எதிரொலி முறை ஆழங்காணல் 201
எதிரொலி முறை ஆழங்காணல் 201 ஆழம், ஃபேத்தம்ஸ் 1 ஃபேத்தம்=1.8 ஆழ்கடலில் மலைமுகட்டின் எதிரொலி வரைபடம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதற்கு ஏற்றவாறு அவ்வப்போது ஆழ அளவைக் காட்டுதலே எதிரொலி ஆழமானியின் முக்கிய பணி ஆகும். இதனால் கடற் படையினர் கடலடியில் உள்ள எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களைக்கண்டுபிடித்து அழிக்க இயலும். எனவே கடற்படைகளின் கப்பலைச் சீராக இயக்கவும் இது முக்கியமானது. கடலடித்தளத்தின் தன்மைகளை அறிந்து இதுவரை கண்டறியப்படா மேடு, சிகரம், பவழப் பாறை, மீன்கூட்டம் போன்றவற்றைக் கண்டு பிடிக்கவும் இதனால் மீன்பிடி தொழிலுக்கும், அதனால் வருவாய்ப் பெருக்கத்திற்கும் இது பெரி தும் பயன்படுகிறது. விலங்கு இருப்பிடங்களை அறிதல். கடலடியில் விலங்குக் கூட்டங்கள் உள்ள இருப்பிடங்களைப் போலி அடித்தளங்கள் (false bottons) புனைவுருத் தோற்ற அடித்தளங்கள் (phantom bottoms), ஆழ்சி தறடுக்குகள் (deep scattering layers) என்னும் சில பெயர்களால் குறிப்பிடுகின்றனர். எதிரொலி ஆழ மானியால் பதிவு செய்யப்பட்ட இந்த இருப்பிடங் களை, ஆழத்திலுள்ள நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புகைப்படம் எடுத்துப்பார்த்தபோது, அவற்றிலுள்ள விலங்கினக்கூட்டங்கள், அவற்றின் உருவ அளவுகள். அவை பரவியுள்ள எல்லையின் பரப்பு ஆகியவற்றை அறிய முடிந்தது. பெரும்பாலும் மீன்களும், திமிங்கலங்களும் இதுபோல் எதிரொலிகளைப் பிரதி பலிக்கவல்லவை என்று அறியப்பட்டது. பகல் நேரத்தில் ஆழ்சிதறடுக்குள் 600 - 1000 மீட்டர் ஆழங்களில் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் இந்த அடுக்குகள் மேல் நோக்கி நகர்வது ஒரு செங்குத்து வலசை போன்றதாகும். இவ்வாறான ஒலிச்சிதறடுக்குகள் மிகுதியாகப் பரவி யிருத்தலைக் கொண்டு. சிறிய மீன்கள் அகன்று பரவிய அடுக்கில், மிக நெருங்கிய அடர்த்தியான கூட்டங்களாகச் சேர்ந்துள்ளதை உணரலாம். இவ்வாறு சேர்ந்துள்ள மீன்கள் காற்றுப்பைகளை அல்லது நீந்தும் பைகளைக் கொண்டுள்ளவையாக உள்ளமையால், அந்த எதிரொலி, மீன்களின் காற்றுப் பைகளால் உண்டாக்கப்பட்டதென அறியலாம். இத்தகைய மீன்களைக் கொண்டுள்ள ஒலிச்சிதறடுக்கு களின் பரவல், கடலின் வெப்பமற்ற அழுத்தம் மொத்தத்தில் மிகக்குறைவு என்றும், ஆனால் ஓரே கூட்டத்திலுள்ள சூழ்நிலையொத்த அழுத்தம் (ecolo- gical density) மிகுதியாக இருக்கலாம் என்றும் அறிய உதவும். உட்ஹோல் கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த பாக்கஸ் குழுவினர் வடஅட்லாண்டிக் கடலின் மேற்குப்பகுதியில் ஒரு கப்பலிலிருந்து எதிரொலி ஆழமானியால், ஆழ்கடலில் உள்ள ஒரு மீனினக் கூட்டத்தின் இருப்பிடத்தைப் பதிவு செய்தனர். அதேநேரத்தில். ஒரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து அந்த