பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 எந்திரம்‌, வேளாண்மைப்‌ பதப்படுத்தும்‌

250 எந்திரம், வேளாண்மைப் பதப்படுத்தும் நிலக்கடலை பறிக்கும் எந்திரம், நிலக்கடலைச் செடிகளை நிலத்திலிருந்து பிடுங்கிய பின்னர் கடலைக்காய்களைச் செடிகளிலிருந்து கையால் பறித் தெடுப்பதுதான் நமது நாட்டு வழக்கம். இந்த வேலையை நிலக்கடலை பறிக்கும் எந்திரம் எளி தாக்குகிறது. நிலக்கடலைச் செடிகளின் நுனிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு, கடலைக்காய்கள் உள்ள வேர்ப் பாகத்தை எந்திரத்தில் உள்ள சுழலும் உருளையின் புறப்பரப்பில் படும்படிப் பிடிக்க வேண்டும். நிலக் கடலைக் காய்களைச் சுழலும் உருளையில் உள்ள ஆணிகள் செடிகளிலிருந்து சீவும் முறையில் பிரிக் கின்றன. காய்கள் பிரிந்தவுடன் செடிகள் வெளியில் வீசப்படுகின்றன. சுழலும் உருளையைக் கையால் சுழற்றும்படியான எந்திரங்களும், மின்னோடியால் சுழற்றும்படியான எந்திரங்களும் செய்யப்பட்டுள்ளன. ஓர் ஆளின் உதவிகொண்டு இந்த எந்திரத்தால் ஒரு நாளில் 100 கிலோ கடலைக்காய்களைப் பறிக்கலாம். மின்ஓடியால் இயக்கப்படும் எந்திரத்தில் பறித்த கடலைக்காய்களைத் தூற்றுவதற்கென்று காற்றூதி இருக்கிறது.இதனைப் பயன்படுத்தி ஒருமணி நேரத்தி லேயே 100கிலோ கடலைக் காய்களைப் பறிக்கலாம். நிலக்கடலைத் தோல் உரிக்கும் எந்திரம், நிலக்கட லைக்காய்களைச் செடிகளிலிருந்து பறித்த பின்னர் 8 10 11 7 6 1320 மி. மீ படம் 3. நிலக்கடலைத் தோல் உரிக்கும் எந்திரம் 2 3 5 4 I. கடலைக் காய்களைப் போடும் பகுதி 2. அசையும் அரைவட்டப்பகுதி 3. குழிந்த சல்லடை 4. தோல் வெளியேறும் வழி 5. பெட்டி 8. கடலைப்பருப்பு வெளியேறும் பகுதி7- சட்டம் 8. காற்றூதி 9. மின்னோடி 10. விசைச்சக்கரம் 11. இணைப்புக் கோல். காற்றுப்