எதிர் விகித இருமடி விதி 193
ளைக் கவர்ந்திழுக்கின்றது எனலாம் (படம்). இந்த விசை இருபருப்பொருள்களின் நிறை மையங்களை இணைக்கும் நேர்கோட்டுத் திசையிலும், அதன் அளவு பருப்பொருள் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர் விகிதத்திலும், இடைத் தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் இருக்கும். M Fg ஈர்ப்புவிசை இதைக் கணிதவியல்படி லாம். M,m
=
Fx = GM m m பின்வருமாறு குறிப்பிட பருப்பொருளின் நிறைகள்; x என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு; G என்பது ஒரு மாறிலி. இது ஈர்ப்பு மாறிலி என்றும் குறிப்பிடப் படும். இதன் மதிப்பு ஒரு கிலோ கிராம் நிறையுடைய ஒரு பொருள், அதற்கு ஒரு மீட்டர் தொலைவில் உள்ள, அதே நிறையுள்ள மற்றொரு பொருளை ஈர்ப்பின் காரணமாகக் கவர்ந்திழுக்கக் கூடிய விசையின் மதிப்பாகும். G - இன் மதிப்பு ஈர்ப்பில் ஈடுபடும் பருப்பொருள்களின் நிறையைப் பொறுத்த தன்று. நாம் எடுத்துக் கொள்ளும் அலகுமுறையைப் பொறுத்தே இதன் அமைப்பு அமைகின்றது. பன்னாட்டுச் செந்தர அலகு முறையில் (international standard) இதன் மதிப்பு 6.6732× 10-11 நியூட்டன்- மீட்டர் /கிலோகிராம்' ஆகும். இதுகோள்களின் இயக் கம், துணைக் கோள் (satellite) மற்றும் செயற்கைக் கோள் (Artificial satellite) களின் இயக்கம், கடல் அலைகள் (tides) போன்றவற்றை விளக்கக் கூடியதாக இருக்கின்றது. பெரும்பாலான விண்பொருள்களின் நிறையை இவ் விதியைக் கொண்டே மதிப்பீடு செய்திருக்கின்றார்கள். செயற்கைக்கோள் ஒன்றின் சுற்றுப்பாதை ஆரத்தைக் கணக்கிட இவ்விதி பயன்படுத்தப்படுகின்றது. அ.க.6-13 எதிர் விகித இருமடி விதி 193 மின்னூட்டம் நேர் (positive) எதிர் (negative) வகையாக இருக்கலாம். புரோட்டான் பெற்றிருக்கும் மின்னூட்டம் நேர் வகையானது. எலெக்ட்ரான் பெற்றிருக்கும் மின்னூட்டம் எத் எதிர் வகையானது. ஒரே வகை மின்னூட்டமுடைய துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் மாறு பட்ட வகை மின்னூட்டமுடைய துகள்கள் ஒன்றை ஒன்று கவர்ந்திழுக்கின்றன. இதற்குக் காரணமான விசையை நிலைமின் விசை என்கிறார்கள். ஈர்ப்பு விசை போல ஓர் எதிர் விகித இருமடி விதியால், நிலைமின் விசையின் அளவை, கூலும் என்பார் நிறுவினார்.Q.g என்பன r இடைவெளியுடன் கூடிய இரு மின்னூட்டங்கள் எனக் கொண்டால், அவற்றின் மீது செயல்படும் விசையை (F.), Fe = K Q.P எனக் குறிப்பிடலாம். அதாவது இரு மின்னூட்டங்க ளிடையே உள்ள விசை அவ்விரு மின்னூட்டங்களின் எண் மதிப்பின் பெருக்கற் பலனுக்கு நேர் விகிதத்திலும் அவற்றின் இடைத் தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் இருக்கும். MKS அலகு முறையில் K-இன் மதிப்பு என்று கொள்ளப்படுவதால் இதில் Fe QP 4re r என்பது ஊடகத்தைப் பொறுத்து மாறுபடும் ஒரு மாறிலியாகும். இதை மின்கடத்தாப் பொருள் மாறிலி (dielectric constant) என்றும் கூறுவர். வெற்றிடத்தின் மின் கடத்தாப் பொருள் மாறிலி 8.8542×10 -1 கூலும்") நியூட்டன்-மீ. மின் புலத்தின் செறிவை வரையறுக்க இவ் விதியையே அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். ஒரு புள்ளியில் மின் புலத்தின் செறிவு என்பது அப்புள்ளியில் வைக்கப்படும் ஓர் அலகு மின்னூட்டத் செயல்படும் தின் மீது விசையின் அளவாகும். இயக்கத்தை இவ்விதி அணுவில் எலக்ட்ரானின் தெளிவாக வரையறுக்கின்றது. மின் விசை, ஈர்ப்பு விசையை விட வலிமையானது என்பதை வெற்றிடத் தில் உள்ள ஒரு புரோட்டானுக்கும் எலகட்ரானுக்கும் அவற்றின் இடையே அளவுகளை ஒப்பிட்டு அறியலாம். F. FE €2 1 Gmpm. = 2.271X 1032 அதாவது மின்னூட்டமுடைய இரு துகள்களிடையே செயல்படும் மின் விசை, அத்துகள்களுக்கிடையே