206 எந்திர அதிர்வு
206 எத்திர அதிர்வு இடைவெளியில் மின்னழுத்தமும், மின்னோட்டமும் தொடர்ச்சியாக இருந்தால் பின்வரும் சமன்பாடுகள் பொருத்தமாயிருக்கும். V + V' = V^, I + I ' =I* ......... (9) இவற்றைத் தீர்வு செய்தால் எதிரொளிப்புக் குணக மும் கடத்தல் குணகமும் பின்வருமாறு கிடைக்கும். V . Z 曾 Z" + - 2 Z' 2+2 Z .........(10) ஒலியியல். 10 ஆம் சமன்பாடுகளில் மின் மறிப் புக்குப் பதிலாக ஒளியியல் மறிப்பைப் பதிலீடு செய் தால் அவை ஒலிகளுக்கும் பொருத்தமானவையாகி விடும். ஒலியியல் மறிப்பு என்பது ஓர் ஊடகத்தின் அடர்த்தியை, அந்த ஊடகத்தில் ஒலியின் திசை வேகத்தால் பெருக்கினால் கிடைக்கும் அளவாக வரையறுக்கப்படுகிறது. திண்ம நிலை ஊடகங்களில் ஒலி நீள அலையாகவும் குறுக்கலையாகவும் பரவும். எனவே அவற்றில் இரு வகை மறிப்புக்கள் உள. கே.என்.ராமச்சந்திரன். எந்திர அதிர்வு வேகமாகச் சென்றிட வாகனங்களும், அவற்றை இயக்கும் எந்திரங்களும் உற்பத்தி செய்யப்படு கின்றன. தொழில் துறையில் உற்பத்திச் செலவினைக் வாணிகப் குறைத்து, எரி அனைத்தையும் தானியங்கிகளாக மாற்ற வேண்டி யுள்ளது. நிமிடத்திற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுகள் சுற்றும் நீராவிப் பொறிகளும். எண்ணெயினால் இயங்கும் பொறிகளும், அன்றாட வாழ்க்கையில் பழகிவிட்டவை. இப்படி எந்திரங்கள் வேகமாக இயங்கும்போது, அதிர்வுகள் உண்டா கின்றன. பொறியின் சுழற்சியினால் உண்டாகும் அதிர்ச்சி பொறியின் அச்சுத் தண்டையே அச்சுத் தண்டையே (shaft) தகர்த் திடும் ஆற்றல்மிக்கதாக மாறிவிடக்கூடாது. எனவே, அதிர்வுகளின் பல்வேறு வகைகளையும், தன்மை களையும் அறிந்திட வேண்டிய அவசியம் ஏற்படு கிறது. அதிர்வுகளின் வகைகள். அதிர்வுகளைப் பொறியை முடுக்கும் விசையைக் கொண்டோ, அந்த விசைக் கேற்ப பொறியைத் தாங்கும் உறுப்புகள் ஆட்படும் தகைவைக் (stress) கொண்டோ வகைப்படுத்தலாம். இயற்கை அதிர்வுகள், எந்தவிதமான வெளி விசை யின்றித் தானாகவே ஏற்படுகின்ற அதிர்வுகட்கு, பெயர். இயற்கை அதிர்வுகள் என்று இவை இயற்கையாகவே ஒரு பொறி அல்லது குறிப்பிட்ட உறுப்புடன். உருவானவையாக இருக்கும். உருவாக்கப்பட்ட அதிர்வு. ஒரு பொறி அல்லது உறுப்பின் மீது திணிக்கப்படுகின்ற பிறவிசையினால் உருவாகின்ற அதிர்வுகட்கு உருவாக்கப்பட்ட அதிர்வுகள் என்று பெயர். இவையே பொறியின் உறுப்புக்கட்கு ஊறு விளைவிக்கக் கூடியவை. ஒடுக்கப்பட்ட அதிர்வுகள். ஓர் உறுப்பின் இயக்கத் திற்கு வெளி விசை தேவைப் படாமல் இருக்கலாம். ஆனால் அது, காற்று மண்டலத்திலோ, உராய்வைக் கூடிய ஊடகத்திலோ தான் இயங்க கொடுக்கக் போட்டியினை வென்றிட பொறியை முடுக்கும் விசைக்கேற்ப அதிர்வுகள் இயற்கை அதிர்வுகள் உருவாக்கப்பட்ட அதிர்வுகள் ஒடுக்கப்படாத (undamped) அதிர்வுகள் ஒடுக்கப்பட்ட அதிர்வுகள் பொறியின் உறுப்புகள் ஆட்படும் அழுத்தத்திற்கேற்ப அதிர்வுகள் குறுக்கு அதிர்வுகள் (transverse திருகு அதிர்வுகள் (torsional vibration) vibration) நேர் அதிர்வுகள் (longitudinal vibration)