பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 எதிரொலி

198 எதிரொலி அ. என்ட்ரோபி T>c T<o படம் 1.அ .ஆ கும். ஆற்றல் மீஉயர்வானதாயினும் ஈறிலியன்று. எனவே, இயக்க ஆற்றலின் மதிப்பை வெப்பநிலை யால் கணக்கிடலாம் என்ற கருத்து நிறைவேறாது. இந்நிலையில் அமைப்புக்குள் மேலும் ஆற்றல் செலுத்தப்படும்போது ஆற்றலின் மேல்நிலைகளில் துகள்களின் எண்ணிக்கை, கீழ் நிலையிலுள்ளதை விட அதிகமாகிறது. ஆற்றலின் அளவு அதிகரிக்கும் போது அதிக எண்ணிக்கையில் துகள்கள் மேல் நிலைக்குத் தாவுகின்றன. அதாவது துகள்களின் பங்கீடு சீரான நிலையிலிருந்து சரிவு பெறுகின்றது. ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்கு அமைப்பு வரத் தொடங்குகிறது. சுருங்கச் சொல்லின் ஆற்றல் அதி கரிப்பிற்கேற்ப இயல்பாற்றல் குறைகிறது. இவ் விளைவுதான் எதிர் வெப்பநிலையின் மூலக்கரு. எல்லாத் துகளும் மீஉயர் வெப்பநிலையைப் பெறும் பொழுது அமைப்பு ஓர் ஒழுங்கமைப்பாக மாறுகிறது. முழு ஒழுங்கு நிலை (OK) முழு ஒழுங்கின்மை நிலை (T = +ak) முழு ஒழுங்கு நிலை (-OK) என மூன்று முக்கிய நிலைகள் உண்டு. அமைப்பைக் குளிர்வித்துத் தனிச் சுழிக்குக் கொண்டு செல்வது இயலாது. எதிர்வெப்ப நிலை களை அடைவதற்கு அமைப்பைச் சூடேற்றி ஈறிலா வெப்ப நிலைக்கும் மேல் அதிகரிக்க வேண்டும். எதிர் வெப்பநிலை மிகவும் நிலையற்றது. ஏனெ னில் எல்லாத் துகள்களும் மீயுயர் - ஆற்றல் நிலை யிலேயே இருக்க வேண்டுமாதலால், தொடர்ச்சியாக அமைப்புக்குள் ஆற்றலைச் செலுத்திக் கொண்டே யிருத்தல் இன்றியமையாததாகிறது. இதன் அடிப் படையில் தான், எதிர் வெப்பநிலைகள் அடைய முடியாதவை என்ற கருத்து நிலவி வந்தது. எனவே, எதிர் வெப்பநிலைகள் நேர் வெப்ப நிலைகளைவிட மீஉயர்வானவையே. எதிர் வெப்ப நிலையிலுள்ள ஒரு பொருள் நேர் வெப்ப நிலையி T=+0 T = 1α T=-0 ஆற்றல் படம் 2. லமைந்த பொருளுக்கு வெப்பத்தைக் கடத்தும். வெப்பக்கடத்தல் எதிர்த் திசையில் நடைபெறும். மற்ற அமைப்பு அனைத்தினின்றும் தொடர்பேது மில்லாமல் தனித்திருக்க வேண்டும். இவ்வகை அமைப்பு இயற்கையில் அமையாது. மேசர் மற்றும் லேசர் கருவிகளில் மேற்கூறிய கருத்துக்கள் பயன்படுகின்றன. எதிர் வெப்ப நிலையிலிருந்து நேர் வெப்ப நிலைக்கு நடை பெறும் வெப்பக் கதிர்வீச்சை மேல் குறித்த கருவிகளில் நடைமுறையில் பயன் படுத்துகிறார்கள். பெரிதும் வெப்பவியல் இரண்டாம் விதிக்கான பிளாங்க் கெல்வின் கூற்றைப் பின் வருமாறு கூறலாம். தொடர்ந்து மாறாத வெப்பநிலையிலுள்ள வெப்ப மூலத்திலிருந்து எடுக்கப்பட்ட வெப்பத்தை வேலையாக மாற்றுவது என்ற ஒரே விளைவையே முடிவாகப் பெற்றுள்ள மாற்றத்தைப் பெறுவது என்பது இயலாதது. வெப்பவியக்கவியல் கோட் பாடுகளை எதிர் வெப்பநிலைகளுக்குப் பயன்படுத்தும் போது மேற்கூறிய கூற்றுடன் மேலும் சில களைச் சேர்ப்பது இன்றியமையாததாகிறது. இரண் டாம் விதியின் தொடர்பான மற்றைய எல்லாக் கோட்பாடுகளும், ஏனைய வெப்பவியக்க விதிகளும் எதிர் வெப்ப நிலைகளுக்குப் பொருந்துவனவாகும். -வே.நாராயணசாமி எதிரொலி கருத்து ஒரு திசையில் சென்றுகொண்டிருக்கும் ஒலி பெருஞ் சுவர், குன்று போன்ற பொருள்களால் தடைப்பட்டு