பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திர உறுப்பு 213

உராய்வதால் அந்த உராய்வின் காரணமாக வெப்பம் ஏற்படுகிறது. வெப்பத்தின் நிலை அதிகரித்தால் செய் பொருள் வடிவில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே வெட்டும் இடத்தில் குளிர்விப்பதற்காக வெட்டு நீர்மம் பயன்படுகிறது. குளிர்வித்தலைத் தவிர. செய்பொருளின் தோற்றத்தைப் பொலிவு கொள்ளச் செய்வதற்கும், நீங்கு துகள்களை நீக்கிக்கொண்டு செல்லுதற்கும், வழித்தடங்களில் உய விடுதற்கு ம் கூட வெட்டு நீர்மங்கள் பயன்படுகின்றன. எந்திர உறுப்பு வயி. அண்ணாமலை பெரும்பாலான கருவிகளையும், சாதனங்களையும் எந்திரங்களையும் உருவாக்கப் பயன்படும் ஆதார எந்திரப் பகுதி எந்திர உறுப்பு (machine element) எனப்படும். பண்டைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அடிப்படை எந்திர உறுப்புகளான சக்கரம், தண்டு (shaft), நெம்புகோல் ஆகியவற்றைக் கொண்டு படிப் படியான பல மாற்றங்கள் புகுத்தப்பட்டதன் விளை வாகத் தொழிற்புரட்சி ஏற்பட்டது. இதன் பயனாக ஜேம்ஸ் வாட் என்பார் நீராவி ஆற்றலைப் பயன் படுத்தி நீராவிப் பொறியை இயக்கிக் காட்டினார். பின்னர் பல அறிவியல் விந்தைகள் மனித சமுதாயத் திற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. சக்கரம் குடம் (ஆயல் புள்ளி) பல்சக்கரத்தின் பல் (நெம்புகோவின் முனை) படம் 1. பல்சக்கரம் (சக்கரம் மற்றும் நெம்பு கோலின் பண்பைக் கொண்டது) எந்திர உறுப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பல் சக்கரம் (gear) ஆகும். அடிப்படையில் இது சக்கரம், நெம்புகோல் இவற்றின் இணைந்த கோட்பாட்டுத் தத்துவத்தில் இயங்குகின்றது. இதைப் பெரும்பாலும் எந்திர உறுப்பு 213 ஒரு தண்டில் பொருத்தி இயக்குவார்கள். சுழல் திறனை ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்குக் கூடுதலாகவோ குறைவாகவோ மாற்றம் செய்ய அல்லது செலுத்த இவை பயன்படுத்தப்படுகின், ன்றன. இவ்வாறு சுழல் திறன் கூடும்போது, தொடர்புடைய தண்டின் வேகம் குறைவாகவும், சுழல் திறம் குறை யும்போது தண்டின் வேகம் அதிகமாகவும் இருக்கும். தற்போது உந்து வண்டிகளில் உள்ள பல் சக்கரப் பெட்டியில் பல பல் சக்கரங்கள் பயன்படுத்தப்படு கின்றன. மேலும் பலவகை எந்திரங்களிலும் மேலே கூறப்பட்ட காரணங்களின் வழியே இவை அதிகம் பயன்படுகின்றன. பல் சக்கரத்தின் வலிமை அது செய்யப்பட்ட உலோகத்தின் பண்பைப் பொறுத்து அமையும். மேலும் அதன் தேய்வு பொருளின் கடினத் தன்மையைப் பொறுத்து அமையும். பல் சக்கரங்கள் சுழலும்போது பற்களில் ஏற்படக்கூடிய விசை களைப் பொறுத்து இச்சக்கரங்களின் விட்டத்தின் அளவு மாறுபடும். மேலும் பல் சக்கரங்களின் உருவ வேறுபாடுகள் எங்கு அவை பயன்படுகின்றன என்பதைப் பொறுத்து மாறுபடும். உருவங்கள் பின் வருமாறு பலவகைப்படும். அவை குதிமுள் பல்சக்கரம் (spurgear) திருகு சக்கரம் (helical gear) சாய்வுப் பல் சக்கரம் (bevel gear) ஹைப்பாய்ட் பல்சக்கரம் (hypoid gear) புழுப் பல் சக்கரம் (worm gear) எனப்படும். ஒவ்வொருவகைப் பல் சக்கரமும் தனித்தன்மை யான பணிகளுக்குப் பயன்படுகின்றது. மற்ற அடிப்படை எந்திர உறுப்புகள் அனைத்தும் சக்கரம் மற்றும் நெம்புகோல் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டு இயங்குகின்றன. ஒரு சக்கரம் சுழல்வதற்கு நடு சுழல்தண்டு தேவைப்படும். சக்க ரத்தை இச்சுழல் தண்டில் பொருத்த எந்திரச்சாவி பயன்படுகிறது. ஒரு சுழல் தண்டை மற்றொரு சுழல் தண்டுடன் இணைக்க இணப்பி (coupling) என்னும் அமைப்பு, பயன்படுகின்றது. சுழல் தண்டைத் தாங் கும் பொருட்டுத் தாங்கிகள் பயன்படுகின்றன. தாங்கி கள் பலவகைப்படும்.அவை, சுழல் தாங்கி (journal bearing), மணித்தாங்கி (ballbearing) உருளைத் தாங்கி (roller bearing), எனப்படும். சுழல் தண்டு தன் இயக்கத்தை ஏற்றவகையில் தொடங்க ஊடிணைப்பையும் (clutch) இயக்கத்தை நிறுத்தும் பொருட்டு வேகத்தடுப்பானையும், (brake) பயன்படுத்தலாம். மேலும் சுழல் தண்டை இயக்கப் பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. தட்டை வடி வப் பட்டை அல்லது V வடிவப்பட்டை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிலசமயங்களில் சங்கிலி ஓட்டு அல்லது கயிற்று ஓட்டு பயன்படுத்தப்படும். இவ்வாறு ஒரு சுழல் தண்டிலிருந்து சுழல்சக்தியை மற்றொரு சுழல் தண்டிற்குச் செலுத்தலாம். மேலும் சில தனித்தன்மை பெற்ற எந்திர உறுப்பு களும் எந்திரங்களை உருவாக்கப் பயன்படுகின்றன,