எந்திரம், வேளாண்மைப் பதப்படுத்தும் 247
வரிசைகளில் விதைக்கப் பயன்ப படுகிறது. இக்கருவி விதைகளை விதைக்கப் பயன்படுவதுடன், சால்மேடு அமைக்கவும் பயன்படுகிறது. சால் மேடு அமைக்கும் பகுதி, 22 மீட்டர் அகலத்திற்கு மேடு அமைக்கிறது. மேட்டின் இரண்டு பக்கத்திலும் 20 செ. மீ. அகலத் திற்கு 15 செ. மீ ஆழமுள்ள சால் உருவாக்கப்படு கிறது. மழை பெய்யும்போது மழைநீர் இச்சால் களில் தங்கி, மண்ணின் ஈரத்தைக் காக்கிறது. மேலும் நீரோட்டத்தின் வேகத்தைத் தடுப்பதால் மண் அரி மானத்தையும் குறைக்கிறது. கருவியின் அமைப்பு மற்றும் இயங்கும் விதம் அனைத்தும் கோவை விதைக்கும் கருவி போன்றதே. மொத்தம் ஏழு வரிசைகளில், உழுவுந்தினால் விதைக் கப்படுவதால், ஒரு மணி நேரத்தில் ஒன்றில் இருந்து 11 ஏக்கர்வரை விதைக்கலாம். காற்றழுத்த விதைப்புக் கருவி. இக்கருவியில், விதையிடும் அமைபபு காற்றழுத்தத்தினால் செயல் படுகிறது. விதைகள் விதைப்பெட்டியிலிருந்து உறிஞ்சப்பட்டு ஒவ்வொரு விதையாகக் கீழே சேர் கின்றன. பின்னர் உறிஞ்சப்பட்ட விதைகள் விதைக்குழலின் மூலம் நிலத்தை அடைகின்றன. விதை களின் பருமனுக்குத் தகுந்தாற்போல் காற்றழுத்தம் வேறுபடும். நாற்று நடும் கருவி. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள, நெல் ஆராய்ச்சி நிலையம், நெற்பயிர் நடும் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளது. இன்னும் அதிக அளவில் இது புழக்கத்தில் இல்லை. -செ.தங்கவேலு எந்திரம்,வேளாண்மைப் பதப்படுத்தும் வேளாண் தொழிலில் பல்வேறு எந்திரங்களும் கருவி களும் பயன்படுகின்றன. இவற்றில் அறுவடைக்குப் பின் பல பணிகளுக்குப் பயன்படும் எந்திரங்கள் வேளாண்மைப் பதப்படுத்தும் எந்திரங்கள் (agricu- ltural processing machines) எனப்படும். பல்வேறு வேளாண் பதப்படுத்தும் எந்திரங்களில் பின்வரும் எந்திரங்கள் மிகவும் பயனுள்ளவையாகக் கருதப்படுகின்றன; அவை, நெற்கதிர் அடிக்கும் எந்திரம், தானியங்கள் தூற்றும் எந்திரம், விதைகள் தரம் பிரிக்கும் எந்திரம், நிலக்கடலை பறிக்கும் எந்தி ரம், நிலக்கடலைத்தோல் உரிக்கும் எந்திரம்,பருத்தி விதைப் பஞ்சு நீக்கும் எந்திரம், மக்காச்சோளக்கதிர் அடிக்கும் எந்திரம், சூரியகாந்தி விதைத்தோல் நீக்கும் எந்திரம், தக்காளி விதை எடுக்கும் எந்திரம் எனப் பலவாகும். எந்திரம், வேளாண்மைப் பதப்படுத்தும் 247 நெற்கதிர் அடிக்கும் எந்திரம். நெற்பயிரை அறு வடை செய்த பின்னர் கதிர் அடிக்கும் எந்திரங்களின் (grain-threshers) உதவியைக் கொண்டு நெல் மணி களை வைக்கோலிலிருந்து எளிதாகப் பிரித்தெடுத்து விடலாம். சோளம், கம்பு, ராகி, கோதுமை போன்ற பிற பயிர் வகைகளைக் கதிர் அடிப்பதற்கும் இந்த எந்திரம் பயன்படும். மின்னோடியைக் கொண்டு தனை இயக்கலாம். மின் திறன் இல்லாத இடங் களில் இழுஎந்திரம் (tractor), திறன் ஊட்டிய களரி (power tiller), எண்ணெய்ப் பொறி முதலியவற்றைக் கொண்டும் இயக்கலாம். வேளாண்மைப் கதிர் அடிக்கும் எந்திரங்கள் கோவையில் உள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகத்திலும் சில தனியார் நிறுவனங்களிலும் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்வ தற்குத் தகுந்தவாறு இந்த எந்திரங்கள் காற்றுச் சக்கரங்களின் (pneumatic wheels) மேல் அமைக்கப் பட்டுள்ளன. இந்த எந்திரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் மரத்தால் ஆனவை என்பதால் இதனைச் செய்வதும் எளிது. . இந்த எந்திரத்தில் சுழலும் உருளை ஒன்று மின்னோடியால் நிமிடம் ஒன்றுக்கு சுமார் 900 சுற்று வேகத்தில் சுழற்றப்படுகிறது. எந்திரத்தின் வாய்ப் பகுதியில் அரிகளை அல்லது தாள்களைத் தொடர்ச்சி யாகவும் ஒரே சீராகவும் கொடுக்கும்போது கதிர்கள் சுழலும் உருளையின் புறப்பரப்பில் மோதுகின்றன. அப்போது கூல மணிகள் தாள்களிலிருந்து பிரிக்கப் படுகின்றன. காற்றூதியிலிருந்து வரும் காற்று, பதர் மற்றும் இலேசான கழிவுகளைக் கூலங்களிலிருந்து பிரிக்கிறது. வைக்கோல் வெளியேற்றி வழியாக வெளித்தள்ளப்படுகிறது. கூலமணிகள் அசையும் சல்லடைகளில் (osciilating sieves) சலிக்கப்பட்டுத் திறப்பு ஒன்றின் வழியாகத் திரட்டப்படுகின்றன. சுழலும் உருளையின் கீழ் குழிவான சல்லடை பொருத்தப்பட்டிருக்கிறது. கதிர் அடிக்கும் பயிர் வகைகளுக்குத் தகுந்தவாறு உருளைக்கும் குழிந்த சல்லடைக்கும் நடுவில் உள்ள டைவெளியை அதிகப்படுத்தியோ குறைத்தோ வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கான அமைப்புகள் இந்த எந்தி ரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. நெற்கதிர் அடிக்கும் எந்திரத்தைப் பயன்படுத்தி எந்திரத்தின் திறனைப் பொறுத்து ஒரு மணி நேரத் திற்கு 1000-2000 கிலோ நெல் மணிகள் வரை கதிர் அடிக்கலாம். இந்த எந்திரத்தைப் பயன்படுத்துவதால் அடிக்க ஆகும் செலவு குறைவாகவே உள்ளது. எந்தி ரத்தால் கதிரடிக்கும்போது 98% வரை கூலங்கள் தாள்களிலிருந்து பிரிந்து விடுவதால் போரடிக்கும் வேலையும் மிச்சமாகும். அதற்கான செலவும் மிச்ச மாகும். மழைக் காலங்களில் கதிரடிக்கும் வேலை