220 எந்திரச் சுருள்வில்
220 எந்திரச் சுருள்வில் சக்தியினையும் பெற்றுள்ளன. இவை பெரிதும் தானி யங்கி ஊர்திகளிலும் விசைச் சுத்திகளிலும் (power bammer) மிகச் சிறப்பான பயனைத் தருகின்றன. சுருள்வடிவச் சுருள்வில் (spiral spring). இத்தகைய சுருள் வில்லின் அமைப்பு. சிலந்தி வலை போன்று இருக்கும்; சுருள்வில் தன்மையும் மிகக் குறைந்த அளவில் இருக்கும். இருப்பினும் இது சிறிய எந்திரப் பாகங்களில் பொருத்தப்பட்டு வியக்கத்தக்க வகை யில் நன்மைகளைப் பயக்கின்றது. சான்றாக, கடிகாரங்கள், மின்னியல் கருவிகள் திசை காட்டும் கருவிகள், சுட்டிக்காட்டும் அளவுமானிகள் ஆகிய வற்றில் இதன் பயன் வியக்கத்தக்கது. சிறப்புச் சுருள்வில். மேற்கூறப்பட்ட பொது வான வகைகளைத் தவிர தட்டு வடிவச் சுருள்வில் நீள் சதுரச்சுருள்வில், கூம்புவடிவச்சுருள்வில் ஆகியவை மிக அதிகமான வில் தன்மை தேவைப் படும் அமைப்புகளில் பொருத்தப்படுகின்றன. மேலும், அலை வடிவச் (wave washer) சுருள் வில்களும் உள்ளன. இவ்வகையான சுருள்வில் மூன்றி விருந்து ஆறு அலை வடிவம், அல்லது வளைவு களைப் படம் 4-இல் காட்டியுள்ளபடிப்பெற்றுள்ளது. எந்திர அமைப்புகளில் சில பகுதிகளை அமைக்கும் போது இடைவெளி ஏற்படலாம்; இத்தகைய இடை வெளிகளை ஈடு செய்வதற்கும் நிரப்புவதற்கும் இத் தகைய அலை வடிவ அமைப்புகள் பயன்படுகின்றன. படம் 2. தகட்டுச்சுருள் வில்