பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமெரிட்டா 263

எமெரிட்டா 263 வகை வாயுறுப்புகளையும் நீண்ட உடலையும், குட்டையான கால்களையும் நீளமான உணர்கொம்பு களையும் சிறிய கசர்சைகளையும் (cerci) கொண் ஆண் பூச்சிகளில் மட்டும் இறகுகள் டுள்ளன. உள்ளன. எம்பியா பிராமினா (embia brahmina) எ.மேஜர் (E.major), எ. லேட்ரியல்லி (E. latreilli) ஒலிகோட்டோமா சாண்டர்சி (oligotoma saundersii) போன்ற பூச்சிகள் இந்தியாவில் காணப்படுகின்றன. எறும்புகளும் சிலந்திகளும் இவற்றின் முக்கிய எதிரி களாகும். எமரி அ. ஷேக்தாவூத் மேக்னடைட் அல்லது ஹேமடைட்டுடன் குருந்தக் கல்லும், ஸ்பீனலும் சேர்ந்த இயற்கையான கல் வையே எமரி (emery) எனப்படும். து மெரு கூட்டும் பொருளாகவும், தேய்ப்புப் பொருளாகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டு வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இக்கலவை மிக நெருக்கமாகவும், ஒரே சீரான தோற்றமுடைய தாகவும் இருந்ததால் இது ஒரு தனியான கனிம இன மாகக் கருதப்பட்டது. இது மிகவும் கடினமாக இருப்பதால் உடைப்பதற்கு ஏற்றதாகக் காணப்படுவ தில்லை. சாம்பல் நிறத்திலிருந்து கருமை நிறம் வரை வேறுபடுகிறது. இக்கலவையிலுள்ள உட்கூறு, கனிமங்களின் சார்பளவைப் பொறுத்து ஒப்படர்த்தி 3.7-4.3 வரை வேறுபடுகிறது. தூய குருந்தக் கல்லின் கடினத்தன்மை எட்டு ஆகும். முற்காலத்தில் நக்ஸோஸ் தீவிலுள்ள கேப் எமரி, கிரீஷியன் தீவு ஆகிய இடங்களிலிருந்து எமரி கிடைத்தது. சுண்ணாம்புக்கல் படிகம். படலப் பாறை ஆகியவற்றுடன் சேர்ந்து சீரற்ற படிவுகளா கவும், குவிவில்லை அமைப்புகளாகவும், தளர்ந்த பாளங்களாகவும் காணப்படும். ஆசிய மைனரில் பல் இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாகக் குமாக் டாக், எப்பீசஸின் கிழக்கிலும், அலஸ்ஹெரின் அருகில் குலா என்ற இடத்திலும் காணப்படுகிறது. முற்காலத்தில் செயற்கையான தேய்ப்புப் பொருள்கள் எமரிக்கு மாற்றாகப் பயன்பட்டாலும் மணிக்கல் வெட்டுபவர்கள் தேய்ப்புப் பொருளாகவும், மெரு. கூட்டும் பொருளாகவும் இதை இன்றும் பயன்படுத்து கின்றனர். வில்லைகள், பட்டகங்கள், மற்ற ஒளி யியல் கருவிகள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கு எமரி பயன்படுகிறது. எஃகைச் சாணைப் பிடிப்பதற் கும், மெருகூட்டுவதற்கும் எமரிச் சக்கரம், எமரித் தாள், எமரித்துணி போன்றவற்றை எந்திரவியலார் மட்டுமல்லாமல் படுத்துகின்றனர். ஏமெரிட்டா மணிக்கல் வெட்டுபவரும் பயன் இரா. சரசவாணி கணுக்காலித் தொகுதியைச் சேர்ந்த எமெரிட்டா ஏசி யாட்டிகா (Emerita asiatica) என்ற உயிரிகள் இந்தி யக் கடற்கரையில் காணப்படுகின்றன. இவற்றைப் பொதுவாகத் தோண்டும் நண்டுகள் அல்லது மணல் நண்டுகள் என்று குறிப்பிடுவர். இவை கடற்கரை ஓரத்து ஈர மணற்பரப்பில் அல்லது ஓத இடைப் பகுதிகளில் வாழ்கின்றன. அலைகள் கரையில் புரளும் சமயம் அலையுடன் மிதந்தும், அலை வேகம் குறைந்து செல்லும் சமயங்களில் மணலுள் வளை தோண்டிப் புதைந்தும் வாழ்கின்றன. எமெரிட்டாவின் உடல் நீண்ட தலை மார்புப் பகுதி, வயிறு ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. தலை மார்புப் பகுதி மிகவும் பெரியதாகவும், மேல் ஓடு மூடியும் அமைந்திருக்கும். இப்பகுதியை மறைத் துள்ள மேல் ஓடு வழவழப்பாகவும், பக்கவாட்டில் அகன்றும், ணை உறுப்புகளை மறைத்தபடியும் இருக்கும். தலை ஐந்து கண்டங்களை உடையது. தலையில் காம்புடைய இரு கண்களும், இரு கிளையுள்ள குறு