஓடுவதால் இது எதிர்த் துடிப்பு மின்னோடி என்று பெயர் பெற்றது. வேகக் கட்டுப்பாடு பெற, -கோணத்தை மாற்ற வேண்டும், ஓடும் திசையினை மாற்ற தொடி அச்சை மறிப்பு இருப்பிலிருந்து கடிகாரத் திசையில் சுழற்ற வேண்டும். மின்னோடி இப்போது, கடிகார எதிர்த் திசையில் சுழலும். இவ்வாறாகத் தொடக்கம், கட்டுப் பாடு, திசைத் திருப்பம் இவை யாவும் எளிதில் தொடி அச்சின் நிலை மாற்றம் பெற இயலும். மிகை தொடி அச்சின் நிலைக்கும் திருக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் படம்- 6 விளக்குகிறது. பொது வாக & = 15° முதல் 40° வரை அதிக திருக்கம் ஏற்படுகிறது. 6-12 I ITs Sinc ITS ITs Cos திருக்கம் 20 10- 30 40 எதிர்த்துடிப்பு மின்னோடி படம் 5. ஓடும் இருப்பு சுற்றுத்திசை 20 A BQ 100° குறைமறிப்பு நிலையிலிருந்து தொடி அச்சின் கோணம் படம் 6. தொடி அச்சு நிலையும், திருக்கமும் எதிர்த்துடிப்பு மின்னோடியின் திருக்கவேகச் சிறப்பியல்புகள் படம் 7இல் வரையப்பட்டுள்ளன.