பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 எஃகு கட்டகம்‌

4 எஃகு கட்டகம் வகைகளைப் பொறுத்து வை பற்றவைத்த தகட்டு உத்திரங்கள், தறையாணித் தகட்டு உத்திரங்கள் எனப்படுகின்றன. தகட்டு உத்திரங் களின் வடிவமைப்பு முறை தனி உத்திரங்களின் வடிவமைப்பு முறையைப் போன்றதேயாகும். ஆனால் இவற்றில் இடையிணைப்புத்தகடு நெளி வதைத் தடுக்க டை விறைப்பிகள் (inter- mediate stiffners) பயன்படுகின்றன. மேலும் செறிவுச்சுமை, தாங்கிகள் உள்ள இடங்களில் தாங்கு விறைப்பிகள் அமைக்கப்படுகின்றன. கோர்வு உத்திரம். சட்டங்களைப் பிணைத்து அமைக்கும் கட்டுமானம் கோர்வு உத்திரம் எனப் படுகிறது. கோர்வு உத்திரத்தின் மேல் கூரைச் சட்ட கங்கள் (purlins) குத்துவாக்கில் அமைந்து கூரை ஓடுகளைத் தாங்குகின்றன. சட்டங்கள் கூடும் பிணைப்புள்ளிகளின் (nodes) மேலேயே கூரை ச் சட்டங்கள் அமையுமாறு கோர்வு உத்திரங்கள் அமைக்கப்படுகின்றன. எனவே, கோர்வு உத்திரத் தில் உள்ள சட்டங்கள் அச்சுச் சுமைகளை மட்டுமே படம் 4. கோர்வு உத்திரங்கள் (axial load) தாங்க வேண்டியிருக்கும். இச்சட்டங் களை இழுவிசைக்கும் வலிவுத்தகடுகளைக் (gusset plate) கொண்டு மரையாணி அல்லது தறையாணி அல்லது பற்றவைப்பு முறைகளுக்கும் இணைக்கலாம். குழாய்களை உறுப்புகளாகக் கொண்ட கோர்வு உத்திரங்கள் குழாய்க் கோர்வு உத்திரங்கள் (tubular trusses) எனப்படுகின்றன. இவை குறைந்த எடை கொண்டவை. இணைப்பு, எஃகு கட்டக உறுப்புகளைத் தறை யாணிகள், மரையாணிகள் கொண்டோ பற்றவைப்பு முறையிலோ இணைக்கலாம். தறையாணித் துளைகள் தறையாணித் தண்டை விட (rivet shank) ஏறக்குறைய 1.5 மி. மீட்டர் மிகுதியாக இருக்கும். தண்டைப் பழுக்கக் காய்ச்சித் துளையில் வைத்து அறைந்து குமிழை (head) உண்டாக்க வேண்டும். தறையாணியைப் பொருத்து வதற்கு மனித ஆற்றல் அல்லது பொறி ஆற்றலைப் பயன்படுத்தலாம். எனவே கையால் அறையப்பட்ட தறையாணிகள் (hand driven rivets), பொறியால் அறையப்பட்ட தறையாணிகள் (power driven rivets ) என ரு வகைகள் உள்ளன. தறையாணிகள் மிகுதி யான தகைவுகளை ஏற்கவல்லன. பட்டறையில் அறையப்பட்ட தறையாணிகள் பட்டறைத் தறை யாணிகள் என்றும், கட்டுமான இடத்தில் அறையப் பட்ட தறையாணிகள் புலத்திடத் தறையாணிகள் (field rivets) என்றும் குறிப்பிடப்படுகின்றன. பட்டறைத் தறையாணிகளின் அமைப்புத் தரம் சிறப்பாக இருக்கும். மரையாணிகளில் மூன்று வகை உண்டு. அவை கரிய மரையாணி, கடைந்து பொருத்திய மரை யாணி, மிகுவலிவு உராய்வு மரையாணியாகும். முதல் இருவகை மரையாணிகளைப் பயன்படுத்தும் முறை ஒன்றேயாகும். தறையாணிகளை அறைந்த பின் துளைகள் நிரப்பப்படுகின்றன. ஆனால் மரை யாணிகளில் அவ்வாறு இல்லை. மிகுவலிவு உராய்வுப் பிடிப்பு மரையாணிகளின் செயல்முறை பிற மரையாணிகளிலிருந்து மாறுபடு கிறது. பிற மரையாணிகள் துணிப்பு விசை மூலம் ஓர் உறுப்பிலிருந்து அடுத்த உறுப்பிற்குச் சுமையைச் செலுத்துகின்றன. ஆனால் மிகு வலிவு உராய்வுப் பிடிப்பு மரையாணிகள் உராய்வு, தாங்குமானம் மூலம் சுமையை றுப்புகளுக்கிடையே செலுத்து கின்றன. திருக்குக் கைக்குறடு (torque wrench) கொண்டு இவ்வகை மரையாணிகளை இறுக்க வேண்டும். உ பற்றவைப்பு இணைப்புகள் மிகுதியான அளவில் பயன்படுகின்றன. இவ்வகை இணைப்புகள் துணிப்பு. வளைவுத் திருப்புமை ஆகியவற்றை ஓர் உறுப்பி லிருந்து பிற உறுப்பிற்கு மாற்றவல்லன. இணைப்பு