பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 எந்திரம்‌, விதைக்கும்‌

242 எந்திரம், விதைக்கும் படம். 1 இரண்டு வரிசை நாட்டுப்புற விதைக்கும் கருவி இவ்வகை விதைப்புக் கருவிகள் விதைப்பெட்டி, விதையிடும் அமைப்பு, விதைக்குழல், சால்கொழு, சால் தூர்ப்பி, விதை நிறுத்தும் அமைப்பு, கொழு உயர்த்தி, நிலச் சக்கரங்கள் முதலிய உறுப்புகளைக் கொண்டுள்ளன. விதைப்பெட்டிகள். இவை கன செவ்வக வடிவத் திலோ. கூம்பு வடிவத்திலோ அமைக்கப்பட்டிருக்கும். மரம், இரும்புத்தகடு, அலுமினியத் தகடு முதலியன விதைப் பெட்டிகள் செய்யப் பயன்படுகின்றன. விதைப் பெட்டிகளின் கொள்ளளவு 1-10 கிலோ வரை வேறுபடுகிறது. விதையிடும் அமைப்பு. இவற்றை வரி, உருளை அமைப்பு, உமிழ் குப்பி அமைப்பு, இருபக்கச் சக்கர அமைப்பு என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். வரி உருளை அமைப்பு. இவ்வமைப்பில் உருளை யின் சுற்றுப்புறத்தில் நீளவாக்கில் குழிகள் தோண் டப்பட்டு, ஒரு குழியில் ஒரு சமயத்தில் ஒரு விதை மட்டும் அமரும் வண்ணம் வகை செய்யப்பட்டுள்ளது. உருளையைச் சற்று முன்னால் தள்ளினால், ஒன்றுக்கு மேற்பட்ட விதைகள் ஒரே சமயத்தில் ஒரு குழியில் விழக்கூடும். விதை அளவை மாற்றி உருளையின் வேகத்தையோ, உருளையின் சுற்றுப்புறத்தில் உள்ள குழிகளின் எண்ணிக்கையையோ மாற்றிட வேண்டும். இந்த உருளைகள் நிலச்சக்கரத்துடன் சங்கிலி, பற் சக்கரம் அல்லது பட்டைகள் மூலமாக இணைக்கப் பட்டு இயக்கப்படும். இந்த உருளைகள் விதைப் பெட்டியின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டு, விதை களை, விதைக்குழல்களுக்குள் செலுத்தப் பயன்படு கின்றன. இருபக்கச்சக்கர அமைப்பு. இது உருளைக்குப் பதிலாக, ஒரு சக்கரத்தின் இருபக்கமும் விதைகளை எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. ஒரு பக்கம் பெரிய குழிகளையும், மறு பக்கம் சிறு குழிகளையும் கொண் டிருக்கும். பெரிய விதைகள் விதைத்திடும்போது, பெரிய குழிகள் உள்ள பக்கம் மட்டும் திறக்கப்பட்டி ருக்கும். மறுபக்கம் உள்ள குழிகள் ஒரு தகட்டால் மறைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு சிறு விதைகள் விதைக்கப்படும் போது மறுபக்கத்தில் உள்ள பெரிய குழிகள் மறைக்கப்பட்டிருக்கும். எனவே, இது பல விதமான விதைகளுக்கும் பயன்படுகிறது. விதை அளவு இந்தச் சக்கரத்தின் சுழல் வேகத்தை மாற்று வதால் மட்டுமே மாறுபடுகிறது. சால்கொழு. வை கலப்பைகளைப்போல் ஆழ மாக உழாமல் தேவையான ஆழத்தில் சால் அமைத் திடப் பயன்படுகின்றன. இவற்றைக் கொத்துக்கொழு (ee type), இறக்கைக்கொழு (shoe type), ஒற்றைச் சட்டிக்கொழு, இரட்டைச் சட்டிக் கொழு என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். கொத்துக்கொழு. சிறுகற்கள் நிறைந்த சரளை நிலங்களிலும், வேர்கள் மண்டியுள்ள நிலப்பகுதிகளி லும் இது பயன்படுகிறது. உழுகின்ற கொழுவின் ஒரு முனை தேய்வடைந்தால் மறுமுனையை மாற்றிப் போட இயலும். வகை இறக்கைக்கொழு. மிகவும் இளகிய மண் களுக்கு ஏற்றது. இரண்டு வளைந்த தகடுகளின் முன் பகுதிகள் ஒன்றாக ஒட்டப்பட்டு, கூர்மையான உழும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. பின் பகுதிகள் ஒட்டாமல் விரிந்து இருக்கும். ஒற்றைச் சட்டிக்கொழு (single disc type). இவை வயல்களில் சிறு சிறு செடிகளும், வெட்டப்பட்ட