பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 எந்திர முறைப்பிரிப்பு

254 எந்திர முறைப்பிரிப்பு சல்ஃப்யூரிக் அமிலத் தயாரிப்பில் அமிலத்துகள்களை வீழ்படிவு முறையில் பிரித்தல், காற்றிலிருந்து கல்லையும், தூசியை அகற்றல், கலவையிலிருந்து மண்ணையும் தனித்தனியே பிரித்தல் போன்றவை எந்திரமுறைப் பிரிப்புக்கான எடுத்துக்காட்டுகளாகும். . அளவு, அடர்த்தி, வடிவம்; மின்தன்மைகள், நனையுந்தன்மை, மின்காந்தத் தன்மை போன்ற யற்பியல் தன்மைகளில் உள்ள வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு பிரிப்பு நிகழ்த்தப்படு கிறது. பொதுவாக இம்முறைகளில் ஏதேனும் ஒரு பொருளைத் தக்க வைத்துக் கொண்டு மற்றவற்றை மறுபுறம் செல்ல வகைசெய்யும் சல்லடை, வடிகட்டும் துணி இவற்றில் ஏதேனும் ஒரு இழைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. சில முறைகளில் மின் அல்லது மின்காந்தத் தன்மைகளில் கலவையின் பொருள்கள் வேறுபடும்போது அந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி பிரிக்கலாம். புவிஈர்ப்புத் தெளிவிப்பான் புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் செயல் படுகிறது. இருவேறு கனமுள்ள நீர்மங்கள் கலந்தால் அதிக அடர்த்தியுள்ள நீர்மம் கீழே படிந்து ஏனையது மேலே மிதக்கத் துவங்கும். இந்த அடிப்படையில் நீர்மங்களைப் பிரிக்கலாம். மிதக்கவைத்துப் பிரித்தல் எனும் முறையில் பல திண்மப் பொருள்கள் மிதக்கும் நீர் மத்தின் ஊடே காற்றுச் செலுத்தப்படுகிறது. திண்மப் பொருள்களில் ஏதேனும் ஒருவகைப் பொருள் மட்டும் காற்றுக் குமிழிகளை ஈர்த்துக் கொள்கிறது, இதனால் தொகை அடர்த்தி குறைவதால் புவிஈர்ப்பு விசை யின் காரணமாக மற்ற பொருள்களைவிட அது மேலே மிதக்கத் துவங்குகிறது. அதை எளிதில் பிரிக்கலாம். மைய விலக்குவிசைத் தெளிவிப்பான்கள் உருளை கலவையை உட்செலுத்திய வடிவில் இருக்கின்றன பின் உருளை வேகமாக அதன் அச்சில் சுழற்றப்படு கிறது. மையத்திலிருந்து விலக்கும் விசையின் காரண மாக ஒரு நீர்மம் உருளையின் சுவர்ப்புறமாக மேல் நோக்கி எழத்தொடங்குகிறது; மற்றது மையத்தைச் சுற்றியே நின்று விடுகிறது. வடிகட்டிகள் துளையிடப்பட்ட தட்டுப்போன்ற வடிவம் உள்ளவை. பிரிக்கப்படவேண்டிய பொருளின் அளவிற்கேற்பத் துளையின் அளவும் மாறுபடுகிறது. சுழல் காற்றுப் பிரிப்பான்களில் காற்றை மிகு வேகமாகப் பக்கவாட்டில் செலுத்துவதன் மூலம் கலவை சுழற்றப்படுகிறது. இச்சுழற்சியினால் மைய விலக்கு விசை ஏற்பட்டுப் பிரிவு நிகழ்கிறது. மோதுதல் மூலம் பிரிக்கும் கருவிகளில் திசை மாற்றும் தடைகள், நீர்மத்தில் நனைந்த இழைகள் இருக்கின்றன. திண்மப்பொருளைச் சுமந்து வரும் வளிமத்தின் திசை திடீரென்று மாற்றப்படும் போது மிதந்துவரும் திண்மப்பொருள் அம்மாற்றத்தை ஏற்ப தில்லை; மாறாகத் தன் காரணமாகத் ஏடையின் வடிகட்டி நீர்மம் 8 திண்மப் பொருள் (ii) சுழல்காற்றுப்பிரிப்பாள் (i) வடிகட்டி படம் 3. காற்று உட்செலுத்தல்