பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{rh|||எந்திரம்‌, விதைக்கும்‌ 245}}

சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. கருவி, கருத்தடியில் இணைக்கப்பட்டு நுகத்தடியினால் மாடு பூட்டப் படுகிறது. திருத்திய ஜோதி விதைக்கும் கருவி அல்லது கோவை விதைக்கும் கருவி. இக்கருவி ஒரு வரிசை விதைக்கும் கருவி போன்றது. ஒற்றை வரிசைக்குப் பதிலாக மூன்று அல்லது ஐந்து வரிசையில் விதைப்பதற்கு ஏற்றவாறு சால்கொழுக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இணை மாடுகளால் இக்கருவி இழுக்கப்படுகிறது. நிலச்சக்கரம், விதை உருளைகளுடன் ஒரு பற் சக்கரத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. விதை உருளைகள் ஒன்றுடன் ஒன்று துண்டு அச்சுகளினால் ணைக்கப்பட்டுள்ளன. விதை உருளைகள் வலி உருளை வகையைச் சேர்ந்தவை. உருளையின் சுற்றுப் P எந்திரம் விதைக்கும் 245 புறத்தில் 8 12 குழிகள் உள்ளன. ஒரு சமயத்தில், ஒரு குழியில் ஒரு விதை மட்டும் அமரும் வண்ணம் குழியின் ஆழமும், அகலமும் இருக்கும். பயிருக்குத் தகுந்தாற்போல் விதை உருளைகளை மாற்ற வேண் டும். ஒரு சமயத்தில் விதைப்பெட்டிகள் நான்கில் இருந்து ஐந்து கிலோ விதைகளைக் கொள்ளும். சால்கொழு 'இறக்கைக் கொழு' வகையைச் சேர்ந் தது. இக்கருவி, நிலக்கடலை மக்காச்சோளம் போன்ற பெரிய விதைகளுக்கு மிகவும் ஏற்றது. விதை உருளை கட்கும், விதைப்பெட்டிகட்கும் இடையில் உள்ள மிருதுவான இரப்பர்த் துண்டு விதைகள் . உடையா மல் பாதுகாக்கிறது. இக்கருவியினால் ஒரு நாளில் 21 ஏக்கர் விதைக்கலாம். ஏழு வரிசை உழுவுந்து விதைப்புக் கருவி. இக்கருவி உந்தினால் இயக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் ஏழு விதை நிறுத்துகோல். விதைப்பெட்டி விதை சக்கரப் பெட்டி நிலச்சக்கரம் விதை நிறுத்தி சால்கொழு சால்தூர்ப்பி சட்டம் படம் 4. திருத்தியஜோதி அல்லது கோவை விதைக்கும் கருவி