186 எதிர் மின்கதிர்
186 எதிர்மின் கதிர் படம் 3. எதிர்மின் கதிரின் நேர்கோட்டுப்பாதை சையாசு எதிர்மின் கதிரின் இயக்கப்பாதையில், தன்னிச் இயங்கக் வகையில் பளுவற்ற கூடிய மெல்லியதொரு பொருளை வைத்தால், அதன்மீது ஒரு விசை செயல்பட்டு, அப்பொருள் எதிர்முனையை விட் விலகிச் செல்வதற்குக் காரணமாகின்றது. இரு பாளங்களின் மீத் து சுழன்று இயங்கக் கூடிய காற்றாடியை வைத்து, அதன் விசிறிகளில் எதிர் முனைக் கதிர் விழும்படிச் செய்தால், அது சுற்றிய வண்ணம் நகர்கிறது (படம் 4). இவற்றிலிருந்து எதிர்மின் கதிர்கள் உந்தமுடையவை என்பதை உணர்ந்து கொள்ளலாம். எதிர்மின் படம் 4. நேர்மின் எதிர்மின் கதிர்கள் ஒரு பொருளின் மீது குவிக்கப் படும்போது அப்பொருள் வெப்பப்படுத்தப்படுகின்றது. எதிர்மின் கதிர்கள் தாக்குதலுக்கு உட்பட்ட பல படிகங்களும் தாதுப் பொருள்களும் உப்புகளும் ஒளிர்தலை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டு களாகக் கண்ணாடி, பொட்டாசியம் பிளாட்டினோ சைனைடு, துத்தநாக சல்ஃபைடு இவற்றைக் குறிப் பிட்டுச் சொல்லலாம். எதிர்மின் கதிர்கள், சாதாரண ஒளியைப் போன்று ஒளிப்படத் தட்டுகளைப் பாதிக் கின்றன. எதிர்மின் கதிர்களின் இத்தகைய பண்பு களைக் கொண்டே அவற்றை ஆய்ந்தறிந்து கொள் கின்றார்கள். எதிர்மின் கதிர்கள் ஊடகத்தை அயனியாக்கு கின்றன. இதிலிருந்து அவை மின்னூட்டம் பெற்ற துகள்களாக இருக்கலாம் என அறிய முடிகின்றது. இக்கதிர்கள் ஓர் உலோக இலக்கின்மீது விழுமாறு செய்தால், அதிலிருந்து எக்ஸ்-கதிர்கள் உற்பத்தி யாகின்றன. எதிர்மின் கதிர்கள், மின் புலத்தாலும், காந்தப் புலத்தாலும் விலக்க முறுகின்றன. அவை ஏற் படுத்தும் விலக்கத்திலிருந்து, எதிர்முனைக்கதிர்கள் எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் எனத் தெரிந்து கொள்ளமுடிகின்றது. எதிர்முனைக் கதிர்களின் இப்பண்பைப் பயன்படுத்தி ஜே.ஜே. தாம்சன் என் பார் அதன் மின்னூட்ட நிறைத்தகவையும் (c/m). மில்லிகன் என்பார் மின்னூட்டத்தையும் (e), ஆய்வுமூலம் அளந்து அம்மதிப்புகளில் இருந்து அவற்றின் நிறையைக் கணித்தனர். அம்மதிப்பீடுகள் e{m 1.75879×1011 கூலும்/கிலோகிராம்,e 1.60210 X 10-19 கூலும். m = 9.10908.10-31 கிலோகிராம் ஆகும். = எதிர்மின் கதிரில் உள்ள துகள்கள் எலெக்ட் ரான்களே ஆகும். கதிரியக்க அணுவிலிருந்து வெளிப் படும் பீட்டாக் கதிர்களும் (beta rays) எலெக்ட் ரான்களே என்றாலும், அவை அணுக்கருவிலிருந்து உமிழப்படும் அதிவேக எலெக்ட்ரான்களாகும். எதிர் மின் கதிரில் உள்ள எலெக்ட்ரான்கள் அணுவின் சுற்றுப்பாதைகளில் உள்ள எலெக்ட்ரான்களாகும். இவை பீட்டாக் கதிரோடு ஒப்பிட, ஆற்றல் மிகத் தாழ்ந்தனவாகும். பயன்கள். உயிர் இயற்பியலில் எதிர்மின் கதிர் களின் பயன்கள் பலவாக விவரிக்கப்பட்டுள்ளன. எதிர்மின் கதிர் அலைவு காட்டி (cathode ray oscillogrgoh) மின்னணுவியல் துறையில் மிகவும் பயனுள்ள சாதனமாகப் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்மின் கதிர்கள் தொலைக்காட்சி நிலையங்களில் உள்ள ஒளி - மின் அலைமாற்றிகளிலும், தொலைக் காட்சிப் பேழைகளில் உள்ள மின் அலை-ஒளி மாற்றி களிலும் சிறந்த பங்கேற்றுள்ளன. பல இலட்சம் மடங்கு பெரிதாகக் காட்டவல்ல உருப்பெருக்குத் திறன் மிக்க எலெக்ட்ரான் உருப்பெருக்கிகளில் எதிர் மின் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. துகள் முடுக்கும் பொறிகளில் அயனியாக்கம் செய்வதற்கு