பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்வினைச்‌ சுழலி 195

தூண்டுகைச் சுழலி (impulse turbine) எதிர்வினைச் சுழலி (reaction turbine) எனப்படும். எதிர்வினைச் சுழலி. எதிர் வினைச் சுழலியில் நீராவியின் விரிவாக்கம் சுழற்சியில் இருக்கக்கூடிய கூம்புகுழல்களிலும் நடைபெறும். இதன் அடிப் படைத் தத்துவத்தை அறிய உள்ளீடற்ற உருளை ஒன்றில், கொதிகலனின் நீராவி மிகு அழுத்தத்தில் கூம்புக்குழல் படம 1. (ஆ) எதிர்வினை இயக்கம். செலுத்துவதாகக் கொள்ளலாம். இந்த உருளையின் படம் 1 இல் காட்டியவாறு ஆர அமைப்பில் தகுந்த குழாய்கள் மூலம் வெளிப்பட, வாய்ப்பு இருப்பதாகக் கொள்ளலாம். குழாயின் வெளிவழிகள் கூம்பலகுகள் போன்று கடையப்பட்டிருக்கும். எனவே நீராவி, இக் குழாய்கள் கூம்பு குழல் வழியே செல்லும் போது விரிவடையும். இந்நிலையில், சுழன்று கொண் டிருக்கும் உருளையின் வேகத்திற்கு ஒப்ப நீராவியின் திசை வேகம் அதிகரிக்கும். இந்தத்திசை வேகத்தால் உருளை எதிர்த்திசையில் ஓடத்துவங்கும். எளிய எதிர்வினைச் சுழலி, சுழலியின் அலகுகள் ஒரு திசையில் சுழலும் போது அலகுகளில் பாயும் பாய்மம் எதிர்த் திசையில் திருப்பி அனுப்பப்படுவது எதிர்வினைச் செயல் எனப்படும். எதிர்வினைத் தத்துவம் கொண்ட இவ்வமைப்பில் நீராவி விரி வடையும் போது அழுத்தம் குறைகிறது. சுழல் அலகுகளில் இயங்காற்றல் வெளிப்படுகிறது. சுழல், அலகுகளை விட்டு விலகும் போது நீராவித்தாரை யின் திசைவேகம் உள்வந்த போது இருந்ததைவிட அதிகமாக இருக்கும். இங்ஙனம் நகரும் அலகுகளி அ.க. 6-13அ விவரிக்கப்பட்டுள்ளன. எதிர்வினைச் சுழலி 195 இல் லிருந்து விசையுடன் வரும் நீராவித் தாரையே எதிர் வினையாகச் சுழலியின் சுழல் தண்டைச் சுற்றும். பார்சன் எதிர்வினைச் சுழலிகள் படம் 2 இவ்வமைப்பின் நடு அச்சில் சுற்றும் சுழல்தண்டு உள்ளது. சுழல்தண்டில் பொருத் தப்பட்டிருக்கும் ஆர வளையங்களில் அலகு வளை யங்கள் (சு.அ) உள்ளன. இவ்வமைப்பு ஒரு கூட்டி னுள் அமைக்கப்பட்டுள்ளது; இக்கூட்டின் உள் வளை பரப்பில் நிலையான அலகுகள் (நி. அ) (fixed blades ) படத்தில் காட்டியவாறு பொருத்தப்பட்டுள்ளன. சுழல் தண்டின் இரு முனைகளும் தகுந்த களில் பொருந்தியிருக்கும். தாங்கி மாறு மிகைச். சூடேற்றப்பட்ட, அதிக அழுத்தத்தி லுள்ள நீராவி, கொதிகலனிலிருந்து மேற் கூறப் பட்டுள்ள சுற்றும் அலகுகள், நிலையான அலகுகள் வழியாக அடுத்தடுத்துப் பாய்ந்து செல்லும். இத னால் தொடர்ந்து திசைவேகம் குறையும். அதற் கேற்றவாறு கொள்ளளவும் அதிகரிக்கும். திசை வேகம் குறைவாக இருக்க வேண்டுமானால் படும் கொள்ளளவு காரணமாக நீராவி பாய்ந்து செல்லும் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். மறு கட்டம் தொடங்கும் போது கூட்டின் அளவீடு அதிகரிக்கின்றது. பரப்பு அதிகரிக்கப்படுவதால் அழுத்த நிலை குறைந்து திசைவேகம் அதிகரிச் கின்றது. கூட்டு அமைப்பு எளிதாக இருக்க வேண்டு மானால் அலகு வளையங்களின் அளவீடு ஒரே அளவாக இருக்க வேண்டும். எனவே பரப்பளவு அதிகரிக்கவும் அடுத்த கட்டத்தில் பொருந்தவும் அலகுகளின் அளவீடு மாறுபடாமல் இருக்கவும் சுழல் தண்டின் விட்டம் அதிகரிக்கலாம். கூம்புகுழலின் உருவமும் அலகின் உருவமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும். கூம்புகுழல் குறித்த வடிவில் இருக்கும். நிலைத்த அலகும். சுற்றும் அலகும் காண்ட ஓர் இணையை, ஒரு கட்டம் என்பர். நீரியச் சுழலி ஆற்றல். நீரில் மறைந்து கிடைக் கும் ஆற்றல் வியக்கத்தக்கதோடு அதன் பயன்க களும் பலப்பல. மிக உயரத்தில் தேக்கி வைத்த நீர் குழாய்களின் வழியே வெளிவரும் போது உயர் அழுத்தம் காரணமாகத் தாரை போன்று வெளித் தள்ளப்படும். அக்குழாயின் வாய்ப்பகுதி குறுசுக் குறுக நீரின் திசைவேகம் கூடும். வாய்ப்பகுதி கூம்பாக அமைந்துவிட்டால் நீர்த் தாரையின் ஆற்றல் மிகுந்த பயன் அளிக்கும். அவ்வாற்றலைக் கொண்டு சுழல் வதே நீரியச் சுழலி (hydraulic turbine) ஆகும். தனை மின்னாக்கியுடன் இணைத்துவிட்டால் மின் ஆற்றலையும் உருவாக்கலாம். எதிர்வினைச் சுழலியில் நீர் அதிக அளவு அழுத்த நிலைக்கு உட்பட்டு வளை அலகுகளில் பாய்கிறது. அங்ஙனம் பாயும்போது அழுத்தநிலை முகப்பு மட்ட மாக மாறுகிறது. சுழலியை விட்டு விலகும் முன்னர்