எந்திர முறைப்பிரிப்பு 253
வழியே கீழே விழுந்து மூன்றாம் அறையின் திறப்பு வழியாக வெளியேறிவிடும். விதைகளை எடுத்து நிழலில் உலர வைத்த பின்னர் விதைப்புக் காகப் பயன்படுத்தலாம். பருத்தி விதைப் பஞ்சு நீக்கும் எந்திரம். பருத்தி விதைகளை விதைக்கும் முன்னர் விதைகளின் மேல்
- உள்ள பஞ்சு நீக்கப்பட வேண்டும். பருத்தி விதை
யில் பஞ்சு நீக்கப்பட்டால் தான் விதைகளை எளிதில் விதைக்க இயலும். மேலும் விதைக்கும் கருவிகளை யும் பயன்படுத்த முடியும். பஞ்சு நீக்கப்படும் போது முற்றாத விதைகளும், வீரியக் குறைவான விதைகளும் பிரிக்கப்படுகின்றன. இதனால் தரமான விதை உற்பத்தி செய்ய முடிகிறது. இந்த எந்திரம் துருப்பிடிக்காத எஃகினால் ஆன உருள்கலனால் (drum) ஆனது. ஏறக்குறைய 5 கிலோ பஞ்சுள்ள பருத்தி விதைகளை இக்கலனில் உள்ளே போட்டு, அரை லிட்டர் கந்தக அமிலத்தைக் கலத்தின் உட்சுவர் வழியாக ஊற்றிக் கலக்கியைச் சுழற்றி நன்றாகக் கலக்க வேண்டும். இப்போது தொட்டிக்குள் தண்ணீரை ஊற்றி விதைகளை மூன்று நான்கு முறை கழுவ வேண்டும். கந்தக அமி லம் முற்றிலும் நீங்கிய பின் விதைகளை வெளியே எடுத்து உலர வைத்த பின்னர் விதைப்புக்குப் பயன் படுத்த வேண்டும். எந்திர முறைப்பிரிப்பு 253 வேதியியல் விகிதமுறைப்படி பொருள்களின் கலவை யை பிரிக்கலாம்; நீர்மத்தில் மிதக்கும் திண்மப் பொருள்களைப் பிரிக்கலாம். தாதுவைத் தூய்மைப்படுத்தும்போது தேவையற்ற பகுதியைப் பயன்படு தாதுப் பகுதியிலிருந்து பிரித்தல், கலவை பிரித்தபின் அதிக அடர்த்தியுள்ள நீர்மம் குறைந்த அடர்த்தியுள்ள நீர்மம் ரா. கருணாநிதி படம் 1. புவிஈர்ப்புத் தெளிவிப்பான் எந்திர முறைப்பிரிப்பு ஒன்றாகக் கலந்திருக்கும் ஒரு கலவையிலிருந்து அதன் வெவ்வேறு பகுதிகளைத் தனித்தனியாகப் பிரித் தெடுத்தல் எந்திரமுறைப்பிரிப்பு எனப்படுகிறது. இம்முறையில் ஒரு நீர்மத்தில் கலந்திருக்கும் மற்று மொரு நீர்மத்தையோ, திண்மப்பொருளையோ பிரித் தெடுக்க முடியும். ஒரே தன்மையுள்ள கலவை அல்லது கரைசலி லிருந்து அதன் வெவ்வேறு பகுதிகள் ஆவியாக்கல். குளிர்வித்தல், வீழ்படிவு ஊடுருவல் போன்ற முறை களால் பிரித்தெடுக்கப்படுகின்றன. எந்திரமுறைப் பிரிப்பு இம்முறையிலிருந்து மாறுபட்டு, வேறுபட்ட தன்மையுள்ள பொருள்களின் கலவைப்பிரிப்புக்கே அதிகம் பயன்படுகிறது. . இம்முறையில் 0.1×1076 செ.மீ. அளவுள்ள மிகச்சிறிய தாதுத்துகளிலிருந்து மிகப்பெரிய அளவு உள்ள பெரும்பாறைகள் வரை பல்வேறு அளவுள்ள பொருள்கள் பிரிக்கப்படுகின்றன. இம்முறையினால் ஏதேனும் ஒரு வளிமக்கூட்டத்திலிருந்து நீர்த்திவலை களைப் பிரிக்கலாம்; அளவு முறைப்படி அல்லது படம் 2. மையவிலக்கு விசைத் தெளிவிப்பாள்