216 எந்திரச் சாவி
216 எந்திரச் சாவி ஒன்று கலப்பைகளிலும் குறுக்குத் அனைத்து எந்திரக் தண்டு (cross shaft) உள்ளது. அதன் ஒரு பக்கத்தில் கிடைமட்டமாகக் கோடு மேற்புறத்தில் இருக்கும். இந்தக் குறுக்குத் தண்டு உறையினுள் (brackets) அமைக்கப்பட்டிருக்கும். அவ்வுறையில் 1,2,3 என்று மூன்று கோடுகள் செதுக்கப்பட்டிருக்கும். குறுக்குத்தண்டின் நடுக்கோடு இந்த மூன்று கோடுகளில் ஒன்றுடன் பொருந்துமாறு அமைப்பதன் மூலம் கலப்பை உழும் அகலத்தை மாற்றஇயலும். இது குறுக்குத் தண்டை உறையிலிருந்து நீக்கி. அத்தண்டை சுழற்றித்தேவையான நிலையில் மீண்டும் உறைக்குள் மரைகளால் இறுக்கிப் பொருத்துவதன் மூலம் பெறப்படுகிறது. கலப்பையை உழும் எந்திரத்துடன் இணைத்த பின், கலப்பையின் குறுக்கு நெடுக்குச் சட்டங்கள் தரை மட்டத்துக்கு ணையாக இருக்கின்றதா எனக் கவனிக்க வேண்டும். அவ்வாறு ணையாக இல்லாவிட்டால் உழும் எந்திரத்தில் உள்ள வலக் கீழ்ப்புற இணைப்புடன் பொருத்தப்பட்டுள்ள நெம்புகோலைச் சுழற்றிக் குறுக்குச் சட்டம் தரைக்கு இணையாகுமாறு செய்ய வேண்டும். இவ்வாறே. கலப்பையின் மேற்புற இணைப்பின் நீளத்தைக் குறைத்தோ, கூட்டியோ நெடுக்குச்சட்டத் தைக் கிடைமட்டமாக்க வேண்டும். நிலத்தை உழும் போது, உழும் எந்திரத்தின் கீழ்ப்புற இணைப்பு களுடன் கோக்கப்பட்ட சங்கிலிகள் இரண்டும் சம மான தொய்வுடன் இருக்க வேண்டும். இதற்குக்கலப் பையின் குறுக்குத் தண்டு பக்கவாட்டில் நகர்த்தி சீர் செய்யப்படவேண்டும். மாற்றி சில கலப்பைகளில் உழும் ஆழத்தை அமைக்க, தரை உருளை ஒன்று பொருத்தப்பட்டிருக் கும். இத்தரை உருளையின் கைப்பிடியைச் சுழற்றி தேவையான ஆழத்தில் கலப்பை உழும்படிச் செய்யப் படுகிறது. அதாவது தரை உருளையை மேலே தூக்கி வைத்தால் கலப்பை அதிக ஆழத்தில் உழும். கீழே இறக்கி வைத்தால் உழப்படும் ஆழம் குறையும். தட்டுக் கலப்பையில் மேற்கொள்ளப்படும் நுட்பம். தட்டுக் கலப்பையின் பின்புறம் சால் உருளை (furrow wheel) ஒன்று இருக்கும். அதன் சுழலும் தகடு கலப்பை நகரும் திசைக்கு ணையாக இருக்க வேண்டும். தட்டுக் கலப்பையை உழும் எந்திரத்துடன் இணைக்கும்போது இடக் கீழ்ப்புற இணைப்பைக் காப்புச் சட்டம் (check strut) கொண்டு இணைக்க வேண்டும். தட்டுகளைத் தாங்கியுள்ள உறையில் (disc bearing bracket) மூன்று பள்ளங்கள் உள்ளன. கலப்பை உழும் ஆழத்திற்குத் தக்கவாறு தட்டுகளைத் தகுந்த பள்ளத்தில் பொருத்த வேண்டும். தட்டு களின் உட்புறம் மண் எப்போதும் ஒட்டிக் கொள்ளா தட்டுகளுடன் ஆழம் அதிகமாக மல் இருக்க இதனுடன் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். உழும் இருந்தால் இத்தகடுகள் தரை மட்டத்திற்கு உயரே வயலில் இருக்க வேண்டும். கட்டிகள் அதிகமான அளவில் உடைக்கப்பட வேண்டி இருந் தால் இத்தகடுகளைச் சற்றுத் தாழ்த்தி வேண்டும். சால் வைக்க என்று உருளையின் நடு அச்சில் 1,2,3 மூன்று வளையங்கள் சம இடைவெளிகளுடன் செதுக்கப்பட்டிருக்கும். கலப்பையின் குறுக்குத் தண்டில் உள்ள நடுக்கோடு அதன் உறையில் உள்ள கோடு 1-க்கு நேராக இருந்தால், சால் உருளையின் நடு அச்சில் உள்ள முதல் வளையம் அதன் உறையின் விளிம்புகளுக்கு நேராக இருக்கும்படிச் செய்ய வேண்டும். எந்திரச் சாவி வா. அனுசுயா . ஒரு சுழல் தண்டில் ஒரு கப்பி அல்லது பல்சக்கரம் பொருத்தப்படும்போது இரண்டிற்கும் இடையே சார்பு இயக்கம் இல்லாத ஒரு கூட்டு அமைப்பாக அவ்விணைப்பு செயல்படுதல் வேண்டும். இவ்வாறு ஒரே அமைப்பாகச் செயல்படும்போதுதான் இயக்க ஆற்றலை ஒரு சுழல் தண்டிலிருந்து மற்றொரு சுழல் செலுத்த இயலும். அவ்வாறு ஒரே தண்டிற்குச் அமைப்பாகச் செயல்படுவதற்கு, இவ்விரண்டு உறுப்பு களுக்கு இடையே பொருத்தப்படும் முக்கிய உறுப்பே எந்திரச் சாவி (machine key) எனப்படும். எந்திரங் களில் பலவகை எந்திரச் சாவிகள் பயன்படுத்தப் படுகின்றன. பொருத்தலின் தன்மை, இணைப்பின் நிலைத் தன்மை. உற்பத்தி விலை ஆகிய காரணங்களின் தன்மையைப் பொறுத்துச் சுழல் ஆற்றலின் தேவை அமையும். குறைந்த சுழல் ஆற்றலைச் செலுத்தவேண்டு மாயின் திருகு ஆணியைப் பயன்படுத்தினால் போது மானது. இத்திருகு ஆணியைச் சுழல் தண்டில் தொடுமாறு பதித்துத் திருக வேண்டும். ஆனால் இவ்வகை இணைப்பில் திருகு ஆணி அடிக்கடி நழு வும் வாய்ப்பு உண்டு. எனவே பெரும்பாலான சமயங்களில் எந்திரச் சாவி நழுவாமல் இருக்கத் திருகு ஆணியைப் பொருத்துவார்கள். இதனால் எந்திரச் அச்சுத் திசையில் நழுவாமல் இருக்கும். சாவி சதுர எந்திரச் சாவிகள் பொதுவாகத் தொழிற் சாலை எந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.