எந்திரம், வேளாண்மைப் பதப்படுத்தும் 251
அவற்றை உடைத்துப் பருப்பைப் பிரித்தெடுப்பதற்கு நிலக்கடலைத்தோல் உரிக்கும் எந்திரம் பயன்படு கிறது. இந்த எந்திரம் கையால் இயக்கப்படும் வகை யிலும் மின்னோடியால் இயக்கப்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைத்தோல் உரிக்கும் எந்திரத்தில் உள்ள சல்லடையின் மேல் உள்ள அரைவட்ட வடிவத் தகட்டின் கீழ்ப்புறத்தில் முளைகள் போன்ற அமைப்பு கள் பதிக்கப்பட்டுள்ளன. செடிகளிருந்து பறித்த நிலக் கடலைக் காய்களை வலைச்சல்லடையில் போட்டு அரைவட்டத் தகட்டை முன்னும் பின்னும் அசைக்கத் தகட்டிற்கும், சல்லடைக்கும் இடையே உள்ள இடை வெளியில் கடலைக் காய்கள் நசுக்கப்படுகின்றன. அப்போது காய்கள் உடைந்து பருப்பும் தோலும் சல்லடைக் கண்களின் வழியாகக் கீழே விழுந்துவிடும். தூற்றிய பிறகு பருப்பைத் தனியே பிரித்தெடுத்து விட லாம். இருவர் இந்த எந்திரத்தை இயக்க, ஒருவர் உதவி செய்ய, நாள் ஒன்றுக்கு ஒரு டன் நிலக் கடலைக் காய்களை உடைக்கலாம். மின்னோடியால் இயக்கப்படும் எந்திரத்தில் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள காற்றூதி, பருப் பையும் தோலையும் தூற்றித் தனித்தனியே பிரித்து விடுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு 3 டன் நிலக்கட லைச் காய்களை உடைக்கலாம். சாதாரண முறையில் ஆள்களைக்கொண்டு கடலைக் காய்களை உடைக்கையில் ஒருநாளில் ஓர் ஆள் சுமார் 10-12 கிலோதான் உடைக்க இயலும். இந்த முறையில் ஒருகிலோ காய்களை உடைக்க ஆகும் செலவு மிகவும் குறைவு. ஆகையால் இக்கருவி மிகவும் பயனுடைய கருவியாகும். சூரியகாந்தி விதைத்தோல் நீக்கும் எந்திரம். சூரிய காந்தி விதைகளிலிந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது. தோல்நீக்கிய விதைகள் முழுவிதைகளைவிடச் சுமார் 7% அதிக எண்ணெய் கொடுக்கின்றன. மேலும் தோல் நீக்கிய விதைகளி லிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் பிண்ணாக் கின் தரமும் உயர்ந்தது. ஆகவே சூரியகாந்தி விதைத் தோல் நீக்கும் எந்திரத்தைப் பயன்படுத்தி விதைகளின் மேல் தோலை நீக்குவது சாலச்சிறந்தது. சூரியகாந்தி விதைத்தோல் நீக்கும். எந்திரம் மின்னோடி, அதிவேகச் சுழல் தட்டு, காற்றூதிச் சல்லடைகள் விதை உயர்த்தும் வாளிகள் முதலான பகுதிகளைக் கொண்டது. சூரியகாந்தி விதைகள் இந்த எந்திரத்தின் கொள்வாய்ப் பகுதி யில் (seed hopper) கொட்டப்பட்டவுடன் சல்லடை களால் சலிக்கப்பட்டு, விதைகளில் உள்ள அசுத்தங்கள் காற்றூதியால் நீக்கப்படுகின்றன. பின்பு விதைகள் உயர்த்தும் வாளிகளின் மூலம் சுழலும் தட்டுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. விதைகள் ரப்பரால் எந்திரம். வேளாண்மைப் பதப்படுத்தும் 251 ஆன தட்டின் மேற்பரப்பில் மோதும்போது விதை களின் மேல் தோல் நீக்கப்படுகிறது. 10 I 11 12 13 15. 14 2000 மி.மீ .5 2800 படம் 4. சூரியகாந்தி விதைத்தோல் நீக்கும் கருவி 8. 1. கொள்வாய் 2. கழலும் தட்டு 3. தோல் வெளியேறும் வழி 4. விசைச் சக்கரம் 5. சல்லடை (சிறியது) 6. முதல் தர விதைவழி 7. சல்லடை (பெரியது) இரண்டாம் தர விதைவழி 9. தோல் நீங்கிய விதை வழி 10. சட்டம் 11. விதை தள்ளும் உருளை 12. வாய்ப்பகுதி 13. காற்றூதி 14. மின்னோடி 10. உயர்த்தும் வாளிகள். மூன்றுகுதிரைத் திறன் கொண்ட மின்னோடி யால் இயக்கப்படும் இந்த எந்திரம் ஒரு மணி நேரத் தில் 100 கிலோ சூரியகாந்தி விதைகளைத் தோல் நீக்க வல்லது. இது வேலை செய்யும்போது இரு பணியாள் மட்டும் இருந்தால் போதும். தக்காளி விதை எடுக்கும் எந்திரம். தக்காளி உற் பத்தி அதிகமாக உள்ள சமயம் விவசாயிகள் தக்காளி யாக விற்றால் நல்ல விலை கிடைப்பதில்லை. அச் சமயம் தக்காளியிலிருந்து விதைகளை எடுத்து விதை உற்பத்தி செய்தால் தக்காளியாக விற்பதைவிட அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது.