208 எந்திர அதிர்வு
208 எந்திர அதிர்வு கால நிகழ்வு. அதிர்வலைகள், எப்போதும், சம கால இடைவெளிகளிலேயே உருவாகும் தன்மை சீரான இடைவெளி யுடையவை, இவ்வாறு சம. நிகழும், நிகழ்ச்சியைக் கால நிகழ்வு எனலாம். காலக்கூறு. இரண்டு அடுத்தடுத்த அதிர்வலை கள், உருவாவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமே காலக்கூறு எனப்படுகிறது. சுழற்சி. ஒரு காலக்கூறில், அதிர்வலைகள் கடந்த தூரமே ஒரு சுழற்சி எனப்படுகிறது. அலைவெண். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஏற் படுகின்ற முழுமையான சுழற்சியின் எண்ணிக்கையே, அலைவெண் எனப்படுகிறது. இதை அதிர்வு எண் என்றும் கூறலாம். அதிர்வு ஏற்பி (vibration absorber). அதிர்வுகள் பொதுவாகப் பொறியின் உறுப்புகட்கு ஊறு விளை விக்கும். எனவே அதிர்வுகளை முழுமையாக நீக்கிடு வதற்கோ முடிந்த அளவு ஒடுக்குவதற்கோ முயற் சிக்க வேண்டும். சில சமயங்களில் வடிவமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் அதிர்வுகளை ஒடுக்க லாம். பல சமயங்களில் அதிர்வுகளை ஒடுக்குவதற் கென்றே, தனியொரு உறுப்பினைப் பொருத்த வேண்டியுள்ளது. இந்த அதிர்வு ஒடுக்கிகளின் பயன் படு தன்மையை, அவைகளின் விசை கடத்தும் திற னைக் கொண்டு கணக்கிடலாம். . கடத்து திறன் = அதிர்வை ஒடுக்கும் பொருட்டுப் பொறிக்குக் கடத்தப்பட்டவிசை அதிர்வு ஒடுக்கியால் செலுத்தப்பட்ட விசை இன்று பலவகையான அதிர்வு ஒடுக்கிகள் பயன் படுத்தப்பட்டாலும் உருவாக்கப் பயன்படும் பொருள் களைக் கொண்டு அவற்றை இருவகைகளாகப் பிரிக்க லாம். க உலோக அதிர்வு ஒடுக்கி. இது பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்டது. இது நீண்ட நாள் உழைப்பதோடு, நீரினாலும், உயவு எண்ணெய் களினாலும் பாதிக்கப்படுவதில்லை. மேலும் இது அதிகச் சுமையைத் தாங்க வல்லது. இது சுருள் கம்பியாகவும், பட்டையாகவும். தகடாகவும், வடிவங்களில் கிடைக்கின்றது. தை அலை வெண் விகிதம் (frequency ratio) 1.414 ஐ விட அதிகமாக இருக்கும் போது உபயோகிக்க வேண்டும். பல அங்கக அதிர்வு ஒடுக்கி. இது, ரப்பர், தக்கை மற்றும் நார்ப் பொருள்களால் பெரும்பாலும் உரு வாக்கப்படுகிறது. அதிக வெப்பம் மற்றும் அழுத்தங் களில் இதைப் பயன்படுத்த இயலாது. மேலும் இதன் தன்மைகள், அலைவெண், எடை, வடிவம், வெப்ப நிலைக்கேற்ப மாறுபடும். மேலும் நீர் மற்றும் உயவு எண்ணெய்களின் தாக்குதலுக்கு ஆளாகிறது. ஆனால் து அதிகமாக அதிர்வுகளை ஓடுக்கக் கூடிய சக்தி வாய்ந்ததாக இருப்பதால், குறைந்த அலைவெண் விகிதம் உள்ள போதும் இதனைப் பயன்படுத்தலாம். அதிர்வுகளை அளக்கும் கருவி. அதிர்வுகளை அளந் திடப் பலவகையான கருவிகள் உள்ளன. அவை எந்திரக் கருவிகள், மின்னியல் கருவிகள் ஒளியியல் கருவிகள் காந்தக் கருவிகள், மின்னணுவியல் கருவி கள் எனப்பலவாம். அதிர்வுகளைப் பல்வேறு பண்புகளின் மூலமாக (parameters) அளவிடலாம். அப்பண்புகளாவன: வீச்சு (amplitude), அலைவெண் (frequency) திசை வேகம், (velocity), வேக முடுக்கம் (acceleration) ஆகியன. படம் 4. 10 ஆ Y வீச்சு அளவிடும் கருவி. இக்கருவியானது படம்-4 இல் மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. படத்தில் காட்டியுள்ளபடி 'அ' என்ற உருளையானது 'y y ' அச்சில் சுழன்று கொண்டிருக் கும். 'ஆ' என்ற குறிமுள்ளானது, 'இ' என்ற ஆதா ரத்தில் மேலும் கீழும் சென்று வரும்படிப் பொருத் தப்பட்டுள்ளது. குறிமுள்ளின் மறுமுனை ஒரு கம்பி யுடன் இணைக்கப்பட்டு, அக்கம்பியானது, அதிரும் பொறியில் இருந்து, அதிர்வுகளைக் கடத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதிர்வுக்கேற்ப குறிமுள், மேலும் கீழும் செல்லும்,அப்போது சுழலும் உருளையில் சுற்றப்பட்டுள்ள கட்டத்தாளில் அதிர் வுகளுக்கேற்பக் கோடுகள் வரையப்படும். இக் கோடுகளின் மூலம் 'வீச்சு' அளவிடப்படுகிறது. . இக்கருவியானது அதிகப்படியான அலைவெண் மற்றும் வேகப்பெருக்கம் உள்ள டங்களில் பயன் வேகமாக படாது. ஏனென்றால், இக்கருவி அதிக இயங்கும்போது தானே அதிர்வை உருவாக்குகின்றது.