264 எர்க்
264 எர்க் கிய துணை உணர் கொம்புகளும், நீண்ட உணர் கொம்புகளும் உள்ளன. மூன்று இணை வாயுறுப்புகள் மிகவும் வளர்ச்சியடையாத குறுகிய நிலையில் உள் ளன. மூன்றாம் தாடைக்கால் சிறிது அகன்று உள்ளது. மார்புப் பகுதி எட்டுக் கண்டங்களைக் கொண் உள்ள இணை டுள்ளது. முதல் இரு கண்டங்களில் யுறுப்புகள் நகங்களைக் கொண்டுள்ளன. வை மணற் பகுதியில் தோண்டுவதற்குப் பயன்படும்படி தட்டையாகவும் வளைந்தும் இருக்கும். பின் ஐந்து ணையுறுப்புகளும், நுனி மடல் கூர்முனையுடன், முன்புறம் நோக்கியபடி அமைந்துள்ளன. இறுதிக் கண்டத்தில் உள்ள ணை உறுப்பு குறுகிக் காணப் படுகிறது. ஒவ்வோர் இணை மார்புறுப்புடனும் ஒரு செவுள் இணைந்து காணப்படுகிறது. வயிற்றுப் பகுதி ஆறு கண்டங்களைக் கொண்டது. முதல் மூன்று கண்டங்களிலுள்ள இணை உறுப்புகள் நீந்துவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. இவற்றின் ஒத்தியக்கத்தால் உருவாகும் நீரோட்டம் செவுள் களின் வழியாகக் கடந்து சென்று சுவாசத்திற்குப் பெரிதும் துணை புரிகின்றது. பின் மூன்று இணை உறுப்புகள் பின்புறம் நோக்கியவாறு அமைந்துள்ளன. எமெரிட்டா பின்புறம் நோக்கி மிக வேகமாக நீந்து வதற்கு ஏற்றவாறு வை அமைந்துள்ளன. மண்புழுவைப் போன்று வை மண்ணுள் தோண்டி உட்செல்லும்போது மணலை விழுங்கி அதிலுள்ள உணவை உட்கொண்டு பின்னர் மீதியை வெளியே தள்ளிவிடுவதாகக் கருதப்படுகிறது. எமெரிட்டா ஓத இடைப்பகுதியிலும் கடற்கரைப் பகுதிகளிலும் வாழ்வதால் எப்போதும் அலைகளின் இயக்கத்தைச் சார்ந்து வாழ வேண்டும். அதனால் அப்பகுதியில் நன்கு வாழ்வதற்கேற்ற தகவமைப்பு களை இவை பெற்றிருக்கின்றன. தேவையான நேரங் களில் முன் வயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புக்களால் நீந்தும். பின் வயிற்று உறுப்புகளால் பின் நோக்கி வேகமாக அம்பு போல் நீந்தவும் செய்யும். அலைகள் கடலை நோக்கித் திரும்பும் சமயங்களில் மணவின் மேற்பரப்பு உலரத் தொடங்குகிறது. அப்போது இவை மார்புப் பகுதியில் உள்ள உறுப்புகளைக் கொண்டு தோண்டியும், வால்பகுதியிலுள்ள உறுப்புகளைக் கொண்டு துளைத்தும் தம் உடல் ஈரத்தைப் பாது காத்துக் கொள்கின்றன. இவ்வாறு மணலுள் புதை யுண்டு இருக்கும் சமயங்களில் உணர்கொம்புகளும் கண்களும் மணலின் பரப்பில் காணப்படும். இரவில் உயர் ஓதத்தின் காரணமாக மணற்பகுதி மூழ்கும் நேரங்களில் எமெரிட்டாவின் இயக்கம் வழக்கத்தை விடக் கூடுதலாக இருக்கும். ஆய்வுக் கூடங்களில் இவற்றை வைத்திருக்கும் சமயங்களில் கூட இரவு நேரங்களில் அதிக இயக்கத்துடன் இருப்பதாக அறியப்படுகிறது. - எஸ். கே. வள்ளி எர்க் அலகு முறையில் ஆற்றலுக்கான ஓர் அலகு எர்க் (erg) ஆகும். ஒரு டைன் விசையுடன், விசை செயற் படுபுள்ளி, செயற்படு திசையில் ஒரு செண்டிமீட்டர் தொலைவு நகருமானால், அதற்காகச் செய்யப்படும் வேலையின் அளவு ஓர் எர்க் ஆகும். SI அலகுமுறையில் ஆற்றலுக்கான அலகு ஜூல் எனப்படும். ஒரு நியூட் டன் விசையுடன், விசை செயற்படு புள்ளி, செயற் படு திசையில் 1 மீட்டர் தொலைவு நகருமானால், அதற்காகச் செய்யப்படும் வேலையின் அளவு 1 ஜுல் எனப்படுகிறது. (1 ஜூல் = 1 நியூட்டன் x 1 மீட்டர் =1 10% டைன் × 102 செ.மீ. 10 எர்க்). மெ. மெய்யப்பன் எர்காட் இது பூசணத்தால் ஏற்படும் இழை முடிச்சு(sclerotium) ஆகும். கிளாவிசெப்ஸ் ப்ரபூரியா (glavicaps purpur?a) என்ற பூசணம் ரை என்ற தானியப்பயிரின் கதிரிலும், கிளாவிசெப்ஸ் மைக்ரோசெபேலே (claviceps micro- cephala) என்றபூசணம் கம்பு என்ற தானியப் பயிரின் கதிரிலும் எர்காட் (ergot) இழை முடிச்சுகளைத் தோற்றுவிக்கின்றன. பூசணம் செடியின் மலரைத் தாக்கும்போது மலரின் சூல்பை பாதிக்கப்படுகிறது. அதனுள் பூசண இழைகள் பல்கிப் பெருகி அவற்றிலிருந்து சிறிய தூள் த்துத்தண்டுகள் (conidiophores) தோன்றுகின்றன. எர்காட் 2 1. தானியக்கதிர் 8. எச்சுாட்