பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரக்‌ கலப்பை 215

கொண்டுள்ளன. சரிவுக் கோணம் உலோகத் துருவல் களை நீக்கவும். இடைவெளிக்கோணம் வெட்டும் முனைக்குப் பின்னால் உள்ள வெட்டுப் பல்லின் பகுதி வேலை செய்யும் துண்டைச் சீராக்கவும், உராய்வு விசை, இழுவிசை ஆகியவற்றைத் தவிர்க்கவும் உதவுகின்றன. பலமுனைக் கருவிகள் வடிவமைக்கப்படுகின்றன. பல்வேறு வடிவங்களில் வா. அனுசுயா எந்திரக் கலப்பை தற்போது நிலத்தை உழுவதற்கு மாட்டுக் கலப்பை களை விட உழும் எந்திரங்களே (tractor) அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய உழும் எந்திரங் களுடன் இணைக்கப்படும் எந்திரக் கலப்பைகள் அதிக ஆழத்தில் உழும் ஆற்றல் பெற்றவை. இவை வயல் களில் வளரும் புல் பூண்டு செடிகொடிகளை மண்ணோடு மண்ணாகக் கலப்பதற்கும் மண் கட்டி களை உடைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த நேரத்தில் அதிக நிலப்பரப்பை உழுவதே எந்திரக் கலப்பைகளின் தனிச் சிறப்பாகும். எந்திரக் கலப்பை 215 தற்போது வளை பலகைக் கலப்பை (mould board plow) தட்டுக் கலப்பை (disc plow) என்று இரு விதமான எந்திரக் கலப்பைகள் புழக்கத்தில் உள்ளன. கலப்பைகளின் தொழில் எந்திரக் நுட்பங்கள். எந்திரக் கலப்பை உழும் எந்திரத்திலிருந்து கழற்றப் பட்டிருக்கும்போது மேற்புற இணைப்பு (top link) கலப்பையுடனேயே இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உழும் எந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடாது. கலப்பையை உழும் எந்திரத்துடன் ணைக்கும் போது, முதலில் இடக் கீழ்புற இணைப்பு, அடுத்தது வலக் கீழ்ப்புற இணைப்பு. இணைப்பு, இறுதியாக மேற்புற ணைப்பு என்ற வரிசையில் இணைக்க வேண்டும். அதுபோல முதலில் மேற்புற இணைப்பு, பின் வலக் கீழ்ப்புற இணைப்பு, இறுதியாக இடக் கீழ்ப்புற இணைப்பு என்ற வரிசையில் கழற்ற வேண்டும். எந்திரக் கலப்பையுடன் இணைந்த நிலையில் உழும் எந்திரம், சாலைகளில் செல்லும்போது வலக் கீழ்ப்புற இணைப்பிலுள்ள நெம்புகோல் போன்ற அமைப்பைச் சுழற்றி அந்த இணைப்பை முழுதுமாக மேலே உயர்த்தி விட வேண்டும். இதனால் கலப்பை பக்கவாட்டில் அசைந்து எந்திரத்தின் சக்கரத்தில் மோதுவது தவிர்க்கப்படும். படம், தட்டுக்கலப்பை