எதிர்ப்பு, காந்த 179
உணரலாம். அத்துளைகளுக்கு நேர்மின்னூட்டத் துடன் கூடிய எலெக்ட்ரான்களின் எல்லாத் தன்மை களும் இருக்கும். த்துளைகளை நேர் எலெக்ட் ரான்களாக, பாசிட்ரான்களாகக் கருதலாம். அதாவது எதிர்த்துகள்கள். டிராக்கின் பாசிட்ரானை 1932- ல் C,D, ஆண்டர்சன் தம்முடைய முகில் அறைக் கருவி மூலம் கண்டார். இவ்வாறே எதிர்ப் புரோட்டானும் எதிர் நியூட்ரானும் இருக்கின்றனவா என்பதற்கு டிராக்கின் கொள்கையில் விளக்கமில்லை. ஆனால் இந்த ஐயப்பாடு 1955-இல் ஓவன் சேம்பர் லைன் முதலாக மூவர் பெர்க்லின் பிவாட்ரான் முடுக்கி மூலம் எதிர்ப் புரோட்டான்களைக் கண்டு பிடித்ததன் விளைவாகத் தீர்ந்தது. பிவாட்ரான் கருவி கொண்டு பின்னர் எதிர் நியூட்ரான்களும் கண்டுபிடிக்கப்பட்டன. துகள் எதிர்த்துகள் அழிவு. ஒரு துகளும் அதன் எதிர்த்துக்களும் இணையும்பொழுது அவை ஒன்றை யொன்று அழித்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக ஒரு பாசிட்ரான் அதன் எதிர்த்துகளான எலெக்ட் ரானுடன் இணையும்பொழுது அவை இரண்டும் மறைந்து, இரண்டு காமாக் -கதிர்கள் எதிரெதிர்த் திசைகளில் வெளிப்படுகின்றன. இக்கதிர்கள் எலெக்ட்ரான் பாசிட்ரானின் ஓய்வுநிலை ஆற்றலைப் பங்கிட்டுக் கொள்கின்றன. புரோட்டான் எதிர்ப் புரோட்டான் ஒன்றையொன்று அழித்துக் கொள்ளும் பொழுது மெசான்கள் வெளிப்படுகின்றன. இந்த மெசான்கள் விரைவில் எலெக்ட்ரான்களாகவும், பாசிட்ரான்களாகவும் நிறையற்ற நியூட்ரினோக் களாகவும், ம -கதிர்களாகவும் சிதைகின்றன. புவியில் ஒரு கிராம் பருப்பொருளும் ஒரு கிராம் எதிர்ப் பருப்பொருளும் ஒன்றையொன்று அழித்து 5× 10 கிலோ வாட் மணி ஆற்றலை வெளிப் படுத்தும். துகளுக்கும் எதிர்த்துகளுக்குமிடையே உள்ள பிற வேறுபாடுகள். இதுவரை துகளுக்கும் மற்ற துகளுக்கு மிடையே மின்னூட்ட வேறுபாடு மட்டும் காட்டப் பட்டது. இதைத்தவிர பிற வேறுபாடுகளும் உள்ளன. நியூட்ரானுக்கும் எதிர் நியூட்ரானுக்கும் மின் னூட்டமில்லாத போதும் நியூட்ரானின் தற்சுழற்சி யுடன் கூடிய காந்தத் திருப்புதிறன் அல்லது காந்த விளைவு அதன் எதிர்த்துகளுக்கு உள்ளது போலில் லாமல் எதிர்மாறாக உள்ளது. மெசான், ஹைபரான் போன்ற பிற துகள்களும் அவற்றின் எதிர்த்துகளி லிருந்து சில தன்மைகளில் மாறுபட்டு உள்ளன. எதிர்ப் பருப்பொருளின் கட்டமைப்பு. பேரண் டத்தில் இயல்பாகக் காணப்படாத எதிர்ப்புரோட் டான்களும் பாசிட்ரான்களும் நிலையற்றனவாகவும் மெய்யற்றனவாகவும் தோன்றினாலும் அவை உண்மையில் அவற்றின் எதிர்த்துகள்கள் போன்று அ.க. 6-12அ எதிர்ப்பு, காந்த 179 வாழ்வு நேரமும், நிலைத்தன்மையும் உடையவை. அண்டவெளியில் சாதாரண பருப்பொருள் போன்று எதிர்ப் பருப்பொருள்கள் கணக்கற்ற அளவில் இல்லை என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காண்ட ஆனால் எதிர்ப் பருப்பொருள்களை மட்டும் அண்டவெளியில் இயல்பான பருப் பொருளும் இவ்வாறே குறைவாகக் காணப்படும் என்பதில் ஐயமில்லை. மேலும் இடவலப் பரிமாற்ற முடைய சில சிறப்பு ஆய்வுகள் தவிர மற்ற எல்லா வற்றிற்கும் பருப்பொருளுக்கான இயற்பியல், வேதியியல் விதிகள் எதிர்ப்பருப் பொருள்களுக்கும் பொருந்தும். தனித்தனியான எதிர்த்துகள்களின் கண்டுபிடிப் பைத் தவிர எதிர்ப் பருப்பொருளுக்கான இரண்டு கட்டமைப்புக்கள் தயாரிக்கப்பட்டு ஆராயப்பட்டன. அவற்றில் ஒன்று பாசிட்ரானையும் எலெக்ட்ரானை யும் உள்ளடக்கிய பாசிட்ரானியம் என்ற குறைந்த ஆயுள் உள்ள ஓர் அணுவாகும். இப்பாசிட்ரானியத் திலும் இரண்டு துகள்களும் சம நிறை கொண்டுள்ள மையால், அது ஹைட்ரஜனின்று மாறுபட்டது. எதிர் எதிர்ப் நியூட்ரானையும், புரோட்டானையும் கொண்ட எதிர் டியூட்ரியம் அணுக்கரு ஒன்றும் உயர் ஆற்றல் ஆய்வு மூலம் காணப்படுகிறது. சீ. ராஜன் நூலோதி.P.C.W. Davies, The Forces of Nature, Cambridge University Press, 1979. எதிர்ப்பு, காந்த மின் சுற்றில் மின் தடை ஏற்படுவது போல, காந்தச் சுற்றிலும் எதிர்ப்பு உண்டு. காந்தப் பாயத்தின் (magnetic flux) ஒவ்வொரு கோடும் ஒரு மூடிய பாதையாகும். நன்கு வரையறுக்கப்பட்ட மூடிய பாதையில் மட்டுமே காந்தப்பாயம் இருப்பின் அங்கு காந்தச் சுற்று இருக்கும். அப்பாதையிலிருந்து பிரிந்து செல்லும் காந்தப்பாயம், காந்தப்பாயக் கசிவு (flux leakage) எனப்படுகிறது. காந்தப்புலம் Hஇல் ஏதாவது ஒரு மூடிய சுற்றின் நீளம் 1 எனில், பாதையின் காந்தச் செலுத்துவிசை பாதையைச் சுற்றிய கோட்டுத் தொகுப்பு HCosadi ஆகும். இங்கு & -என்பது பாதைக்கும் காந்தப்புலத்திற் கும் இடைப்பட்ட கோணம். காந்தப்பாயம் ? எனில் காந்தச் செலுத்துவிசை (mmF) = Hcosad ஆகும். ஒவ்வொரு கடத்தியிலும் 1 மின்னோட்டம் கொண்ட N கடத்திகளைக் காந்தப் இணைப்பின், காந்தச் செலுத்துவிசை NI = p Hcosad ஆகும். படத்தில் காண்பது போன்ற நெருங்கிய சுற்றுக் வளையத்தை எடுத்துக் கொள்ளலாம். கள் உள்ள பாதை