எதிர் முழக்கம் 187
எதிர் முழக்கம் 187 எதிர்முனைக் கதிர்களையே பயன்படுத்துகின்றார்கள். பல்வேறு வகையான பதிவு செய்தல், படிஎடுத்தல், காட்சிப்படுத்துதல் முறைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளிலும் எதிர்மின் கதிர்கள் பயனுள்ளவையாக உள்ளன. மெ. மெய்யட்பன் எதிர் முழக்கம் ஒரு மூடிய இடத்திற்குள் ஒலி எழுப்பப்பட்ட பின்பு அல்லது ஒலி நுழைந்த பின்பு அது அவ்விடத்தின் எல்லைப் பரப்புகளிலிருந்து மீண்டும் மீண்டும் எதி ரொலிக்கப் படுகிறது. ஒலியின் மூலம் ஒலியை நிறுத்திய பிறகும் இந்த எதிரொலி நீடிக்கிறது. ஒலி மூலம் ஒலியை நிறுத்திய பின்னரும் இவ்வாறு ஒலி நீடித்துக் கேட்கப்படுவதே எதிர்முழக்கம் (rever- beration) எனப்படும். ஓர் அறையின் ஒலியியல் தன் மைக்கு ஓரளவான எதிர்முழக்கம் இனிமை ஊட்டவே செய்கிறது. ஆனால் எதிர் முழக்கம் அளவுக்கு மீறிப் போனால் நல்ல முறையில் வடிவமைத்துக் கட்டப் பட்டிருக்கிற அறை அல்லது அரங்கின் ஒலியியல் பண்புகள் கூடக் குலைக்கப்பட்டுவிடும். படத்தில் ஓர் அறையில் ஒலிமூலம் ஒலி உமிழ்வதை நிறுத்திய பிறகு ஒரு புள்ளியில் ஒலி அழுத்த மட்டம் நேரம் செல்லச் செல்லப் படிப்படியாகக்குறைகிற பாங்கு காட்டப்பட்டிருக்கிறது. ஒலி அழுத்தச் செறிவு சிதைவடைகிற தன்மை சீராக இல்லாமல் ஒரு சராச ரியான சரிவுடன் ஏறி இறங்குவதாக அமைந்திருக் கிறது. எதிர்முழக்கநேரம்: அறைகளில் எதிர்முழக்கம்தக்க முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டியது இன்றிய மையாதது. இதன் பொருட்டு எதிர் முழக்க நேரம் என்ற ஒரு செந்தர அளவு நிறுவப்பட்டிருக்கிறது.இது tea எனச் சுருக்கமாகக் குறிக்கப்படுகிறது. ஒலி மூலம் ஒலியை உமிழ்வதை நிறுத்திய கணத்திலிருந்து ஒலி அழுத்தம் தனது தொடக்க அளவில் ஆயிரத்தில் ஒரு பங்காகக் குறைய ஆகிற நேரமே எதிர் முழக்க நேரம் எனப்படும். ஒலி அழுத்த மட்டத்தில் 60 டெசி பெல் குறைவதற்கு ஆகும் நேரமாகவும் இதை வரை யறுக்கலாம். விருப்பமான எதிர்முழக்க நேரம் என்பது தனி நபரின் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது. இசையொலிக்கான விருப்ப எதிர்முழக்க நேரம் சையொலியின் தன்மையையும் பொறுத்தது. உரைகள் அல்லது சொற்பொழிவுகளுக்கு மட்டும் என அமைந்த அறைகளில் விரும்பிய எதிர் முழக்க நேரம் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். அது அளவுக்கு மீறி இருந்தால் பேச்சு ஒலிகளைத் தனித் தனியாகப் பிரித்துணர முடியாமல் போகும். வார்பு ஒலியழுத்த மட்டம் டெசி 80T 70 60 50 40 0.2 0.4 0.6 0.6 0.8 நேரம் வினாடி எதிர்முழக்கத்தின் சிதைவு வரைகோடு மோதலிடைத்தொலைவு: வடிவ ஒலியியல்(geometr icaloptics) கொள்கைப்படி ஒரு மூலத்திலிருந்து நாலா பக்கத்திலும் வெளிப்படுகிற ஒலி அறையின் சுவர் களிலிருந்து அடுத்தடுத்து எதிரொலிக்கப்படுகிறது. இவ்வாறு எதிரொலிக்கும் பரப்புகளுக்கிடையிலான சராசரித் தொலைவு மோதலிடைத் தொலைவு (mean free path) எனப்படும். ஓர் அறையில் ஓர் ஒலிக் சுதிரின் மோதலிடைத் தொலைவு அறையின் வடி வத்தையும் பரிமாணத்தையும்பொறுத்தது. அத்துடன் அது அறையிலுள்ள ஒலியை உட்கவரும் பொருள் களின் தன்மையையும் பரவீட்டையும் கூட ஓரளவுக் குப் பொறுத்திருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான சமயங்களில் அது தோராயமாக 4 V/S என்ற அளவுக் குச் சமமாகவே உள்ளது. இதில் V என்பது அறையின் கொள்ளளவு, S என்பது அதிலுள்ள மொத்தப் புறப் பரப்பின் அளவு. சிதைவு வீதம். ஒரு சிதையும் ஒலி அலை ஒரு விநாடியில் செய்யும் எதிரொலிப்புகளின் எண்ணிக்கை, அதன் திசை வேகத்தின் எண்மதிப்பைச் சராசரி மோதலிடைத் தொலைவினால் வகுத்தால் கிடைக் கும். 20°C இல் உள்ள உலர்ந்த காற்றில் ஒலி ஏறத்தாழ விநாடிக்கு 343 மீட்டர் அல்லது 1130 அடி என்ற திசைவேகத்துடன் பரவுகிறது. எனவே ஒரு விநாடியில் ஏற்படும் எதிரொலிப்புகளின் எண்ணிக்கை 343S/4V ஆகும். ஓர் ஒலி அலை ஓர் எல்லைப் பரப்பில் ஒவ்வொரு முறை மோதும் போதும் அதன் ஆற்றலில் a என்ற பின்னம் கவரப்பட்டு எஞ்சியுள்ள (1-a) என்ற பின்னம் எதிரொலிக்கப் படுகிறது. அறையில் S,S,... என்ற புறப் பரப்புகளும் a ag என்ற உட்கவர் குணகங் களும் (absorption coefficients) கொண்ட பகுதிகள் இருந்தால் a, S,+a, S, +... ஒலி அழுத்தம் S,+S,+... α = உட்