234 எந்திரம் அச்சடிக்கும்
234 எந்திரம் அச்சடிக்கும் 迎 Michie ROLAND JUD படம் 1. தனித்தாள் ஊட்டும் மறுதோன்றி அச்சு எந்திரம். வீதத்தில் அச்சிடுதல் நிகழும். அச்சிடப்பட்டதும் இந்தத் தாள்கள் அச்சகத்தின் அனுப்புகைப் பகுதிக் குக் கொண்டு செல்லப்படும். மிகச்சிறிய அல்லது நடுத்தர வேலைகள் ஒரு வண்ணத்தில் அச்சடிக்க இவை மிகவும் ஏற்றவை. தாளை நான்கு தடவை அனுப்பி நான்கு வண்ணங்களிலும் இந்த எந்திரத்தில் பெரிய வேலைகளுக்கும் உயர்ந்த அச்சடிக்கலாம். தரமுள்ள வேலைகளுக்கும் இருவண்ண, பலவண்ண அச்சு எந்திரங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. தொடர்ந்து ஊட்டும் மறுதோன்றி முறை. தொடர்ந்து ஊட்டும் மறுதோன்றி அச்சு எந்திரங்கள் சீர்பாட்டுக் கோட்பாட்டைப் (perfecting principle) பயன்படுத்துகின்றன. இதில் இரண்டு அணிகள் மேல்பக்கத்தையும் அடிப்பக்கத்தையும் ஒரு தடவை யிலேயே அச்சிடுகின்றன. இவை படம் 2-இல் காட்டப்பட்டுள்ளன. இந்த அணிகள் இரண்டும் எதிரெதிர்த் திசையில் அமைந்து ஒன்று அச்சடிக்கும் போது அது மற்றொரு பக்கத்திற்கு முறையாகப் பயன்படும். சீர்பாட்டுக்கோட்டைத் தனித்தாள் ஊட்ட அச்சு எந்திரத்தில் பயன்படுத்தித் தாளின் இரு பக்கத்திலும் ஒரே தடவையில் அச்சடிக்கலாம். மேற்பூச்சுள்ள தாள் அல்லது பிற வேதிப் பூச் சீர் சுள்ள தாள்களைத் தொடர்ந்து ஊட்டும் பாட்டு முறை அச்சு எந்திரத்தில் செலுத்தும்போது சூடான மை பயன்படுத்தப்படுகிறது. இந்த மையை உலர்த்த இதில் ஓர் அடுப்பு இருக்கும். நூல் வெளியீட்டகங்களிலும் வண்ண அச்சடிப்பு நிறுவனங்களிலும் படம் 3 இல் உள்ள டை (web) ருளை உள்ள அச்சு எந்திரங்கள் பயன்படுகின்றன. இதில் பல் தகடுகளும் உறைகளும் உள்ள உருளைகள் ஒரு பொது பதிவுருளையைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த முறையினுடைய சிறப்பு அம்சம், பலவண்ணங்களைத் தக்கபடி இருப் பில் அமைக்க முடிவதாகும். தொடர்ந்து ஊட்டும் மறுதோன்றி அச்சு எந்திரங்கள் 600-2000 அடி (100-600 மீட்டர்) நீளத்தாளை ஒரு நிமிடத்தில் அச்சடிக்கின்றன. மறுதோன்றி முறை நகல் எடுப்பிகளும் படிமம் அச் டிக்கும் எந்திரங்களும். இவை எடையிலும் தரத் திலும் குறைந்தவை ஆகும். இவை அலுவலகங்கள், பள்ளிகள் சிறிய அச்சகங்கள் ஆகிய இடங்களில் கடிதங்கள், ஆவணங்கள், படிவங்கள் உருவாக்கப் பயன்படுகின்றன. இவற்றின் அளவுகள் 10×14"- 18×24" வரை (25×37-4670 செ.மீ. வரை