222 எந்திரத் திருகுமரை
222 எந்திரத் திருகுமரை மானவை நிலையாகவோ இணைக்கலாம். அவ்வாறு தற்காலிக மாக இணைக்கப் பயன்படுவனவற்றில் மிக முக்கிய மரையாணியும் (bolt), அதனுடன் இணைந்த திருகுமரையும் (nut) ஆகும். இவ்வாறு இணையும் திருகுமறையையும் செருகு ஊசியையும் திருகு இணை (screw pair) என்று கூறுவர். படம் 1 இல் இதன் அமைப்பு விளக்கப்பட்டுள்ளது. படம் 1. மரை ஆணி திருகுமரை ணை திருகு மரையைக் கழற்றி விட்டால் இணைப்பை எளிதாகப் பிரிக்கலாம். திருகுமரை பெரும்பாலும் காரீயம் குறைவாக உள்ள தேனிரும்பினால் உரு கலவைகளும் வாக்கப்படும். சிலசமயம் அலுமினியக் பயன்படுவதுண்டு. திருகுமரைகள் குறைந்த அளவு உயரமுள்ள பட்டகங்களாக இப்பட்டகங்கள் உருளை சதுர வடிவமைக்கப்படும். வடிவமாகவோ, மாகவோ அறுகோணமாகவோ இருக்கும். இருப்பினும் அறுகோண வடிவே பெரும்பாலும் பயன்படுகிறது. வெளிப் பட்டகங்கள் எதுவாக இருப்பினும் திருகு மரை வட்ட வடிவத் துளையைக் கொண்டு இருக்கும். இந்த வட்ட வடிவத் துளையின் விட்டம் ஆணியின் விட்டத்தை ஒட்டியிருக்கும். மரை திருகு மறையில் பட்டைகளை ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கம் புரிமுடுக்கியைப் (spanner) பொருத்துவதற்கே. இப்புரிமுடுக்கியைக் கொண்டு திருகை முடுக்கவோ சுழற்றவோ முடியும். அறு கோணத் திருகுமரையைவிடச் சதுர வடிவத் திருகு மரையின் புரிமுடுக்கி முழுத்திறனுடன் இயக்கப்படும். அறுகோணத் திருகுமரையில் அடுத்த பிடிப்பிற்கு 6.0° திருப்ப நேர்ந்தால் சதுர வடிவிற்கு 90° திருப்ப வேண்டும். எனவே சதுர வடிவத் திருகுமரையை விட அறுகோணத் திருகுமரையே எளிதாகும். எட்டுப் பட்டைகளைக் கொண்டிருந்தால் 1/8 அளவு திருக வேண்டி வரும். இவ்வடிவம் எளிதான இயக்கத்தைக் கொடுத்தாலும் புரிமுடுக்கி நழுவி விடுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே திருகுமரைகள் ஆறு பட்டைகளுக்கு மேல் தீட்டப்படுவதில்லை. மேற்கூறப்பட்ட சதுர, அறுபட்டை வடிவங்களைத் தவிர மேலும் சில சிறப்பு உருக்கொண்ட திருகுமரைகளும் தேவைக்கேற்ப பயனில் உள்ளன. திருகுமரை பொருத்துதலும், பயனும் படம் 1 இல் விளக்கப்பட் டுள்ளன. அறுகோணத் திருகுமரை. படம் 2 இல் இதன் வடிவம் அளவீடுகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது. இத்திருகுமரைகளைக் கையால் பயன்படுத்தும்போது படம் 2. T