212 எந்திர இயக்கம், தொழிலக
I 212 எந்திர இழக்கம், தொழிலக விட்டம் விட்டம், அளவு போன்ற அலகுகள் பயன்படுத்தப் படும் வெட்டுக்கருவி இவற்றின் வேறுபாட்டிற்கு ஏற்ப இயக்கங்களின் தன்மை வேறுபடுகிறது. துளையிடும் கருவியில் முறுக்கிய துளைக்கருவி பயன்படுத்தப்படு கிறது. இதன்மூலம் ஒரு சில அங்குலம் உள்ள துளைகள் மட்டுமே இட முடியும். ஆரத்திசை நகர்வு துளையிடும் கருவியில் சற்று அதிக முள்ள துளைகளை இடமுடியும். இவற்றையெல்லாம் விட. துளைபெரிதாக்கும் எந்திரத்தில் பல அடி விட்டமுள்ள துளைகளைக் கூட உருவாக்க முடியும். விட்ட தட்டை வடிவிற்கான எந்திரங்கள். அட்டவணையில் 8-12 வரை உள்ள எந்திரங்களைத் தட்டையான பரப்பை உருவாக்கும் எந்திரங்களாகக் கொள்ள லாம். சில தனிப்பட்ட இணைப்புக் கருவிகளின் மூலம் இந்த எந்திரங்களிலும் வளைவான பரப்பினை உருவாக்கலாம். பொதுவாகத் துருவல் எந்திரங்களின் இயக்கத் தால் சிறிய பரப்புகள் உருவாக்கப்படுகின்றன. கிடை நிலை இழைப்பு எந்திரங்களின் இயக்கத்தால் அதிக மான பரப்பை உருவாக்கலாம். அட்டவணை வெட்டி நீக்குதற்கான எந்திரங்கள். யில் 13, 14, 15 இலக்கமிடப்பட்ட எந்திரங்கள் இவ்வகையைச் சார்ந்தவை. குறைந்த பருமன் உள்ள பகுதிகளை வெட்டி நீக்கச் சக்கர வாள் பயன்படு இருக்குமேயானால் கிறது. அதிக பருமன் வெட்டி பயன்படுகிறது. அளவு. சுடர் இயக்கத்திறன், செய்பொருளின் தன்மைகள், எந்திரத்தின் இயங்கு வேகம், உறுதித் தன்மை போன்ற பல காரணங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு ஏதேனும் ஓர் எந்திரமே மிகத்தகுதி உடையது என்று தேர்வு செய்யப்படுகிறது. ஒருமுனை வெட்டுக்கருவி. கடைபொறி, துளை பெரிதாக்கும் எந்திரம், இழைப்பு எந்திரம் போன்ற வற்றில் இவ்வகைக் கருவி பயன்படுகிறது. இவற்றின் வடிவமைப்பு, எந்திரத்தின் தேவைக்கேற்ப வேறு படும். இதன் வடிவம் நேராகவோ, வளைந்தோ ஏதேனும் தனிப்பட்ட அமைப்பு உடையதாகவோ இருக்கும். ஒரே உலோகப் பட்டையின் நுனிப்பகுதி மட்டும் சாணை பிடித்துத் தீட்டப்பட்டதாக இருக்கலாம். அல்லது இதன் உட்பகுதி ஓர் உலோகத் தால் அமைக்கப்பட்டு அதன் நுனிப்பகுதியில் பொருத்துமுனை ஏதேனும் பொருத்தப்பட்டு இருக்கலாம். ஒரே உலோகத்தால் அமைந்ததானால் முனை தேயத் தேய மீண்டும் சாணை பிடிப்பதன் மூலம் தீட்டப்பட்டுக் கூராக்கப்படுகின்றது. பொருத்து முனை தேய்ந்து போனால் அம்முனை நீக்கப்பட்டு வேறு ஒரு புதிய பொருத்துமுனை இணைக்கப்படு கிறது. செய்பொருளில் இருந்து வெட்டி நீக்கப்படும் நீங்கு துகள்களைச் சிறு சிறு துகள்களாக வெட்டு தற்காக வெட்டுக்கருவியின் நுனிப்பரப்பில் ஒரு காடி வெட்டப்படுகிறது. இந்தக்காடி நீங்குதுகள் பொடிப்பான் எனப்படுகிறது. பலமுனை வெட்டுக்கருவி. பல பற்களுள்ள சுழலும் வெட்டுக்கருவியே பலமுனை வெட்டுக்கருவி ஆகும். இவ்வகைக் கருவிகள் தொடர் வெட்டு எந்திரம், கிடைநிலைத் துளைபெரிதாக்கும் எந்திரம் போன்றவற்றில் பயன்படுகின்றன. ஒருமுனை வெட்டுக்கருவியைப் போலவே ஒவ் வொரு முனையும் செங்கோணச் சாய்வுக் கோணம், சாய்வுக் கோணம் இரண்டும் உடையதாகப் பல் முனைக்கருவி வடிவமைக்கப்படுகிறது. செங்கோணச் சாய்வுக் கோணத்தால் கூரிய வெட்டுமுனை செய் பொருளின்மேல் செலுத்தப்படுவதையும் நீங்குதுகளை நீக்குவதையும் கட்டுப்படுத்தலாம். சாய்வுக் கோணத்தினால் இயக்கம முடிக்கப் பட்ட பகுதி பாதிக்கப்படாமல் காக்கலாம். இக் காரணங்களின் அடிப்படையில் தேவைக்கேற்ப கோணங்கள் மாற்றப்பட்டுப் பல்வேறு வடிவில் இக் கருவிகள் கிடைக்கின்றன. சாதாரண பல்முனை வெட்டுக்கருவியில் மிகச்சிறிய வாள் சக்கரம் முதல் மிகப்பெரிய அளவு வரையில் பலவகைகள் உள்ளன. பக்கம் வெட்டுக்கருவியில் பற்கள் ஒரு புறம் அல்லது இருபுறமும் இருக்கின்றன. பரப்பு வெட்டும் கருவியின் பற்கள் ஒரு தட்டைச்சுற்றி வைக்கப்பட்டவை போலிருக்கின்றன. வெட்டுவேகமும் வெட்டளவும். செய்பொருளுக்கும், வெட்டுக்கருவிக்கும் இடையே உள்ள சார்பு நகர்வில் வெட்டு வேகமும் வெட்டளவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகளாகும். செய்பொருளின் பரப்பிற்கும் வெட்டுக்கருவிக்கும் இடையே உள்ள நகர் வேகமே வெட்டுவேகம் எனப் படுகிறது. பொதுவாக வெட்டுவேகம் இவ்வளவு நேரத்திற்கு இத்தனைத் தொலைவு அங்குலம் அல்லது மில்லி மீட்டர் நகர்வு என்றே குறிக்கப்படு கிறது. வெட்டளவு என்பது செய்பொருளுக்குள் எவ் வளவு தொலைவிற்கு வெட்டுக் கருவி ஒவ்வொரு முறையும் செலுத்தப்படுகிறது என்பதையே குறிக் கிறது. வெட்டுவேகத்தையும் வெட்டு அளவையும் ஒரு சேரக் கட்டுப்படுத்துவதன் மூலம் எந்திர இயக்கத்தின் தன்மையை உயர்த்தலாம். வெட்டு நீர்மம். எந்திர இயக்கத்தினால் வெட்டுக் கருவியும் செய்பொருளும் ஒன்றோடு ஒன்று