பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் களஞ்சியம் தொகுதி - ஆறு எஃகு கட்டகம் (dead பிற கட்டடப் பொருள்களுடன் எஃகை ஒப்பிடு கையில் எஃகு சட்டங்களைக் கொண்டு உருவாக்கும் கட்டகங்களில் அதன் இழு விசை, அமுக்கம், வலிமை ஆகியவை மிக அதிகம். இதன் வலிமை - எடைவிகிதம் மிகுதியானதால் கட்டகத்தின் தன்சுமை load) குறைகிறது. மேலும் எஃகுசட்டங்கள் பல வடிவங்களிலும் அளவுகளிலும் கிடைப்பதால் அவற்றை எளிய முறையில் பயன்படுத்தலாம். அவை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவதால் கூடுதல் தரம் கொண்டவை. பட்டறைகளில் தயாரித்துக் கட்டுமான இடங்களில் பொருத்த முடியுமாதலால் கட்டுமான காலம் குறைகிறது; வேலையின் தரமும் சிறப்பாக அமைகிறது. எனவே, எஃகு பல வகைக் கட்டகங்களில் பயன்படுகின்றது. தொழிற்சாலைக் கட்டகங்கள், பட்டறைகள். பாலங்கள், மின் செலுத்து கோபுரங்கள் போன்ற கட்டுமானங்களில் எஃகு மிகுதியாகப் பயன்படுகின்றது. ஆனால் இது தீத்தடுப்புத் தன்மை குறைவாகக் கொண்ட மேலும் எளிதில் அரிப்பு, துருப்பிடிக்கும் தன்மை உடையது. இதனால் எஃகு கட்டகங்களின் பரா மரிப்புச் செலவு கூடுதலாகிறது. டது. வலிமை. கட்டகம் பல உறுப்புகளைக் கொண்ட தாகும்.கட்டகத்தின் உறுப்புகள் யாவும் அவற்றின் மீது செயல்படக் கூடிய சுமைகளைத் தாங்கும் வலி மையுடையனவாக இருத்தல் வேண்டும். மீ விறைப்புத்தன்மை. கட்டகத்தின் உறுப்புகளிலும் கட்டகத்திலும் ஏற்படும் குலைவு, தொய்வு, விரிசல் முதலியன செந்தர அளவுகளுக்கு மேல் இருக்கக் கூடா நிலைப்பாடு. முழுக்கட்டகமும் அதன் மேலுள்ள சுமையினால் குப்புறக் கவிழாமலும் கிடைவாக்கில் நகராமலும் இருத்தல் வேண்டும். கட்டகம் தாங்க வேண்டிய சுமை. ஒரு கட்டகம் அமைந்துள்ள இடம், பயன்படுத்தப்படும் முறை இவற்றைப் பொறுத்துப் பலவகையான சுமைகளைத் தாங்க வேண்டியிருக்கும். இவற்றுள் தன்சுமை, பயன்சுமை (live load) காற்றுச்சுமை (wind load) முதலியன முக்கியமானவை, இந்தியச் செந்தரச் சுவடி எண் 875 இல் இவ்வகைச் சுமைகளின் விவ ரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டகங்களை வடி வமைக்க இதில் பரிந்துரைக்கப்பட்ட சுமைகளைப் பயன்படுத்த வேண்டும். எஃகு கட்டகங்களை வடி வமைக்கும் முறைகள் இந்தியத் தர நிர்ணய வரை முறை எண் 800 இல் கொடுக்கப்பட்டுள்ளன. எஃகு கட்டகங்களின் உறுப்பு. இரும்புக் கட்ட கங்கள் பெரும்பாலும் இழுவிசை உறுப்புகள், அமுக்க உறுப்புகள், உத்திரங்கள் (beams), தகட்டு உத்திரங்கள் (plate girders), கோர்வு உத்திரங்கள் (trusses) ஆகிய உறுப்புகளைக் கொண்டு அமைகின் றன. மேற்கூறிய உறுப்புகளைத் தொழிற்சாலையில் தயாரித்த உருட்டு எஃகு வடிவங்களைக் கொண்டு அமைக்கலாம். மிகுதியான அளவில் தயாரிக்கப்படும் சில எஃகு வடிவங்களைப் படம் 1 இல் காணலாம். இழுவிசை உறுப்பு. இவ்வகை உறுப்புகள் இரு முனைகளிலும் இழுவிசைக்கு உள்ளாகின்றன. பயன் படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து இவை பல வகைப் பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. சுமை தூக்கும் பொறிகளிலும், கட்டுமானங்கள் சாயாமல் இழுத்துக் கட்டப்படும் அமைப்பிலும் இவை நாண்கள் (ties) எனப்படுகின்றன. இழுவிசையை உறுப்பின் தாங்குகிறது. நிகர பரப்பு மட்டுமே உறுப்பின் மொத்த வெட்டுமுகப் பரப்பிலிருந்து மரையாணி களின் அல்லது தறையாணிகளின் துளைகளுக்கான பரப்பைக் கழித்தால், நிகர பரப்பு கிடைக்கும். L-வடிவ மற்றும் T - வடிவ இரும்பு வடிவங்களின் நிகர பரப்பை இந்தியத் தர நிர்ணய எண் 800 இலிருந்து தீர்மானிக்கலாம். இழுவிசை வரைமுறை