பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 எந்திரம்‌

232 எந்திரம் தொல்லுயிர் எரிபொருள், நிலக்கரி, பெட்ரோ லியம் எரி-எண்ணெய், நீரியல் ஆற்றல், ஓத ஆற்றல் (tidal power) கடல் நீர், மென்காற்று நில வெப்ப ஆற்றல்,உயிர் வளி ஆற்றல், சூரிய ஆற்றல், பாய் மங்களின் தன்மை போன்ற அறிமுறைகளைச் செயற் படுத்தும் பல அடிப்படைத் தத்துவங்களை எந்திர வியல் கொண்டுள்ளது. இவ்வகையான ஆற்றல்களை வெளிப்படுத்த எந்திரவியலில் உள்ள அமைப்புகளான கொதிகலன், நீராவிப் பொறி, உட்கனற் பொறி, சுழலி, (turbine), மின் நிலையம், காற்றழுத்தி (compressor), குளிரியல் காற்றுச் சீராக்கல் முறைகள் பெரிதும் உதவுகின்றன. உற்பத்தி. மனித வாழ்விற்கும், வளத்திற்கும் இன்றியமையாதவாறு விளங்கும் பல்வேறு பொருள் களும் எந்திர அமைப்புகளேயாகும். அவற்றை உருவாக்க வேண்டிய கருவிகள், பெரிய எந்திரங்கள், அவற்றின் தொழில் நுட்பங்கள் செயற்படுத்தும் முறைகள் ஆகியவை உற்பத்திப் பிரிவின் விளக்கங் களாகும். எந்திரங்கள் அல்லது பொறிகளைச் செயற் விளக்கங்கள், கட்டுமான படுத்தும் முறைகள், சிறப்பாகச் செயற்படுத்த உள்ள வழி முறைகள் மட்டுமல்லாமல்தொழிற் கூடங்களைத் திட்டமிடுதல், நிறுவுதல், நிர்வகித்தல், இயக்குதல், பராமரித்தல் போன்ற அறிவியல் துறைகள் எந்திரவியலின் இப் பிரிவில் அடங்கும். இவை தொழிலக மேலாண்மை எனக் குறிப்பிடப்படுகின்றன. மேலும், எந்திரவியலில் பொறிகளையும் இதர அமைப்புகளையும் திட்டமிட்டு அளவீடுகளுடன் வடிவமைக்கும் பணி முதன்மையானதொன்றாகும். இது பொறியின் மூலப் பகுதிகளுக்கான திட்ட வடிவமைப்புக்கலை (design of machine elements) எனப்படுகிறது. அது மட்டுமன்றிப் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு உலோகங் களின் கூறுகள், சிறப்பியல்புகள், உருமாற்றங்கள், வெப்பப் பதனிடுதல் (heat treatment), உலோகத் தனித் தன்மை, சீர்படுத்துதல் போன்ற அறிவியல் நுட்பங்களையுடைய உலோகவியல், எந்திரவியலின் சிறப்பான பகுதியாகும். பொருள்களை வடிவமைத்து உருவாக்குவதில் உலோகங்களின் தன்மை, உருவமேற்ற அடித்து வடித்தல், உருட்டல், இழைகடைதல், வார்ப்பட வியல், உருக்குதல், உலோக இணைப்பு முறைகள். பற்றவைப்பு (welding), சூட்டிணைப்பு (soldering) பற்றாசிடல் (brazing) போன்ற வழிமுறைகளும், கடைசல் வடிவமைப்பு, இழைத்தல், துளையிடல், துருவுதல் அரைவை ஆகிய செயல்களுக்கான சிறப்பு எந்திரங்கள். விசை ஊடிணைப்பு வகைகள் ஆகிய வற்றின் அடிப்படைகளும் எந்திரவியலின் உற்பத்திப் பிரிவுகளில் உள்ள முக்கிய அம்சங்களாகும். அறி வியலில் உள்ள இருவகை ஆற்றல்களை உயர்நிலை ஆற்றல் (potential energy) இயக்க ஆற்றல் (kinetic energy) என்றோ வெப்ப ஆற்றல் வேலை என்றோ பாகுபடுத்தி ஆற்றல்களை மாற்ற வழிமுறைகளும் கருவிகளும் அமைக்கப்பட்டன. இவ்விதமான கருவி களைப் பயனளிக்கத் தக்க வகையில் செயலாற்றும் தத்துவங்களே எந்திரவியலின் முக்கிய குறிக்கோ ளாகும். எந்திரம் கே.ஆர்.கோவிந்தன் ஒத்தது பயன்மிக்க வேலைகளைச் செய்வதற்கேற்ற குறிப் பிட்ட இயக்கங்களை நிகழ்த்தும் விறைப்பான அல் லது தகுந்த தடை தரும் உறுப்புகளான கூட்டமைப்பு எந்திரம் (machine) எனப்படுகிறது. இயங்கமைப்பு (mechanism) என்ற சொல் எந்திரத்தை எனினும் அது எந்திரத்தின் குறிப்பிட்டதொரு பகுதி யின் வரையறுத்த இயக்கத்தை மட்டும் உருவாக்கும் அமைப்பையே குறிப்பிடுகிறது. கைக்கடிகாரம் ஓர் இயங்கமைப்பு. இது பயன்மிக்க வேலை ஏதும் செய் வதில்லை. எனவே இது எந்திரமன்று. எந்திரங்கள் உருவத்திலும் செயலிலும் பலவகைப் பட்டவை. எளிய கைத்துளைப்பு எந்திரம் முதல் சிக்க லான கடல் தரையிடுவான் ( occan liner) வரை பல நிலை எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. கடல் தரையிடுவானில் பல எளிய எந்திரங்களும் சிக்கலான அமைப்புகளும் உள்ளடங்கியுள்ளன. எந்திரம் பார் வைக்கு எவ்வளவு சிக்கலானதாகத் தோன்றினாலும் அவற்றின் இயக்கத்தைப் பல தனி வினைகளாகப் பிரிக்கலாம், தனி வினைகள் அடிப்படை இயற்பியல் விதிகளின்படி நிகழக் காணலாம். எந்திரம்,அச்சடிக்கும் உலோ. செந்தமிழ்க் கோதை நடைமுறையில் நான்கு பெருவகையான எந்திரங்கள் அல்லது அச்சடிப்பு அமைப்புகள் உள்ளன. அவை தனி எழுத்து அச்சு எந்திரம் (letter print), மறு தோன்றிக் கல்லச்சு எந்திரம் (offser lithographic machine), அச்சு குடைவு எந்திரம் (engraving machine). திரைமுறை அச்சு எந்திரம் (screen printing machine) என்பனவாம். தனி எழுத்து அச்சு எந்திர முறை யில், அடிக்கப்படவேண்டிய அச்சுப் படிமம் மேற் பொருக்காகக் (in relief) அமையும். மேற் பொருக்குப்