எந்திரம், விதைக்கும் 243
சருகுகளும், நிறைந்திருக்கும் போது து பயன்படு கின்றன. இவை நேராகப் பொருத்தப்படாமல், சற்றே சாய்வாகப் பொருத்தப்பட்டுள்ளன. மண்ணை வெட்டிச்சால் அமைக்கப் பயன்படுகின்றது. இது இரட்டைச் சட்டிக்கொழு (double disc type). இவை விதைகளைச் சரியான ஆழத்தில் ஊன்றிட மிகவும் பயன்படுகின்றன. விதை இரண்டு சட்டி களுக்கும் இடையில் விழும். புழக்கத்தில் உள்ள விதைப்புக் கருவிகள் ஒரு வரிசை விதைக்கும் கருவி. இது மனிதர் களால் தள்ளப்பட்டு இயங்குகிறது. இதை இயக் கிட ஓர் ஆள் தேவை. அதன் விதைப்பெட்டி கன செவ்வக வடிவமுள்ளது. இப்பெட்டி ஒரு சமயத்தில் ஒரு கிலோ விதை கொள்ளும் திறன் உடையது. படம் 2 இல் காட்டப் பட்டுள்ளது போல் ஒரு சட்டத்துடன் நிலச்சக்கரம், சாற்கொழு, விதைப்பெட்டி, சால் தூர்ப்பி, விதை நிறுத்தும் அமைப்பு ஆகியவை ணைக்கப்பட் எந்திரம், விதைக்கும் 243 டுள்ளன."நிலச் சக்கரத்தின் சுற்றுப்புறத்தில் இரும்புக் குச்சிகள் 6 செ.மீ. நீளத்திற்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். இது சக்கரம் மண்ணுள் புதையும்போது வழுக்கிக் கொண்டு சென்றுவிடாமல் இருக்கவும் ஒரே சீராகச்சுழலவும் பயன்படுகிறது. நிலச்சக்கரம் பற்சக்கரச் சங்கிலியினால் விதையிடும் உருளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. விதையிடும் உருளை, வரி உருளை வகையைச் சேர்ந்தது. இது மரத்தால் ஆனது. விதையின் பருமனுக்குத் தகுந் தாற்போல், உருளையின் சுற்றுப்புறத்தில் உள்ள குழியின், ஆழமும் அகலமும் மாறும். பயிருக்குத் தகுந்தாற்போல் உருளையை மாற்றிடவேண்டும். செடிக்குச் செடி இடைவெளியை மாற்ற, உருளை யின் சுற்றுப்புறத்தில் உள்ள குழியின் எண்ணிக்கையை மாற்ற வேண்டும். சால்கொழு, கொத்துக் கொழு வகையைச் சேர்ந்தது. கைப்பிடியைப் பிடித்து, விதைக் கருவியை முன்னால் தள்ளும்போது, நிலச்சக்கரங்கள் சுழலும் போது அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள விதை உருளையும் சுழல்கிறது. அப்போது உருளையில் விதை நிறுத்துகோல் நிலச்சக்கரம் விதைப்பெட்டி சால் கொழு சால் தூர்ப்பி அ.க. 6-16அ படம் 2. ஒரு வரிசை விதைக்கும் கருவி கைப்பிடி