பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 எந்திரக்‌ கருவி

214 எந்திரக் கருவி அவை நெம்புருள் (cam), சமனுருள் (fly wheel), சுருள்வில் (spring), (வேக) கட்டுப்படுத்தி, (governor), ணி மற் திருகு (screw) அறையாணி (rivet), மரைஆ றும் மரை (bolt and nut), ஆகும். எந்திர உறுப்புகளைச் சரிவர வடிவமைக்க அவ் வுறுப்புகளில் செயல்படக்கூடிய விசைகளைப் பற்றிய கணக்கீடும், பயன்படுத்தப் படவேண்டிய பொருள் களின் வலிமை பற்றிய கணக்கீடும், வரைபடங்களும் தேவை. எந்திர உறுப்புகள் பல்வேறு செந்தர அளவுகளில் பெரும்பாலும் மிகை எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதால் எந்திர உறுப்புகள் நல்ல தரம் உடையவையாக நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும். பொதுவாக எந்திர உறுப்புகள், தேவைக் கேற்றாற்போல் சிற்சில மாற்றங்களைப் பெற்றிருக் கலாம். ஆனால் சில பாதுகாப்புக் கருவிகளை மாற்றம் செய்யும் முன்னர் அவற்றிற்குரிய பாதுகாப்பு நிறு வனத்தின் ஒப்புதல் பெற்றே இம்மாற்றங்களைப் புகுத்த வேண்டும் எந்திரக் கருவி க. வேதகிரி உலோகத்தை, வேலை செய்யப்படவேண்டிய உலோகத் துண்டிலிருந்து வெட்டும் கருவிகளைக் கொண்டு நீக்குவது, எந்திரச் செயல்பாடு எனப்படும். இச்செயல்பாடுகள் வெளி ஆற்றலால் (external power) இயங்கும் அமைப்பில் மேற்கொள்ளப் படுகின்றன. இதனால் வேலை செய்யப்படும் துண்டிற்குத் தேவையான வடிவமும், சீராக்கமும் கிடைக்கின்றன. வெட்டும் கருவி. ஒன்று அல்லது பல முனைகளை உடைய கொந்துளி (broaching), துருவல் உளி (milling machine), மென்மெருகிடும் சுற்கள் (honing stones), தேய்ப்புப் பொருள், வாள் அலகு (saw blade) போன்றவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெட்டும் கருவிகள் ஆகும். இக்கருவிகள் வெளித் தோற்றத்தில் வேறுபட்டிருந்தாலும், அடிப்படை வெட்டும் வேலையில். உலோகத்தை வெட்டி அகற்று வதில் ஒன்றாகவே இருக்கும். சில கருவிகள் உலோகங் களைப் பெருமளவில் சீவல்களாகவோ துண்டுகளாக வோ நீக்குகின்றன. வாள், மென்மெருகிடும் கற்கள் போன்றவை உலோகங்களைச் சிறிய அளவில் நீக்கு கின்றன. வெட்டுளிகளையோ, வேலை செய்யப்பட வேண்டிய உலோகத் துண்டையோ பிடித்துக் கொண்டிருக்கும் எந்திரங்கள் அளவிலும் கட்டமைப் பிலும் வேறுபடுகின்றன. எந்திரக் கருவிகள் கையால் பிடித்துக் கொள்ளக் கூடிய துளையிடும் அல்லது சாணைபிடிக்கும் சிறிய கருவிகளிலிருந்து, தானி யங்கும், பலவகையான செயல்முறைகளுக்கு உதவும் பெரிய கருவிகள் வரை வேறுபடுகின்றன. வெட்டுளி பயன்படும் எந்திரச் செயல்முறைகளில் வேலை செய்யப்படும் உலோகத் துண்டிற்கும், வெட்டும் கருவிக்குமிடையே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சார்பு இயக்கங்கள் தேவையாக உள்ளன. சிலவற்றில் வேலை செய்யப்படும் துண்டு நகருமாறும், சிலவற்றில் வெட்டுளி நகருமாறும் வடிவமைக்கப் படுகின்றன. வெட்டுளியைப் பயன்படுத்தும் எந்திரச் செயல்முறைகள் சுழற்சி இயக்கத்தையோ, முன்பின் இயக்கத்தையோ கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, கடைசல் எந்திரத்தில் மேற்கொள்ளப் படும் கடைதலிலும், துரப்பணக் கருவியிலும் வேலை செய்யப்படும் துண்டு சுழல்கிறது. வெட்டுளி முன் பின்னாக இயங்குகிறது. துருவல் எந்திரத்தில் இதற்கு எதிர்மாறாக நிகழ்கிறது. ஒரு முனைக் கருவி. பொதுவாக எந்திரங்களில் பயன்படும் பல கருவிகளில் ஒருமுனைக் கருவிகளே அடிப்படையானவையாகும். இவ்வகைக் கருவிகள் கடைசல் எந்திரம், துளை விரிவாக்கும் எந்திரம், வடிவமைப்பு எந்திரம், இழைப்பு எந்திரம் போன்ற வற்றில் பயன்படுகின்றன. சிற்சில மாற்றங்களுடன் வேறு எந்திரங்களிலும் பயன்படுகின்றன. ஒருமுனைக் அவை கருவிகள் பயன்படும் எந்திரச் செயல் முறையைப் பொறுத்து வடிவமைப்பில் வேறுபடு கின்றன. இக்கருவிகள் நேராகவோ. வளைந்தோ வெட்டும் முனை வேலை செய்ய வேண்டிய இடத்தை அடைவதற்கு இலகுவாகச் சிறப்பு அமைப்புகளைப் பெற்றோ இருக்கும். இக்கருவிகள் அதன் வெட்டும் முனைகள் சீராக்கப்பட்ட ஓர் எஃகு துண்டி லிருந்தோ உறுதியான வெட்டும் பரப்பைப் பெறுவதற்காக வெட்டும் முனை தனியாக P ணைக்கப்பட்டோ உருவாக்கப்படுகின்றன. இவ் வாறு இணைக்கப்படும் பகுதி, உயர்தர எஃகினாலோ சின்டர்டு கார்பைடு போன்ற சிறப்புப் பொருளி னாலோ உருவாக்கப்படுகிறது. ஒரு முனைக் கருவிகள் பிடித்தலின் மூலம் கூராக்கப்படுகின்றன. தனியாக இணைக்கப்பட்ட பகுதி, சீர்குலைந்து விட்டால் அப்பகுதி நீக்கப்படுகின்றது. சாணை பொதுவாகப் பயன்படும் பலமுனைக் கருவி. இரண்டாம் வகை வெட்டும் கருவியே பலமுனைக் கருவிகளாகும். இக்கருவிகள் துருவல் எந்திரங்களிலும் கிடைமட்டத் துளை விரிவாக்கும் எந்திரங்களிலும் பயன்படும். பலமுனைக் கருவிகள், ஒருமுனைக் கருவி விட விரைவான செயல்முறைக்கு உதவு கின்றன. பலமுனைக் கருவிகள், ஒருமுனைக் கருவிகளைப் போல் சரிவுக் கோணத்தையும் (rake angle), இடைவெளிக் கோணத்தையும் களை