பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை அறிவியல் களஞ்சியம் ஆறாம் தொகுதியின் பணி, குறித்த காலத்தில் பல்லாற்றானும் உதவி ஊக்கிய மாண்புமிகு துணைவேந்தர் முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும் என்றும் நிறைவுறப் உரிய. களஞ்சியப் பணி செவ்வனே நடைபெறத் துணை நிற்கும் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் பெ. சின்னையன் அவர்களுக்கும், துணைப் பதிவாளர் திரு.இரா.சுப்பராயலு அவர்களுக்கும் என் நன்றி. தொகுதி நன்முறையில் வெளிவர உதவிய பொறுப்பாசிரியர் திரு.த.தெய்வீகன், அயராமல் உழைக்கும் அறிவியல் களஞ்சியத்தார். ஓவியர். தட்டச்சர்கள் அனைவருக்கும் என் நன்றி. தொகுதிப் பணியை விரைவாகவும் செம்மையாகவும் பொறுப்புடன் அச்சிட்டுதவிய அண்ணாமலைநகர் சிவகாமி அச்சக உரிமையாளர் முனைவர் கோ. இராஜசுந்தரம், மறுதோன்றி அச்சக வாயிலாகத் தொகுதியை அழகிய முறையில் வெளியிட்டு உதவிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தார். பதிப்புத்துறைத் துணை இயக்குநர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோர்க்கும் தொகுதிக்குரிய கட்டுரைகளைச் சீர்தூக்கி உதவிய வல்லுநர்கள், மதிப்புறு பதிப்பாசிரியர்கள் ஆகியோர்க்கும் என் உளம் நிறைந்த நன்றியை உரித்தாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தஞ்சாவூர் 31-12-88 பேரா. கே.கே. அருணாசலம் முதன்மைப் பதிப்பாசிரியர் (பொ) அறிவியல் களஞ்சியம்.