பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 எந்திரப்‌ பலன்‌

226 எந்திரப் பலன் ஏனையவை வை உறவுடைய நிலையானவை. இயங்கும் பகுதிகளை அமைப்புகளாக கோப்பு ணைக்கும் செயல்படுகின்றன. எந்திரம், எந்திரத் தொகுதி என்ற சொற்கள் ஒத்தபொருளுடைய சொற்கள் என்றாலும் எந்திரத்தொகுதி பல எந்தி ரங்களை உள்ளடக்கிய பெருந்தொகுதியாகும்.தானி யங்கிகள், சலவை செய்யும் எந்திரங்கள், வானூர்தி கள் போன்றவை எந்திரத் தொகுதிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். எந்திரத்தொகுதி கூடுதலான பல் வேறு பகுதிகளும் சிக்கலான இயல்பும் கட்டமைப்பும் உடையது. சில எந்திரத் தொகுதிகள் எளிய எந்திரப் பலன் மட்டும் தருவனவாக அமையும். சில எந்திரத்தொகுதி கள் மனிதனால் ஆற்ற இயலாத தொடர்ச்சியான நெடுநேரப் பணியாற்றுவனவாக அமைகின்றன. திருகு தூக்கியை (screw jack) முன்னுள்ளவற்றுக்கும் உட்கனல் பொறியைப்பின்னுள்ளவற்றுக்கும் எடுத்துக் காட்டாகக் கூறலாம். திடீ குறைந்த செலவில் வேலை செய்யும் தேவையை நிறைவேற்றவே எந்திரத் தொகுதிகள் உருவாகும் போது இந்த எந்திரத் தொகுதிகளின் உருமலர்ச்சி விரைவாக நிகழலாம்; படிப்படியாகவும் ரெனவும் நிகழலாம். சிறுசிறு பொருள்களைச் செய் யும் எந்திரத் தொகுதிகள் உருமலர்ச்சிக்கு ஆட்படு வது குறைவாகவே இருக்கும். ஆனால் இவை உயர் நிலைத் தன்னியக்கம் வாய்ந்தவையாக வடிவமைக்கப் பட்டிருக்கும். பேரளவு உற்பத்திக்கு உதவும் எந்திரத் தொகுதிகள் விரைவாகப் படிமலர்கின் சிக்கலான ன்றன. உயர்நிலைத் தன்னியக்க எந்திரங்கள் பலவற்றை அவை உள்ளடக்குகின்றன. தானியங்கிப் பொருள் களைப் படைக்கும் எந்திரக் கருவிகளைப் பேரளவு உற்பத்திக்கு உதவும் எந்திரத் தொகுதிக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். காண்க. எந்திரம், வடிவமைப்பு, எந்திரப் பொறியியல். எந்திர உலோ. செந்தமிழ்க்கோதை எந்திரப் பிணைப்பு திண்மப் பொருள்களால் ஆன இடையிணைப்புகளைச் சுழல் தானங்களில் இணைத்து உருவாக்கிய அமைப் பையே எந்திரப்பிணைப்பு என்பர். ஒரு பொருளின் இரு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம் விசைகளின் தாக்கத்தால் மாறாமல் இருக்குமாயின் அதைத் திண் மப் பொருள் என்று அழைக்கலாம். பிணைப்புகள் பொதுவாக ஆற்றலைக் கட த்துவதற்குப் பயன்படு கின்றன. இப்பிணைப்புகள் தங்களுக்குக் கொடுக்கப் படும் உள்ளீட்டு இயக்கம் எத்தன்மையாக இருப் பினும், இடையிணைப்பின் ஒரு புள்ளியை, ஒரு குறிப்பிட்ட வளைவுப் பாதையில் நகருமாறு வடி வமைக்க இயலும். இவற்றைக் கொண்டு கோண அல்லது நேர் கோட்டு இடப்பெயர்ச்சியை உருவாக்க இயலும். இடையிணைப்புகள் சட்டங்களாக வடிவமைக்கப் பட்டு இருந்தால் இவற்றைச் சட்டப் பிணைப்பு என்று வழங்குவர். தோராயமாக ஒரு சட்டத்தை நேர் கோட்டுப் பகுதியாகவோ, வளைவின் பகுதியாகவோ கொண்டு, அது ஒரு சுழல் தானத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். நான்கு தண்டுப் பிணைப்பைப் பொதுவாக, எந்திரப் பிணைப் புகளின் அடிப்படைப் பிணைப்பாகக் கொள்ளலாம். 4. A 3 D 2 1 B எந்திரப் பலன் ஓர் எந்திரத்தின் மேல் செலுத்தப்படும் விசைக்கும், எந்திரம் செலுத்தும் விசைக்கும் அதாவது, எந்திரத் தின் வெளியீட்டுக்கும் உள்தருகைக்கும் உள்ள தகவு எந்திர லாபம் அல்லது எந்திர ஈட்டம் (mechanical advantage) எனப்படுகிறது. தனி எந்திரங்களை விளக்கும் திறமை குறியீட்டெண்ணாகப் பயன்படு சிக்கலான கிறது. எந்திரங்களுக்கு இக்கருத்துப் பயன்படுவதில்லை. சிக்கலான எந்திரங்களில் விசை களைவிடப் பிற தேவைகள் முக்கியமானவை. காண்க, திறமை; தனி எந்திரம். உலோ. செந்தமிழ்க்கோதை 1.நிலையான தண்டு, 2. வணரி, 3. இணைப்புத்தண்டு, 4. வணரி. படம் 1. நான்கு தண்டுப் பிணைப்பு படம் 1 இல் நான்குதண்டுப் பிணைப்பின் அமைப்பைக் காண்க. நான்கு தண்டுப் பிணைப்பில் முதல் தண்டு நிலையான தண்டு (fixed link) என்றும், இரண்டாம் தண்டு வணரித்தண்டு என்றும், மூன்றாம் தண்டு இணைப்புத்தண்டு (coupler rod) என்றும் நான்காம் தண்டு வணரி என்றும் பெயர்பெறும். ஒரு தண்டை