262 எம்பயாப்டிரா
262 எம்பயாப்டிரா அ ஒலிகோட்டோமா சாண்டர்சி அண்பூச்சி ஆ. பெண்பூச்சி தாடைகள் (maxillae தனித்துக் காணப்படுகின்றன. தலையில் ஓர் இணைக் கூட்டுக்கண்களும், நீண்ட உணர்கொம்புகளும் உள்ளன. கூட்டுக் கண்கள் ஆண் பூச்சிகளில் அளவில் பெரியனவாகவும், பெண் பூச்சி களில் சிறியனவாகவும் உள்ளன. யான மார்புக் கண்டங்களில் முன்மார்புக் கண்டம் ஏனைய மார்புக் கண்டங்களை விட அளவில் சிறியது. மார்புப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த குட்டை உறுதியுள்ள மூன்று இணையான கால்கள் உள்ளன. கால்களில் டார்சஸ் பகுதியில் மூன்று கண்டங்களே உள்ளன. முன் கால்களின் மெட்டா டார்சஸ் பகுதி தடித்து, நூல் சுரப்பியாக மாறி யுள்ளது. இச்சுரப்பிகளின் சுரப்பு நீரால் தாம் வாழும் பட்டுக் கூடுகளை இவை அமைத்துக் கொள்கின்றன. இப்பூச்சிகளின் உணவூட்டமும் உணவுவகைகளும் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் அறியப் படவில்லை. இவை மற்ற சிறிய பூச்சிகளை உண்டு வாழ்பவை. உதட்டுச் சுரப்பிகள் செரிமான மண்டலத் தோடு இணைந்து அமைந்துள்ளன. உணவுக்குழல் அகன்றும் தொண்டை குறுகியும் காணப்படுகின்றன. இருபதுக்கும் மேற்பட்ட மால்பீஜியன் நுண்குழல்கள் உள்ளன. மார்புக் கண்டங்களில் இரண்டு இணை மூச்சுத் துளைகளும் வயிற்றுக் கண்டங்களில் எட்டு ணை மூச்சுத் துளைகளும் காணப்படுகின்றன. மூச்சுக் குழாய்களில் காற்று அறைகள் இல்லை. நரம்பு மண்டலம், மார்புப் பகுதியில் மூன்று நரம்புச் செல் திரள்களையும் வயிற்றுக் கண்டங்களில் ஏழு நரம்புச் செல் திரள்களையும் கொண்டது. இணையான ஆண், பெண் பூச்சிகளில் இனப் பெருக்க உறுப்புகள் உள்ளன. ஆண் பெண் பூச்சிகளைப் புறத்தோற்றத்தைக் கொண்டே வேறு படுத்தி அறியலாம். ஆண் பூச்சிகளில் பதினோராம் கண்டம் ஏனைய கண்டங்களிலிருந்து வேறுபட்டுச் சீரற்றுக் காணப்படும். பெண் பூச்சிகளில் பெண் இனப் பெருக்கத்துளை ஒன்பதாம் கண்டத்தில் அமைந் துள்ளது. சில இனங்களில் கன்னி இனப்பெருக்க முறை (parthenogenesis) காணப்படுகிறது. வளர்ச்சிப் பருவம் அழுகிய கரிமப்பொருள்களில் நடைபெறு கிறது. இளவுயிரிகள் அழுகல் கரிமப் பொருள்களை உண்டு வளர்ச்சியடைகின்றன. எம்பயாப்டிரா வரிசையைச் சேர்ந்த 200 பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசை கிளாத்தோடிடே,எம்பிடே, ஒலிக்கோட் டோமிடே, ஒலிஜெம்பிடே, டெர்ராட்டெம்பிடே, ஆனிசெம்பிடே, நோட்டோலைகோட்டோமிடே என் னும் 7 குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சேர்ந்த எம்பியா (emba) பொதுவினத்தைச் பூச்சிகள் 10.மி.மீட்டர் அளவுள்ள மிருதுவான உடலுடைய பழுப்பு நிறப் பூச்சிகள். இவை கடிக்கும்