பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 எந்திரம்‌ அச்சடிக்கும்‌

236 எந்திரம் அச்சடிக்கும் அமையும். இவற்றில் செலவு குறைந்த தாளாலான படிமத்தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தலைமைப் படிமங்கள் (masters) எனப்படுகின்றன மறுதோன்றி கல்லச்சு முறையில் அச்சடிக்க ஆயத்தப்படுத்தும் நேரம் மிகக் குறைவானது. அதில் பயன்படும் அச்சுத் தகடுகளை ஒளிப்பட முறையில் செய்வது எளிது. பல்வேறுபட்ட பொருள்களில் செயலைச் அச்சடிப்புச் உயர் தரமான வல்லது. நூல் வெளியீடு, நூல் விலைப்பட்டியல், செய்தித்தாள், புத்தகம், வாழ்த்து அட்டை, பெட்டி, கோப்பு, முத்திரை, கலைப்படம் போன்றவற்றை இம்முறையில் அச்சடிக்க முடியும். 4 செய்ய ஒளிப்பசை அச்சடிப்பு முறை எந்திரங்கள். இவை மையும் நீரும் கலவா என்ற கோட்பாட்டைப் பயன் படுத்தும் மறுதோன்றிக் கல்லச்சு முறையையே பயன் படுத்துகின்றன. இது அரைவரி நிழல் அல்லது முழு நிழல் விளக்கப்படங்களை திரையின்றி ஒளிப்பசைப் பொருளால் உருவாக்க வல்லது. பைக்குரோமேட் உள்ள பசை அச்சடிப்பு ஊடகமாகப் பயன்படுகிறது. தேவையான நீர், பசை பூசிய அச்சுத்தகடு பசை- நீர்க்கரைசலில் அமிழ்த்திப் பெறப்படுகிறது. இவை பசை நீரைத் தாம் உறிஞ்சிய ஒளி அளவுகளுக்கு ஏற்ப உறிஞ்சும். இந்த எந்திரங்களில் ஒரு மணி நேரத்தில் 100-5000 படிகள் உருவாக்கலாம். இவை திரைப்பட விளம்பரப் படங்கள் அடிக்கவும் நுண்ணிய கலைப்படங்கள் அடிக்கவும் உதவுகின்றன. உலர் மறுதோன்றி முறை. இம்முறை மறு தோன்றி முறையையும் தனி எழுத்து அச்சடிப்பு முறையையும் இணைத்துச் செயல்படுகிறது. இம் முறையில் அச்சுத்தகடு தனி எழுத்து முறை போலவே அச்சுப்பகுதி மேல் எழுந்தும், அச்சிடாப் பகுதி கீழ் தாழ்ந்தும் இருக்கும். தகட்டில் உள்ள மை முதலில் ரப்பர் உறைக்கு மாற்றப்பட்டுப் பிறகு அது தாளுக்கு மாற்றப்படும். இங்கு தனி எழுத்து அச்சுத் தகடு பயன்படுத்தப்படுவதால் ஈரப்படுத்தும் அமைப்புகள் தேவை இல்லை. இந்த அச்சடிப்பைப் பல்வேறுவகைத் தாள்களில் அச்சடிக்கலாம் இம்முறை அச்சுத்தகடுகள் அச்சுத் மறுதோன்றி தகடுகளைவிட நீண்ட ஆயுள் உடையன. ஆனால் மறுதோன்றி முறையை விட அச்சடிக்க ஆயத்தம் செய்யும் நேரம் இம்முறை யில் கூடுதலாக அமையும். எனவே இது புத்தகம், விளம்பரத் தாள்கள். பெட்டிகளில் பயன்படும் பெயர் விளம்பரங்கள் அச்சடிக்கப் பயன்படு கின்றது. அச்சுத் தகடுகள் மக்னீசியம், துத்தநாகம், நெகிழி அல்லது நெகிழி பூசிய உலோகங்கள் ஆகிய வற்றில் செய்யப்படுகின்றன. இவ்வகை உலர் மறு தோன்றி முறை அச்சுத்தகடுகள் நேரடிப் படிம ஒளிப்பல்லுறுப்பி அச்சுத்தகடுகள் (direct image photopolymer plates) என அழைக்கப்படுகின்றன. உலர் மறுதோன்றி வரைமுறை. து மற்றோர் உலர் மறுதோன்றி அச்சடிப்புச் செயல் முறை ஆகும். இதிலும் படிமம் பிரிக்கத் தண்ணீரைப் பயன்படுத்து வது இல்லை. இதற்கான அச்சுத் தகடுகள் படிமம் இல்லாத பரப்புகளில் மையை எதிர்க்கக் குளோரின் ஊட்டிய ஹைடிரோ கார்பனால் பூசப்படுகின்றன. இது வணிகப் படிமங்களை அச்சடிக்க ஏற்றதாகும். து தனிஎழுத்து அச்சு எந்திரம். அச்சடிப்பு முறை களில் இரண்டாவதாக உருவாகிய முறை தனி எழுத்துகளை அச்சுக்கோத்து அடிக்கும் முறையாகும். 1454-இல் விவிலிய நூலை அச்சேற்றிய கூட்டன் பர்கு காலத்திலிருந்து இச்செயல்முறை வழக்கிற்கு வந்தது; என்றாலும் இதற்கு முன்பே சீனாவிலும் கொரியாவிலும் மரப்படக் கட்டைகளால் அச்சடிக்கும் முறை நிலவியது. தனி எழுத்து அச்சடிப்பு முறையில் தனித்தனி எழுத்துக்கள் அச்சுக்கோக்கப்படுகின்றன. இந்த எழுத்துக்களும் படங்களும் ஒரு சட்டத்தில் இறுக்க மாகப் பொருத்தப்படுகின்றன. இந்த அமைப்பு அச்சுத்தகடு போலப் பயன்படுகிறது. எழுந்துள்ள பரப்பில் சம அளவில் மையைத் தடவி தாளில் அச்சடிக்கலாம். எழுந்த பரப்பில் உள்ள மைப்படலம் அச்சடிக்கும்போது பிரிந்து தாளில் பதிந்து அச்சுப் படிமத்தை (print image) உருவாக்கும். படம் 4. தனி எழுத்து அச்சு எந்திரம் நடைமுறையில் தனி எழுத்து அச்சு எந்திர வடிவமைப்புகள் உள்ளன. அவை, தட்டுவகை (platen type), தட்டைப்படுக்கை உருளை (flatbed cylinder) (படம் 4) சுழல் வகை (rotary) எனப்படும். தட்டுவகை அச்செந்திரங்கள் (platen press). இரு தட்டைப் பரப்புகளை ஒருங்கிணைத்து அச்சடிக்கும் எந்திரம் தட்டு அச்செந்திரமாகும். அச்சுப்படிவம் அல்லது தனி எழுத்து அச்சுத்தட்டு (relief printing plate) அச்சு எந்திரத்தில் அமைந்த படுக்கைக்கு குத்துவாக்கில் ஒற்றப்படும். அச்சிட வேண்டிய தாளில் படிவத்தின் செயல்பாட்டால் அழுந்து