எதிர்ப்பொருள் (மருத்துவம்) 183
கால் ஆகியவற்றில் நோய், குதிரையில் காணப்படுவ தில்லை. இதன் முக்கியத்துவம் நோயை உண்டாக்கக் கூடிய நோய்க் கிருமிகளும் கால்நடைகளின் இனமும் வெவ்வேறாக உள்ளதே ஆகும். ன ஒரே இன எதிர்ப்பாற்றல் (racial immunity). இனத்திலுள்ள கால்நடைகளோ தாவரங்களோ மற்றவற்றை விட நோயைத் தாங்கக்கூடிய ஆற் றலைப் பெற்றவை. இவை தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தின் மூலம் தாமாகவே திடீர் என்று வரக்கூடியவையாகும். தனிப்பட்ட எதிர்ப்பாற்றல் (ind.vidual immunity). இது ஒரு தனிப்பட்ட வரிடமோ கால்நடையிலோ உள்ள எதிர்ப்பாற்றலாகும். சான்றாக ஊர் முழுதும் காலரா நோய் கண்டிருந்தாலும் ஓரிருவர் பாதிக்கப் படுவதில்லை. அதேபோல் மாடுகளில் ஊர் முழுதும் வெக்கை நோய் கண்டிருந்தாலும் ஓரிரு மாடுகளில் அந்த நோய் காணப்படுவதில்லை. வெளியிடத்திலிருந்து பெறப்பட்ட செயற்கை எதிர்ப் பாற்றல் (acquired immunity). இதனை வீரியம், வீரியமற்ற எதிர்ப்பாற்றல் என (active and passive immunity) இரு வகையாகப் பிரிக்கலாம். வீரியம் உள்ள எதிர்ப்பாற்றலை வெளியிடத்தின் மூலமாக ஒரு நோயால் பாதிக்கப்பட்டோ இந்த எதிர்ப்பாற் றலை உண்டாக்க நச்சு அல்லது வீரியமற்ற நோய் கிருமிகளைக் கொண்டோ பெற முடியும். இத்தகைய பொருள்களுக்கு எதிர்செனி (antigen) என்று பெயர். இவை மூலமாகக் கிடைக்கப் பெறும் ஆற்றல் எதிர்ப் பொருள் ஆற்றல் எனப்படும். இவ்வாறு கிடைக்கப் பெறும் எதிர்ப்பாற்றல் அதிக வீரியமிக்கதாகவும் நீண்ட நாள் நீடித்திருப்பதாகவும் இருக்கும். வீரியமற்ற எதிர்ப்பாற்றல். இந்த எதிர்ப்பாற்றல் ஒருவரிடமிருந்து மற்றொருவர் நேரடியாகப் பெற்றுக் கொள்வதாகும். இதனால் கிடைக்கும் எதிர்ப்பாற்றல் அந்த எதிர்ப்பொருள் உடலில் இருக்கும் வரை காணப்படும். இந்த எதிர்ப்பாற்றல் இரண்டு அல்லது மூன்று வாரம் தான் நீடிக்கும். இவ்வாற்றலைத் தாயிலிருந்து சேய் பெற்றுக்கொள்கிறது. இதே போல் இந்த எதிர்ப்பாற்றலை ஊசியின் மூலமாகவும் ஓர் உயிரினத்திற்குக் கொடுக்கலாம். சான்றாகத் தாயிலிருந்து சேய்க்குக் கிடைக்ககூடிய எதிர்ப்பாற்றல் காலம் வரை ஆறு மாத இருக்கும். இந்த எதிர்ப்பாற்றல் தாயினுடைய இரத்தத்தின் மூல டைக்கிறது. இதைச் சேயானது மாகச் சேய்க்குக் தாயோடு இணைந்திருக்கும் கொப்பூழ்க் கொடியின் வழியாகப் பெறுகிறது. மற்றொரு வழி குழந்தையோ கன்றுகளோ பிறந்தவுடன் தாயின் மூலமாகக் கிடைக் கும் சீம்பால் வழியாக எதிர்ப்பொருள்களை நேரடி யாகப் பெறுகிறது. எதிர்ப்பொருள் (மருத்துவம்) 183 தனால் சேய் நோயினின்று ஆறு மாத காலம் வரை தன்னைக் காத்துக் கொள்ள இயலும். ஆதலால் குழந்தை அல்லது கன்று பிறந்தவுடனேயே சீம்பாலை முதல் முதலாகக் கொடுக்க வேண்டும். குழந்தை அல்லது கன்று பிறந்தவுடனே சீம்பால் கொடுத்தால், இதில் உள்ள எதிர்ப்பொருள்கள் எந்தவிதத்திலும் மாறாமல் சிறுகுடல் வழியாக உட்கவரப்படுகிறது. மேலும் குழந்தை அல்லது கன்று வயிற்றில் இருக்கும் கழிவுப் பொருள்களையும் வெளியேற்ற உதவுகிறது. சீம்பால் குழந்தை அல்லது கன்று பிறந்தவுடன் கொடுக்க இயலாதபோது, வேறு ஒரு தாயின் மூல மாகப் பெற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். வீரிய மற்ற எதிர்ப்புச்சக்தி மனிதன்,எலி,பன்றி,வெள் ளெலி, முயல் ஆகியவற்றில் தாயினின்று சேய்க்குக் கொப்பூழ்க் கொடி மூலம் கிடைக்கிறது. குதிரை, மாடு, ஆடு, வெள்ளாடு, பன்றி, நாய், பூனை ஆகிய வற்றின் சீம்பால் மூலமாக எதிர்ப்பாற்றல் தாயிட மிருந்து சேய்க்குக் கிடைக்கிறது. . ஒரு நோய் உண்டானாலோ வீரியஎதிர்ப்பொருள் கள் ஊசிமூலம் உட்செலுத்தப்பட்டாலோ அந்த நோய்க் கிருமிகளை எதிர்க்க இரத்தத்தில் எதிர்ப் பொருள்கள் உண்டாகின்றன. இவை அந்த நோய்க் கிருமிகளோடு போராடி அவை வளருவதைத் தடுப்ப தோடு கிருமிகளை அழித்து நோய் வாராமல் செய் கின்றன. இரத்தத்தில் இந்த எதிர்ப்பொருள்கள் இருக் கும்வரை நோய் அறிகுறிகள் இருப்பதில்லை. எதிர்ப் பொருள் எண்டோத்தீலிய வலைப்பின்னல், நிணநீர்த் தொகுப்பு. கோழிக் குஞ்சுகளில் பர்ஸா ஃபேப்ரிசி (bursa fabrici) எலும்பு மஜ்ஜை, இரத்தப் பிளாஸ்மா ஆகியவற்றில் உற்பத்தியாகின்றன. எதிர்ப்பொருள் (மருத்துவம்) -பி. என். சௌரி . பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் இரத்தத்திலுள்ள எதிர்ப்பொருளைப் பற்றிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. எதிர்செனியை (antigen) உடலில் செலுத்தியவுடன் ஊன் நீரிலும், திசு நீர்மத்திலுமுள்ள எதிர்ப் பொருளுடன்(antibody) அது இயங்கி ஒரு விளைவை ஏற்படுத்துவது உறுதி. இவ்விளைவைப் பொறுத்து எதிர்ப் பொருள்கள், ஒருங்கொட்டுப் பொருள்கள் (agglutinins) படிவப் (precipitinins) பொருள்கள் உண்டாயின. கிருமி தடைக் எதிர்ப் களின் தாக்குதலுக்குப் பின்னரோ. காப்புறுதிக்குப் பின்னரோ ஊனீரில் பொருள்கள் மிகுந்து காணப்படும். அத்தகைய ஊன் நீருக்குத் தடைக்காப்புறுதி நீர் என்று பெயர். தடைக் காப்புறுதி ஊன் நீரின் கூறுபாடு: