எதிரொலி முறை ஆழங்காணல் 199
மீண்டு வரும்போது அது எதிரொலி (echo) எனப் படுகிறது. இது உருவாக ஒலியைத் தடுக்கக்கூடிய தடைப்பொருள் ஒலியை உட்சுவராத தன்மையைப் பெற்றிருக்கவேண்டும். ஒலியை உண்டாக்குபவர் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குத் தள்ளி நின்றுகொண்டு ஒலியை உண்டாக்க வேண்டும். ஒலியை உண்டா டக்கு பவர் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கூர்மையான ஒலியை எழுப்பினால் அவ்வொலி தடைப்பொருளுக்குச் சென்று அடைந்து மீண்டு வர இரண்டு கிலோ மீட்டர் தொலைவு கடந்து வர வேண்டியிருக்கும். 0°C இல் ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் ஆகும். எனவே ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தொலைவு ஒலி செல்வதற்கு ஆறு நொடி மூன்று நொடி எடுத்துக்கொள்கின்றது. எனவே, ஒலி எழுப்பியவர் அதனுடைய ஒலியைக்கேட்க நொடிகள் காத்திருக்க வேண்டும். ஆறு களுக்குப்பின் அவர் எழுப்பிய ஒலியை எதிரொலி யாக மீண்டும் அவர் கேட்க முடியும். எதிரொலி கூர்மையான தெளிவான ஒலியை மட்டும் தெளிவாக எதிரொலிக்கிறது. சுருதி குறைந்த ஒலி, உணரத்தக்க எதிரொலிப்பை ஏற்படுத்தாது. யால், ஒலியின் வேகம் நொடிக்கு 330 மீட்டர் ஆகை நொடியில் ஒலி செல்லும் தொலைவு 1 10 அதற் 33 மீட்டர் ஆகும். எனவே, ஒலியை எழுப்பி அதைக் கவனிக்கும் நிலையில் உள்ளவர் குறைந்தது 16.5 மீட்டர் தொலைவில் இருந்தால்தான் ஒரு கூர்மையான எதிரொலியை அவர் தெளிவாகக் கேட்க முடியும். வெப்பம், ஈரப்பதன் முதலியவற்றில் ஒலியின் வேகம் மாறுபடக்கூடியதாகையால், கேற்றவாறு இந்தத் தொலைவு மாறக்கூடும். நாம் பேசும் விரைவிற்கேற்ப எதிரொலியில் சொற்கள் ஒன்றோடொன்று மோதிக் குழப்பம் அடையாமல் இருக்க, சரியான தொலைவைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு நொடியில் 2 சொற்களைப் பயன்படுத்தினால் இடைத்தொலைவு 66 மீட்டர் ஆகவும், 3 சொற்களைப் பயன்படுத்தினால் 99 மீட்டர் ஆகவும் நாம் தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. சில பெரிய கட்டடங்களிலும், தொலைவில் உள்ள சுவர்களிலும் நேரடியான ஒலியைவிட எதிரொலித்து வருகிற ஒலி மிகவும் தெளிவாக இருக்கும். இந்த எதிரொலிப்பின் பயனால் பெரிய அரங்குகளை அமைக்கும் போது குறைந்த ஆற்றல் கொண்டு ஒலியை அனைவரும் கேட்கும்படி மிகவும் செப்பமாக அமைக்கவேண்டும். எதிரொலிப்பின் பயன்களில் முக்கியமான ஒன்று கடலில் ஆழம் காண வாகும். மேலும் கடலில் உள்ள குன்று, மலை. உடைந்த கப்பல் முதலியவற்றைத் தொலைவில் இருந்து தெரிந்து கொள்ளவும், புவி அடியில் அமைந் துள்ள கனிமப் பொருள்கள் எண்ணெய் ஊற்று கள் இவற்றை அறியவும், புவிப் பொறியியல் ஆய்வு எதிரொலி முறை ஆழங்காணல் 199 அறிஞர்கள் எதிரொலியைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். எதிரொலி முறை ஆழங்காணல் உள்ள -மா.பூங்குன்றன் இம்முறை கடலின் ஆழத்தில் ஒலியைச் செலுத்தி, அங்குள்ளபொருள்களில் பட்டுத் திரும்பும் ஒலியான எதிரொலியைப் பதிவு செய்து, அதன்மூலம் கடலடியில் பொருள்களின் தன்மை, பரு மனளவு, பரவியுள்ள இடங்கள் ஆகியவற்றை அறிய உதவுகிறது. இவ்வித ஆய்வுக்கான கருவி எதிரொலி ஆழமானி (echosounder) எனப்படும். இது கடற் படையினருக்கும், மாலுமி, மீன்பிடி தொழிலாளர் ஆகியோருக்கும் பெரிதும் பயன்படுகிறது. எதிரொலி ஆழமானி. 1919 இல் முதல் எதிரொலி ஆழமானி உருவாக்கப் பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படைப் பொறியியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆழமானி ஹேயஸ் ஒலி எனப்பெயரிடப்பட்டது. ஆழமானி இக்கருவியில் கடலடித்தளத்துக்கு ஒலி அலைகளை அனுப்பி அவற் றின் பிரதிபலிப்பை மீளப்பெறும் ஒரு மின்காந்தக் கருவியும் அதன்மூலம் ஆழத்தைக் குறிப்பிடும் ஒரு நேரங்காட்டியும் இருந்தன. இந்த நேரங்காட்டி, கடல்நீரில் ஒலி செல்லும் அடிப்படை வேக அளவான ஒரு நொடிக்கு 4800 அடி வீதம் செல்வதை மதிப் பிடும் அளவில் அமைக்கப்பட்டிருந்தது. 1927 இல் நீர்மூழ்கிச் சைகை நிறுவனத்தினரும், ஆழமானி (fathometer) என்னும் பெயரில் இது போன்ற கருவி யைத் தயாரித்தனர். பின்னர் எதிரொலி ஆழமானி யின் மாதிரி உருவமைப்பில் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆயினும் இந்த ஆழ மானியில் பழைய தத்துவமே எவ்வித மாற்றமுமின்றிப் பின் பற்றப்பட்டது. எதிரொலி ஆழமானி பின்வரும் மூன்று செய் முறைப் பகுதிகளைக்கொண்டிருக்கும். (1) சுப்பலின் அடிப்பகுதியில் பொருத்தப்படும் நுண்ணிடை இயக்க மானி (transducer) என்னும் பகுதி மின்னாற்றலை ஒலியாற்றலாகவோ ஒலியாற்றலை மின்னாற் றலாகவோ மாற்றவல்லது. 2) ஊடனுப்பி (trans- mitter) என்னும் பகுதி மிகுந்த அளவில் மின்னாற் றலை உண்டாக்கி அதன் மூலம் நுண்ணிடை இயக்க மானியைச் செயல்படச் செய்கிறது. (3) ஏற்பான்- குறிப்பான் (receiver indicator) என்னும் பகுதி மிக மெல்விய எதிரொலிகளை வலுவாக்குவதால் அவ்வலுவான எதிரொலிகளை நுண்ணிடை இயக்க மானி பெற்று, அவற்றைப் பார்ப்பதற்கும் கேட்பதற் கும் ஏற்றவாறு தெரிவிக்கின்றது. இதனால் ஆழமும்