பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 எதிர்‌ விகித இருமடி விதி

192 எதிர் விகித இருமடி விதி வதும், இனம் பெருக்குவதும் எல்லாமே ஒட்டுண்கை யினால் தாம். அக-புற ஒட்டுண்ணிகள் ஓம்புயிரியின் உடல் வெளிப்பரப்பில் ஒட்டிக் கொண்டோ, பற்றிக்கொண்டோ வாழும் ஒட்டுண்ணி கள் புறவொட்டுண்ணிகள் (ectorarasites) ஆகும். ஓம்புயிரியின் உடலிலுள்ள பல்வேறு உறுப்புகளில் ஒட்டுண்ணிகளாக வாழ்பவை. அகவொட்டுண்ணி அகவொட்டுண்ணி களாம் (endoparasites). இந்த களையும் மீண்டும் இரு ஓம்புயிரி உடலின் செல்களின் உள்ளே இருக்கக் கூடியவை செல் அகவொட்டுண்ணிகள் (intracellular parasites) ஆகும். ஓம்புயிரி உடலுக்குள், செல்களுக்கு வெளியே, அவற்றின் இடையேயுள்ள இடங்களில் உறைபவை, செல் இடை அகவொட்டுண்ணிகள் வகையாகப் (intercellular parasites) ஆகும். பகுக்கலாம். வாய்ப்புகள் ஒத்துவரும் வேளைகளில் மட்டுமே ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து, பிற நேரங்களில் தனி வாழ்க்கை வாழுந்திறன் பெற்றவை தகவிய ஒட்டுண் ணிகள் (facultative parasites) எனப்படுகின்றன. ஒட்டுண்ணிகளாக மட்டுமே வாழுந்திறன் கொண்டு, ஓம்புயிரிகள் இல்லாத இடத்திலும். சூழலிலும் நசித்துப் போகும் உயிரிகள் கடப்பாட்டு ஒட்டுண்ணிகள் (obligatory parasites) ஆகும். மீவொட்டுண்ணி வகை ஓர் ஒட்டுண்ணியின் மீது பிறிதோர் உயிரி ஒட்டுண்ணியாக வாழுமேயானால், அத்தகு நிலை மீவொட்டுண்கை என்றும், அத்தகு உயிரி மீவொட் டுண்ணி (hyper parasite) என்றும் வழங்கப்பெறும். கொன்றுண்ணல். ஓர் உயிரி பிறிதோர் உயிரியைக் கொன்று அதன் மூலம் தன் உணவினைப் பெற்று உயிர் வாழ்வதே கொன்றுண்ணல் ஆகும். இது சுரண்டுமுறை வாழ்வில் ஒரு முறையாகும். பாம்பு தவளையைப் பற்றி உண்பதும், புலியும் சிங்கமும் மானை,மாட்டை வேட்டையாடி உண்பதும், காட்டு விலங்குகள் பசிதீரப் பலவித உயிர்களைத் தேடியவை வதும் கோறல் வகையாகும். ஒட்டுண்ணிவகை, கோறல்வகை இரண்டுமே ஓர் உயிரி இன்னொரு உயிரியைச் சுரண்டி வாழும் செயல் தான். ஒட்டுண்ணி தன் உறையுளுக்கும், உணவிற்கும் ஓம்புயிரையை நாடுகிறது: எனவே, ஓம்புயிருக்கு மிகவும் தீங்கிழைத்தால் அது தன் வசதி வாய்ப்பு களையே இழக்க வேண்டி வரும். கோறல்வகை தன் ரையை அடித்து வீழ்த்தி, அதன் மரணத்தில் தன் வாழ்வைக் கழிக்கிறது. கோறல் உண்ணி முதலீட்டில் வாழ்கிறது; ஒட்டுண்ணியோ வட்டியில் வாழ்கிறது என இதனை எல்ட்டன் என்பார் ஒரு முறை வேடிக்கையாகக் குறிப்பிட்டார். போட்டி முறை எதிர்வாழ்வு. வாழ்க்கைப் போராட் டத்தில் ஒன்றுக்கொன்று போட்டியிடும்போது எதனிடம் வலிமையும் வாய்ப்பும் அதிகமோ அவ்வுயிரி வெற்றி பெறுவதே இம்முறையாகும். வளி இது வகையுள் போட்டி, வகையிடைப் போட்டி எனப் பிரிக்கப்படும். ஒரே வகையைச் சார்ந்த விலங்குகள் தங்களுக்குள் உணவு, உறைவிடம்,ஒளி, போன்றவற்றிற்காகப் போட்டியிடுவதுதான் வகையுள் போட்டி (intraspecific competition). ஒரு சிறிய காட்டில் மிகவதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் அவை தங்களுக்குள் இடத்திற் இருக்குமேயானால், காகவும், உணவிற்காகவும் போட்டியிட வேண்டி வரும். வெவ்வேறு வகையைச் சேர்ந்த விலங்குகள் கூடத் தங்களின் தேவைகளுக்காக, ஒன்றிற்கொன்று போட்டியிடும் சூழலைத்தான் வகையிடைப் போட்டி (interspecific competition) என்பர். இருவேறு வகை விலங்குகள் ஓரிடத்தில் வாழும் போது, வலிமையும், திறமையும், மிகுதியும் இருக்கக்கூடிய உயிரி, அவை குறைந்துள்ள மற்றோர் உயிரியை விடத் தன் தேவை களை நிறைவு செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு; அத்தகைய சமயங்களில் அவை வெற்றி பெறுவதும் உண்டு. சுதா சேஷய்யன் எதிர் விகித இருமடி விதி இரு பருப்பொருள்களுக்கிடையே செயல்படும் ஈர்ப்பு விசை, இரு மின்னூட்டங்களுக்கிடையே செயல்படும் நிலைமின் விசை, இரு காந்த முனைகளுக்கிடையே செயல்படும் காந்த விசை இவற்றின் அளவைக் கணக்கிட எதிர் விகித இருமடி விதி (inverse square law) பயன்படுகிறது. இவ்விதி நியூட்டன் கூலூம் போன்ற அறிவியலாரால், பட்டறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்டதெனினும், அடிப்படைத் துகள் முதல் அண்டவெளியில் காணப்படும் விண்மீன்கள் வரை இயற்கையில் காணப்படும் பல அமைப்புக்களின் இயக்கங்களை வை மிக நுணுக்கமாக வரையறுக்கக் கூடியனவாக இருப்பதால் இவற்றை உலகளாவிய பொது விதிகளாகக் கொண்டுள்ளனர். மற்றும் ஈர்ப்பு பேரண்டத்தில் உள்ள விண்மீன்கள் கோள்களின் இயக்கங்களுக்குக் காரணமான விசை தொடர்பான விதியை நியூட்டன் என்பார் முதலில் நிறுவினார். இதன்படி இப்பேரண்டத்தில் ஒவ்வொரு பருப்பொருளும் மற்றொரு பருப்பொரு