240 எந்திரம் பால்பண்ணை
240 எந்திரம் பால்பண்ணை . உண்டு பண்ணும் கருவி (homogenizer) ஆகிய வற்றிற்குத் தேவையான ஆற்றலை மின்னோடிகள் வழங்கும். சிறு கருவிகளின் சூடாக்கலுக்கும், செயல் பாட்டுக் கருவிகளின் கட்டுப்பாட்டிற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. கருவியைத் தூய்மைப்படுத்தவும், பாலைச் சூடாக்கித் துப்புரவு செய்யவும் தேவையான சுடுநீரும், நீராவியும் கொதிகலனிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. வெப்பப்படுத்துதலுக்குப் பயன்படும் முதன்மையான பொருள் நீராவியேயாகும். பாலைச் சூடாக்கித் துப்புரவு செய்வதற்கும், கிருமிகளைக் கொல்வதற்கும் கருவியைத் தூய்மைப்படுத்துவதற்கும் வெப்பப்படுத்தல் முறை கையாளப்படுகிறது. பால் கறக்கும் எந்திரம். இக்கருவிகள் பசுவின் மடியிலிருந்து பாலைக் கறந்து, அருகிலுள்ள பாத்தி ரத்திற்கோ நேரடியாக மையக் குளிர்விக்கும் தொட்டிக்கோ குழாய்கள் மூலமாகச் செலுத்து உட்சுவரில் உள்ள. கிண்ணம் கின்றன. வளையக் கூடிய வெற்றிடத்தினால் உறிஞ்சும் பாலை உறிஞ்சுகிறது. எந்திரத்தினால் பால் கறப்பதற்கு 31 3 நிமிடங்களே தேவைப்படும். இது. கையால் கறப்பதை விட மிகக் குறைவான நேரமாகும். இவ்வெந்திரம், வெற்றிடத்தை உண்டாக்கும், அலகையும், ஆற்றல் அலகுடன் இணைந்த ஓர் வளையக்கூடிய நீண்ட குழாய்களையும் துடிப்பை உண்டு பண்ணும் கருவியையும், பாலைச்சேகரிக்கும் கலத்தையும் கொண்டது. மடியிலுள்ள பால் (வளி மண்டல அழுத்தத்தில்) மின்னோடியின் உதவியால் இயங்கக்கூடிய உந்து அல்லது இதழ் வடிவ எக்கி 10-15 அங்குலம் பாதரச அளவிற்கு வெற்றிடத்தை உருவாக்க உதவு கிறது. இந்த வெற்றிட எக்கியின் வெளிப்புறத்திற்கு அருகிலுள்ள வெற்றிடச் சேகரிப்புத் சேகரிப்புத் தொட்டி. உந்தின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க உதவுகிறது, வகை. பால்கறக்கும் எந்திரங்கள் தூக்கிச் செல்லக்கூடிய வகை, குழாய்வகை என இருவகைப் படும். செயல்முறை. இரு நீண்ட குழாய்கள் உறிஞ்சும் கிண்ணங்களுள்ள அலகிற்குச் செல்கின்றன. அவற்றில் ஒன்று காற்றுக் குழாய் எனப்படும். அது துடிப்பானு டன் இணைக்கப்பட்டுள்ளது. இக்காற்றுக் குழாய், வளிமண்டல அழுத்தத்தில் காற்றையும், வெற்றிடத் தையும் உறிஞ்சு கிண்ணத்தில் உருவாக்குகிறது. மற்றொரு குழாய், பால் குழாய் எனப்படும். இது வளிமண்டல அழுத்தத்தில் பசுவின் மடியிலுள்ள பாலை, உறிஞ்சு கிண்ணங்களின் வழியாக வெற்றி டத்துடன் உள்ள பால் சேகரிக்கும் தொட்டியை அடையச் செய்கிறது. பாலைக் குளிர்விக்கும் எந்திரம். கறக்கப்பட்ட பால் உடனடியாகக் குளிர்விக்கப்பட வேண்டும். இவ்வாறு குளிர்விக்கப் படுவதால், நுண்ணுயிரிகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. கறந்த பாலின் வெப்ப நிலை பொதுவாக 20-22°C ஆசு இருக்கும். வெற்றிடமானி சோதனைக் கட்டுப்பாட்டிதழ் காற்று வெற்றிடக் குழாய் பால் குழாய் வெற்றிடச் சீராக்கி துடிப்பான் வெற்றிடம் பால்சேகரிக்கும் தொட்டி படம் 1. பால் கறக்கும் எந்திரம்