எஃகு தயாரிப்பு 5
களில் மூட்டிணைப்பு (butt joint), ஒட்டிணைப்பு (lap joint) என்று இருவகை உண்டு. பல் கட்டுமானம். கற்காரைக் கட்டுமானத்துடன் ஒப்பிடுகையில் எஃகு கட்டுமானத்திற்கு வேண்டிய காலம் குறைவேயாகும். எஃகு கட்டகங்கள் வேறு உதிரிப் பகுதிகளைப் பிணைத்து அமைக்கப் படுகின்றன. போக்குவரத்து வசதிகளை முன்னிட்டு, சிறு சிறு பகுதிகளாகப் பட்டறைகளில் கட்டுமான உறுப்புகளைத் தயாரித்து அவை தளங்களில் பிணைக்கப்படுகின்றன. உறுப்புகளுக்குத் தேவை யான அளவு. துளைகளின் அளவு. இடைவெளி முதலியவற்றை நுட்பமாக அமைத்தால்தான் ணைப்புகள் உறுதியாக அமையும். தளங்களில் சுமை தூக்கிகளைப் பயன்படுத்தி உறுப்புகளை இணைக்கலாம். காப்பு முறை. எஃகு கட்டகங்கள் தீ, அரி மானம் முதலியவற்றால் விரைவில் வலிமையை இழந்துவிட வாய்ப்பு உண்டு. எனவே சில பாது காப்பு ஏற்பாடுகளை இவ்வகைக் கட்டகங்களுக்கு அமைக்கவேண்டும். தீப் பாதுகாப்பு. ஒரு கட்டகத்திற்கு வேண்டிய தீப் பாதுகாப்பு, அக்கட்டகத்தின் வகை, கட்டகத்தில் உள்ள பொருள்கள், கட்டக உறுப்புகளின் வகைகள் முதலியவற்றைச் சார்ந்ததாகும். எஃகு உத்திரங் களையும், தூண்களையும் கற்காரையால் மூடிப் புறப்பாதிப்புகளிலிருந்து காக்கலாம். இம்முறையில் திண்மக் காப்பு, வெற்றிடக் காப்பு என இரு வகை உண்டு. திண்மக் காப்பில் தீக்காப்புச் செய்யப்பட வேண்டிய உறுப்பு முழுமையும் கற்காரையினால் சூழப்பட்டிருக்கும். ஆனால் வெற்றிடக் காப்பு முறையில் ஒரு மெல்லிய உறை உறுப்பைச் சூழ்ந் திருத்தல் வேண்டும். இரண்டு முறைகளிலும் எஃகு வெளியில் தெரிவதில்லை. கற்காரைக்குத் தீத்தடுப்புத் தன்மை மிகுதி யாதலால் கட்டகத்தில் ஏற்படும் தீயால் எஃகு உறுப்புகள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் திண்மக் காப்பினால் கட்டகத்தின் தன்சுமை மிகுதியாகிறது. தூண்களுக்கு வெற்றிடக் காப்பு முறை சிறந்தது. செங்கற்கள், நுரைக்கசடால் ஆன திண்மைக் கற்கள், சிமெண்ட், கண்ணாம்புப் பூச்சு அல்லது ஜிப்சம் பூச்சு முதலியவை வெற்றிடக் காப்பு முறை யில் பயன்படுகின்றன. எஃகு உறுப்புகள் கூரையின் அடிப்பகுதியில் அமைந்திருந்தால், தொங்கு கூரைகள் அமைத்துத் தீயிலிருந்து பாதுகாக்கலாம். தீத்தடுப்புப் பூச்சுகளைப் பயன்படுத்தியும் தீப்பாதுகாப்புச் செய்யலாம். அரிப்புக் காப்பு செய்யும் முறை, காற்று, நீர் முதலியவற்றால் எஃகு ஆக்சிஜனேற்றம் அடைவதால் அரிப்பு உண்டாகிறது. இது படிப்படியாக மிகுதியாகி, எஃகு தயாரிப்பு 5 றுதியில் உறுப்பின் வெட்டுமுகப் பரப்பு குறைந்து விடுகிறது. எனவே, எஃகு வேலைகளை அரிப் பிலிருந்து பாதுகாக்க வேண்டும். அரிப்புக்காப்பு முறைகள், சுற்றுப்புறக் காற்றில் உள்ள கழிவின் தன்மை, கட்டகம் பயன்படுத்தப்படும் முறை போன்ற வற்றைச் சார்ந்தனவாகும். அரிப்புக்காப்பு செய்ய முதலில் எஃகுறுப்பின் மேற் பரப்பை நன்கு தூய்மை செய்தல் வேண்டும். மேற் பரப்பிலுள்ள இரும்பு ஆக்சைடை நீக்க வேண்டும். கம்பித் துரப்பி, சுரண்டு பொறிகள், சீவல் சுத்திகள் (chip hammers) கொண்டு நீக்கலாம். ஆக்சி அசெட்டி லின் தணலைப் பயன்படுத்தி மேற்பரப்பைச் சூடாக்கி னாலும் இரும்பு ஆக்சைடு எளிதில் நீங்கிவிடும். இதன் பிறகு அரிப்புக் காப்புப் பூச்சுகளை மேற்பரப்பில் பூசலாம். அரிப்புக்காப்புப் பூச்சுகளை இருவகையாகப் பிரிக்கலாம். அவை உலோகப் பூச்சுகள், அலோகப் பூச்சுகள் ஆகும். உலோகத்தை மேற்பரப்பின் மீது தெளித்தல், துத்தநாகம் பூசுதல் (galvanising) முதலி யன முதல் வகையைச் சார்ந்தன. வண்ணப் பூச்சு இரண்டாம் வகையைச் சார்ந்தது. வண்ணப்பூச்சு களில் பலவகை உண்டு. தார்ப் பூச்சுகள் கடல் நீரால் உண்டாகும் அரிப்பை நன்கு தடுக்கவல்லன. சூ.சி.நடேசன் எஃகு தயாரிப்பு காற்றுஉலை இரும்பு, கழிவு இரும்பு இவற்றுடன் வேண்டிய உலோகக்கலவைத் தனிமங்களைச் சேர்த்து எஃகை உருவாக்குதல் எஃகு தயாரிப்பு எனப் படுகிறது. காற்றுஉலை இரும்பில் இரும்பு நீங்கிய பிற தனிமங்கள் 6% இருக்கின்றன. எஃகு தயாரிப் ற பிற்குத் தேவையான மூலப்பொருள்களில் 50% இரும்பு மட்டுமே காற்று உலை உலை இரும்பிலிருந்து கிடைக்கிறது. எஞ்சிய பங்கு. பழுதாகிப்போன இரும்பின் பகுதிகளிலிருந்தும் இரும்புக் கழிவுகளில் இருந்தும் பெறப்படுகிறது. இந்தக் கழிவு இரும்பு காற்றுஉலை இரும்பை விடக் குறைந்த விலையில் கிடைப்பதால் கழிவு இரும்பை எவ்வளவு அதிக மாகப் பயன்படுத்த முடியும் என்பது எஃகு தயாரிக் கும் முறையின் முக்கியமான தன்மையாகக் கருதப் படுகின் றது. ஊற்று இரும்பின் உருகுநிலை 1535°C ஆகும். தற்கேற்ற நீர்மநிலையை உருவாக்குவதற்காக எஃகு தயாரிக்கும் முறைகளில் உலோகக் கலவை ஏறத்தாழ 1550 - 1650°C வரை சூடாக்கப்படுகிறது. இதன் காரணமாக உலையின் உட்புறம் பூசப்படும்